AstroVed Menu
AstroVed
search
search

நாடி பொருத்தம் | Nadi Porutham In Tamil

dateApril 17, 2020

நாடி பொருத்தம் - Nadi Porutham In Tamil:

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

வாழ்விற்கு ஆதாரம் ஆரோக்கியமே. திருமணமான தம்பதிகள் தங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்ல முடியும். சந்ததியை பெருக்க முடியும். குழந்தைகளை வளர்க்க முடியும். நாடி பிடித்து மருத்துவர்கள் ஆரோக்கியம் பற்றிக் கூறி விடுவார்கள். நமது ஜோதிட சாஸ்திரத்தில் நாடியை வைத்து இருவருக்கும் ஆரோக்கிய ரீதியாக பொருத்தம் உள்ளதா எனக் கூற இயலும்.
நமது உடலில் வாதம் பித்தம் கபம் என்று மூன்று தத்துவங்கள் செயல்படுகின்றன. நமது ஜென்ம நட்சத்திரம் மூலம் நமது நாடியை நாம் அறிய இயலும். ஒவ்வொரு நட்சத்திரமும் இந்த மூன்று தத்துவத்திற்குள் ஏதாவது ஒன்றில் அமையும். அதன் மூலம் நாடிப் பொருத்தம் கண்டு திருமணப் பொருத்தம் காணலாம்.

பார்சுவ எனப்படும் வாத நாடி:
அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள்

மத்திய நாடி எனப்படும் பித்த நாடி:
பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள்

சமான நாடி அதாவது சிலேத்தும நாடி:
கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள்

பெண், பையன் நட்சத்திரங்கள் வெவ்வேறு நாடியில் இருப்பது நன்று. முக்கியமாக பித்தம் என்ற மத்ய நாடியில் இருப்பது நல்லதல்ல.

கணவன் மனைவி நடத்தும் குடும்ப வாழ்க்கை காரணமாக உடலில் நோய்நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இந்த பொருத்தம் தேவை. இந்த பொருத்தம் முந்தைய காலத்தில் நமது முன்னோர்களால் பார்த்த மிகவும் முக்கிய பொருத்தமாகும், இது பத்து பொருத்ததில் வராமல் இருந்தாலும் அவசியம் பார்க்க வேண்டும்.
 

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


banner

Leave a Reply