AstroVed Menu
AstroVed
search
search

யோனி பொருத்தம் | Yoni Porutham In Tamil

dateApril 20, 2020

யோனி பொருத்தம் - Yoni Porutham In Tamil:

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

நமது ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. அதன் அடிப்படையில் இந்த பொருத்தம் காணப்படுகின்றது.    ஆண் பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை  இருந்தால் பொருந்தாது. பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. இனிய இல்லறம் நடக்க தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் தேவை.  எனவே தான் இந்த  பொருத்தம் பார்க்கப்படுகின்றது.  இந்தப் பொருத்தம் இருந்தால் தாம்பத்திய உறவு சிறக்கும்.
    
அசுவினியும் சதயமும் -  குதிரை X எருமை
பரணியும்  ரேவதியும்  -  யானை X சிங்கம்
கார்த்திகையும் பூசமும் -  ஆடு X குரங்கு
ரோகிணியும் மிருகசீரிஷமும்- நாகம் X கீரி
மூலமும்  திருவாதிரையும் - நாய்  X மான்
ஆயில்யமும் புனர்பூசமும் – பூனை X எலி
மகமும் பூரமும்  - பெருச்சாளி X பூனை
உத்திரமும் உத்திரட்டாதியும் – பசு X புலி
சுவாதியும் அஸ்தமும் – எருமை X குதிரை
விசாகமும் சித்திரையும் – புலி  X பசு
கேட்டையும் அனுஷமும் – மான் X நாய்
பூராடமும் திருவோணமும் – குரங்கு X ஆடு
பூரட்டாதியும்  அவிட்டமும் – சிங்கள் X யானை
உத்திராடமும் கீரியும் X பாம்பு

இவைகளில் பகை உள்ள ஆண் பெண் நட்சத்திரங்காலி சேர்க்கக் கூடாது

இவற்றில், பொருத்தம் இல்லாதவை. இவைகள் ஜென்ம விரோதிகள்

பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி

மேலே சொல்லப்பட்ட இரண்டு நட்சத்திரங்களிலும் முதல் நட்சதிரம் ஆணாகவும் இரண்டாவதை  பெண்ணாகவும் அறிந்து விவாகம் செய்தல் நல்லது, ஒரே இனமாக யோனி இருப்பதால் தம்பதிகளுக்கு ஒற்றுமை அதிகம் உண்டு.  உதாரணமாக அசுவினி சதயம் இவற்றில் அசுவினி ஆணாகவும் சதயம் பெண்ணாகவும்  இரண்டும் பொருந்தி உள்ளது. இதைப் போல பார்த்துச் செய்ய வேண்டும்.

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


banner

Leave a Reply