AstroVed Menu
AstroVed
search
search
x

Vethai Porutham In Tamil

dateApril 17, 2020

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

வேதை என்றால் ஒன்றுகொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது. வேதை பொருத்தம் என்பது, மாங்கல்ய பலத்தை குறிப்பது. கீழே எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் வேதை என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று வேதை இல்லாமலிருத்தலே  வேதைப் பொருத்தம் எனப்படும்.

அசுவினிக்கு  - கேட்டை வேதை ஆகும்.
பரணிக்கு – அனுஷம் வேதை ஆகும்
கார்த்திகைக்கு – விசாகம் வேதை ஆகும்
ரோகிணிக்கு- சுவாதி வேதை ஆகும்
திருவாதிரைக்கு – திருவோணம் வேதை ஆகும்
புனர் பூசத்திற்கு – உத்ராடம் வேதை ஆகும்
பூசத்திற்கு  - பூராடம் வேதை ஆகும்
ஆயில்யத்திற்கு – மூலம் வேதை ஆகும் 
மகத்திற்கு – ரேவதி வேதை ஆகும்
பூரத்திற்கு – உத்ரட்டாதி வேதை ஆகும்
உத்திரத்திற்கு  - பூரட்டாதி வேதை ஆகும்
அஸ்தத்திற்கு  – சதயம் வேதை ஆகும்.

மேலே உள்ளவை ஒன்றுகொன்று  வேதை ஆகும். இந்த நட்சத்திர இணைவு அதமம்.

தவிர மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை உள்ளதால் இவைகளும் பொருந்தாது. இந்த நட்சத்திரக் காரர்களை இணைக்கக் கூடாது.

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்

 


banner

Leave a Reply