AstroVed Menu
AstroVed
search
search

மகேந்திர பொருத்தம் | Mahendra Porutham In Tamil

dateApril 16, 2020

மகேந்திர பொருத்தம் - Mahendra Porutham in tamil:

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக  பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.

பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.

திருமண பந்தம் இனிமையுடன் இருக்கவும் இல்லறம் இனிதே  நடக்கவும் சம்பத்து மிகவும் அவசியம். அதிலும் புத்திர சம்பத்து அவசியம். இந்த பொருத்தம் இருந்தால் தம்பதிகளுக்கு சம்பத்து கொடுக்கும். அதுமட்டுமின்றி புத்திரர்கள் மூலம் சம்பத்துக்கள் பெருகும்.

பெண் நட்சத்திரம் முதல், ஆண் நட்சத்திரம் முடிய கூட்டி வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமைந்தால், மகேந்திரப் பொருத்தம் உள்ளது எனலாம். இந்த பொருத்தம் சிறப்பாக இருந்தால் தான் தம்பதிகளுக்கு சம்பத்தை கொடுக்கும்.

மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


banner

Leave a Reply