AstroVed Menu
AstroVed
search
search

வசிய பொருத்தம் | Vasiya Porutham In Tamil

dateApril 16, 2020

Vasiya Porutham in tamil - வசிய பொருத்தம்:

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், அது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் அவசியம். அப்பொழுது தான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்படுவர்.

வசிய பொருத்தம் உள்ள தம்பதிகள் வாழ்க்கை முழுவதும் அன்புடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள். வாழ்வில் சஞ்சலம் சலனங்கள் ஏற்படாது

ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு ஏற்ற வசியம் உள்ள ராசியுடன் மட்டும் தான் பொருந்தும்.

பெண்ணின் ராசி எந்த ஆணின் ராசியுடன் பொருந்தும் என்பது கீழே கொடுக்க பட்டுள்ளது, மற்ற ராசிகள் பொருந்தாது.

மேஷத்திற்கு – சிம்மம், விருச்சகம்
ரிஷபத்திற்கு – கடகம், துலாம்
மிதுனத்திற்கு –கன்னி
கடகத்திற்கு – விருச்சிகம், தனுசு
சிம்மத்திற்கு –  மகரம் 
கன்னிக்கு – ரிஷபம், மீனம்
துலாமிற்கு – மகரம்
விருச்சகதிற்கு – கடகம், கன்னி
தனுசுவிற்கு – மீனம்
மகரத்திற்கு – கும்பம்
கும்பத்திற்கு – மீனம்
மீனத்திற்கு – மகரம்

மற்ற ராசிகள் பொருந்தாது.

இந்த பொருத்தம் இருந்தால் தம்பதிகள் இடையே நல்ல ஒற்றுமை நிலவும்.

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்

 


banner

Leave a Reply