Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

ராசி அதிபதி பொருத்தம் | Rasi Athipathi Porutham In Tamil

April 16, 2020 | Total Views : 9,514
Zoom In Zoom Out Print

ராசி அதிபதி பொருத்தம் - Rasi Athipathi Porutham In Tamil

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

வாழையடி வாழையென வம்சம் வளர வேண்டும் என்று தம்பதியரை வாழ்த்தாத பெரியோர்களே இல்லை எனலாம். சந்ததி விருத்திக்கு ராசி அதிபதி பொருத்தம் அவசியம் காண வேண்டும். 

ஒவ்வொரு கிரகத்திற்கும் நட்பு கிரகம், பகை கிரகம், சம கிரகம் என்று உண்டு.

திருமணப் பெண் மற்றும் ஆணின் ராசி அதிபதிகள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக இருத்தல் உத்தமம்.

ஒருவருக்கு சமமாகவும் மற்றொருவருக்கு மித்திரமாகவும் இருந்தாலும் உத்தமம்.

ஒருவருக்கு சத்ருவாகவும் மற்றொருவருக்கு மித்திரமாகவும் இருந்தால் மத்திமம்.

ஒருவருக்கு சமமாகவும் மற்றொருவருக்கு சத்ருவாகவும்  இருந்தால் பொருத்தமில்லை.

இருவருக்கும் சத்ருவானாலும் பொருத்தமில்லை.

உதாரணமாக சூரியனுக்கு சந்திரன், செவ்வாய், குரு நட்பு கிரகங்கள், புதன் சமமான கிரகம்.. சுக்கிரன், சனி, ராகு, கேது பகை கிரகங்கள். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுக்கும் முடிவுகளில் பலன் கிடைக்க இந்த பொருத்தம் தேவை.

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்

banner

Leave a Reply

Submit Comment