AstroVed Menu
AstroVed
search
search

தினப் பொருத்தம் | Dina Porutham In Tamil

dateApril 20, 2020

தினப் பொருத்தம் - Dina Porutham In Tamil:

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது. 

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 என்று வந்தால் தினப் பொருத்தம் உண்டு.  இந்த எண்ணிக்கையில் இல்லாதிருந்தால் அந்த ஜாதகத்தை விலக்கி விடலாம்

ஜென்ம நட்சத்திரம் முதல் 10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம். 7 வது நட்சத்திரம் வதம். 19 வது நட்சத்திரம் அனுஜென்மம். 22  வது நட்சத்திரத்தின் 4 வது பாதம் வைனாசிகம். 27 வது நட்சத்திரம் மிருத்யு நட்சத்திரம். வத வைனாசிக நட்சத்திரத்தை ஒதுக்க வேண்டும்.  27 வது நட்சத்திரம் வேறு ராசியாகில் நீக்க வேண்டும். ஒரே ராசியாகில் உத்தமம்.

ஆண் பெண்ணிற்கு ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம். திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய எட்டு நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களானால் அதாவது இருவர் பிறந்ததும் ஒரே நட்சத்திரமானால் நன்கு பொருந்தும். உத்தமம்.

பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அசுவினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீரிடம், அனுஷம் இந்த 10 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரமானால் மத்திமம்.

மற்ற எட்டு நட்சத்திரங்களாகிய பரணி, ஆயில்யம், சுவாதி,  கேட்டை, மூலம், சதயம், அவிட்டம், பூரட்டாதி ஏக நட்சதிரங்களானால் விலக்க வேண்டும்.
பரணி, பூராடம், ஆயில்யம், ஹஸ்தம், மிருகசீரிஷம், சதயம் இந்த ஆறு நட்சத்திரங்களும் எட நட்சத்திரங்களாக வந்தால் சுபம் என்று சில நூல்களில் கூறப்பட்டு இருக்கின்றது.

திருவாதிரைக்கு உத்திரமும், பூரத்திற்கு அனுஷமும், பூசத்திற்கு சித்திரையும் , புனர்பூசத்திற்கு ஹஸ்தமும், பூரட்டாதிக்கு ரோகிணியும் வத வைனாசிகமானால் சுபம், கெடுதல் இல்லை.

உத்திராடத்திற்கு ரேவதியும், மூலத்திற்கு பூரட்டாதியும், பரணிக்கு பூசமுமானால் வைனாசிக தோஷம் இல்லை. 
ஏக ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது சிறப்பு அல்ல. ஏக ராசியிலும் பரணி, அவிட்டம், பூசம் இவை புருஷ நட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியது ஆனாலும் விலக்க வேண்டியவை.

சதயம், அசுவினி, ஹஸ்தம், சுவாதி, கிருத்திகை, பூராடம், ரோகினி மகம், இந்த எட்டும் ஏக ராசியில் பெண் முந்தையது என்றால் செய்யலாம்.

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


banner

Leave a Reply