AstroVed Menu
AstroVed
search
search

ராசி பொருத்தம் | Rasi Porutham In Tamil

dateApril 17, 2020

ராசி பொருத்தம் - Rasi Porutham In Tamil:

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

இரு மனம் ஒத்த தம்பதியர் வாழ்வு இனிமையாய் இருக்க இரு வீட்டாரின் நல்லுறவும் அவசியம். இது சம்சாரம் என்னும் சாகரத்தில் பாதுகாப்பான முறையில் நீந்துவர்தற்கு உதவும். 

பெண் எந்த ராசியில் பிறந்தவள் என்றும் பையன் எந்த ராசியில் பிறந்தவன் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். 
பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணிக் கொண்டு வந்தால் பையனின் ராசி 6,12,2,8 இப்படியாக வரின் துக்கம், கலக்கம், சுமாரான பலனைத் தரும் வாழ்க்கை அமையும்.

ஆண் ராசியில் இருந்து எண்ணிய பெண் ராசியின் எண்ணிக்கை 6,12,2,8 ஆக வரினும்  மேலே சொன்ன பலன்கள் தான் நடக்கும்.
பெண்ணின் ராசியும் ஆணின் ராசியும் ஒரே ராசியாக இருந்தால் சுபம். 7 வது ராசியாக இருந்தால் சுபம். 7 ஆவது ராசியாக வருவதிலும் கும்ப – சிம்மமும் கடக மகரமும் உதவாது.

1,2,4,5,9,10,11 ஆக வந்தாலும் சுமாராகக் கொள்ளலாம்.


மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


banner

Leave a Reply