AstroVed Menu
AstroVed
search
search

மர பொருத்தம் | Mara Porutham In Tamil

dateApril 17, 2020

மர பொருத்தம் - Mara Porutham In Tamil:

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

இதை விருட்சப் பொருத்தம் என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் அல்லது விருட்சம் உண்டு. அவை பால் உள்ள மரம் மற்றும் பால் அற்ற மரம் என்று பிரித்து அறியப்படுகின்றது  இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது. ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

பால் உள்ள நட்சத்திரம்:
அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு

பால் இல்லாத நட்சத்திரம்:
கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை

பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திரம் பார்க்கப்படும். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராயப்படும்.

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


banner

Leave a Reply