AstroVed Menu
AstroVed
search
search
x

Rajju Porutham In Tamil

dateApril 17, 2020

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

ரஜ்ஜு பொருத்தம் என்பதே பத்து திருமண பொருத்ததில் மிகவும் முக்கிய பொருத்தம், பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள், அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர். ரஜ்ஜு என்பது ஐந்து பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை

சிரசு ரஜ்ஜு (தலை) நட்சத்திரங்கள்:
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் 

கண்ட ரஜ்ஜு (கழுத்து) நட்சத்திரங்கள்:
ரோகிணி, திருவாதிரை அஸ்தம்
சுவாதி திருவோணம், சதயம்

உதர (வயிறு) ரஜ்ஜு நட்சத்திரங்கள்:
கார்த்திகை, புனர்வசு, உத்திரம் 
விசாகம், உத்திராடம், பூரட்டாதி 

ஊரு ரஜ்ஜு (தொடை) நட்சத்திரங்கள்:
பரணி, பூசம், பூரம் ஆகியவை 
அனுஷம், பூராடம், உத்திரட்டாதி 

பாத ரஜ்ஜு (கால் பாதம்) நட்சத்திரங்கள்:
அசுவினி, ஆயில்யம், மகம்
கேட்டை,மூலம்,  ரேவதி 
இதில்
சிரசு ரஜ்ஜு என்றால் – கணவன் மரணம்
கண்ட ரஜ்ஜு என்றால் – மனைவி மரணம்
உதர (வயிறு) ரஜ்ஜு என்றால் – புத்திர தோஷம்
தொடை ரஜ்ஜு என்றால் – பண நஷ்டம் 
பாத ரஜ்ஜு என்றால் – பிரயாணத்தில்  தீமை 
மணப்பெண் மணமகன் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் இருப்பதே ரஜ்ஜுப் பொருத்தம் எனப்படும்.

ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


banner

Leave a Reply