நமது தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் எனக் கருதப்படும் நவக்கிரகங்களுக்குள், வியாழன் கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் தனிச் சிறப்பு வாய்ந்த இடம் வகிக்கிறார். அந்த 9 கோள்களுக்குள், அதிக நற்பலன்களைத் தரும் பெரும் சுப கிரகமாகவும் விளங்குகிறார். தான் உள்ள இடத்திலிருந்து, 5, 7 மற்றும் 9 ஆம் வீடுகளை நோக்கும் இவரது பார்வை என்பது, பலவகைத் தீமைகளிலிருந்து நமக்குப் பாதுகாப்பு அளித்து, பல நன்மைகளையும் அருள வல்லது. எனவே, ஒருவரது ஜனன கால ஜாதகத்தில் குருவின் அமைப்பு, பின்னர் அவரது பெயர்ச்சி போன்றவை, அவரது வாழ்க்கைப் பாதையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன, என்பதில் ஐயமில்லை.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
குரு பகவான், சுமார் ஒரு வருடத்திற்கு ஒரு முறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இவ்வாறு இவர், வரும் நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் காரணமாக மக்களது வாழ்க்கையில் இவர், பல மாற்றங்களைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.
12 ராசிகள் ஒவ்வொன்றிலும் பிறந்தவர்களுக்கு, இந்த குரு பெயர்ச்சி என்ன பலன்களை அளிக்கும் என்பதை நாம் இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம். அத்துடன், எந்த ராசிகளுக்கு ராஜ யோகம் எனப்படும் மிகச் சிறந்த நன்மைகளை குரு பகவான் அருளப் போகிறார் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மேஷம்
அன்பார்ந்த மேஷ ராசி நேயர்களே! இந்தப் பெயர்ச்சியின் மூலம், மேஷ ராசிக்கு 9 ஆம் வீடான தனுசு ராசியில் குரு பிரவேசிக்கிறார். சுப கிரகமான குருவிற்கு, இது, நலம் விளைவிக்கும் இடமாகும்.
இதனால், இந்த ராசி அன்பர்களுக்கு, நேர்மை, நல்லொழுக்கம், அறிவுத் திறன், தைரியம் மேம்படும். மேற்படிப்பு, ஆராய்ச்சி முயற்சிகள் கைகூடும். தொடர்புகள் அதிகரிக்கும்; உங்கள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசும்; வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியமும் ஏற்படும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குருமார்கள் போன்றவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கும், ஏற்ற காலமாக இது அமையும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
ரிஷபம்
அன்பார்ந்த ரிஷப ராசி நேயர்களே! இந்தப் பெயர்ச்சியின் மூலம், ரிஷப ராசிக்கு 8 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். ‘அஷ்டம ஸ்தானம்’ எனப்படும் இது, குருவிற்கு சாதகமான இடம் அல்ல எனலாம்.
இந்த குரு பெயர்ச்சி காலத்தில், இந்த ராசி அன்பர்களின் வாழ்க்கையில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறக் கூடும். தடைகள், ஏமாற்றங்கள், தோல்விகள் போன்றவற்றை நீங்கள் சந்திக்க நேரலாம். உடல்நிலையையில் பின்னடைவும் ஏற்படலாம். செலவுகளும், பண விரயங்களும் உண்டாகலாம். இந்த நேரத்தில், உங்கள் கடும் உழைப்பும், பிறர் ஆதரவும் ஓரளவு ஆறுதல் தரக்கூடும். குறிப்பாக, ஆரம்ப காலத்தில் நிலவும் இது போன்ற நிலை, பின்னர் சற்றே மேம்படலாம். எனினும், ரிஷப ராசி அன்பர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும், பரிகாரங்களையும் மேற்கொள்வது நல்லது. மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
மிதுனம்
அன்பார்ந்த மிதுன ராசி நேயர்களே! இந்தப் பெயர்ச்சியின் மூலம், மிதுன ராசிக்கு 7 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, மிதுன ராசி அன்பர்களுக்கு சாதகமாக அமையும் எனலாம்.
இந்தப் பெயர்ச்சி, திருமண வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடும். கணவன், மனைவி இடையே இணக்கம் ஏற்படும்; குடும்ப உறவுகளும் மேம்படும். பொதுவாகவே, ஆண்களுக்கு, பெண்களிடம் ஈர்ப்பு ஏற்படும். தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டாலும், தொழில், பொதுவாக வெற்றிகரமாக அமையும். பெரிய மனிதர்கள் சிலரின் தொடர்பு ஏற்படக் கூடும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள், பெரும்பாலும் வெற்றி பெறும். நன்கு பகுத்தறிந்து பார்க்கும் திறனுடன், நீங்கள் மனமகிழ்ச்சி தரும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
கடகம்
அன்பார்ந்த கடக ராசி நேயர்களே! இந்தப் பெயர்ச்சியின் மூலம், கடக ராசிக்கு 6 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இந்த மாற்றத்தின் காரணமாக, கடக ராசி அன்பர்கள், பெரும் நற்பலன்களை எதிர்பார்க்க இயலாது எனலாம்.
செலவுகள் அதிகரிக்கும்; இது, சேமிப்புகளைக் கரைத்து, பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தக் கூடும். எனவே, எதிர்காலத்திற்காக சிறிதாவது சேமிக்க வேண்டிய நேரம் இது. உங்கள் பணித் துறையும், பின்னடைவுகளை சந்திக்கலாம். ஆரம்ப காலம், உடல்நிலை பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கு மிகவும் ஏற்றதாக அமையலாம். எதிரிகள், பகை, கடன் போன்ற தொல்லைகள் கூட, விலகிப் போய்விடலாம். கணவன், மனைவி உறவும் மேம்படலாம். எனினும், இது போன்ற நன்மைகள் பல விளைவது, இந்தப் பெயர்ச்சி காலத்தின் துவக்கத்தில் மட்டும் தான். பின்னர், ஆரோக்கியம் முதலான பலவற்றிலும் நிலைமை தலைகீழாக மாறி, உங்களுக்குப் பல துன்பங்கள் விளையலாம். எனவே, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
சிம்மம்
அன்பார்ந்த சிம்ம ராசி நேயர்களே! இந்தப் பெயர்ச்சியின் மூலம், சிம்ம ராசிக்கு 5 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, சிம்ம ராசி அன்பர்களுக்கு, குரு நன்மைகள் அருளும் இடமாக அமையும் எனலாம்.
கடந்த காலத்தில் செய்த நல்ல செயல்களினால் விளையும் நற்பலன்களை, இப்பொழுது இவர்கள் அனுபவிக்க முடியும். நிதிநிலை உயரும். தொழில் லாபம் தரும். புத்தி, நினைவாற்றல், அறிவுத் திறன், கற்பனை உணர்ச்சி ஆகியவை மேம்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்; வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இசை நடனம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியமும் ஏற்படலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆதாயம் தரும். மூத்த சகோதர, சகோதரிகள், மருமகன், மருமகள் போன்ற உறவுகளுடன் நெருக்கம் உருவாகும். பெண்களால் ஆதாயமும், நண்பர்கள், சமுதாயம் போன்றவற்றிலிருந்து அங்கீகாரமும் கிடைக்கும். பொதுவாக வாழ்க்கை, அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
கன்னி
அன்பார்ந்த கன்னி ராசி நேயர்களே! இந்தப் பெயர்ச்சியின் மூலம், கன்னி ராசிக்கு 4 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இதன் காரணமாக, சிம்ம ராசி அன்பர்கள் பல சங்கடங்களை சந்திக்க நேரலாம்.
இந்தக் காலகட்டத்தில், சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடைபெறலாம். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். கல்வித் துறையிலும், உயர்கல்வி தொடர்பாகவும் பல பிரச்சினைகள் உருவாகலாம். பணவரவு திருப்தி தராமல் போகலாம்; அதே நேரம், செலவுகள் மிகக் கடுமையாகவும் இருக்கலாம். வசிக்கும் வீட்டை பழுதுபார்ப்பதற்கோ, புதிப்பிப்பதற்கோ அதிக பணம் செலவிட நேரலாம். எனவே, வாகனங்கள், வீடு, நிலம் போன்றவற்றை வாங்குவதற்கோ, விற்பதற்கோ, இது ஏற்ற தருணம் அல்ல. பணித்துறையிலும் பிரச்சினைகள் எழலாம். அயல்நாடு தொடர்பான முயற்சிகளும், வெற்றி தராமல் போகலாம். இந்த நேரத்தில் உங்கள் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். மனநிறைவு இல்லாமல் போவதால், இந்த குரு பெயர்ச்சி காலம், பொதுவாக அமைதியும், சந்தோஷமும் இல்லாத ஒன்றாகவே அமையக் கூடும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
துலாம்
அன்பார்ந்த துலாம் ராசி நேயர்களே! இந்தப் பெயர்ச்சியின் மூலம், துலாம் ராசிக்கு 3 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இதன் விளைவாக, துலாம் ராசி அன்பர்கள் மிதமான, கலவையான பலன்களையே எதிர்பார்க்கலாம்.
வழக்கமான இவர்களிடம் காணப்படும் துணிவு, இப்பொழுது குறையலாம். இவர்களது தகவல் தொடர்புத் திறன், பேச்சு போன்றவையும் சுமாராகவே இருக்கக் கூடும். உடன் பணியாற்றுபவர்களிடமிருந்து, புரிதலும், ஒத்துழைப்பும் கிடைக்காமல் போகலாம். இளைய சகோதர, சகோதரிகளுடனும், அண்டை அயலார்களுடனும் உறவு சுமாராக இருக்கும். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு, இது சாதகமான நேரமாக இருக்காது. ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், உளவியல் போன்ற துறைகளில் இருந்தால், கால நிலைக்கு ஏற்றவாறு, இவற்றில் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால், இது தொடர்பான சில பிரச்சினைகள் ஏற்படலாம். பொதுவாக, சாதகமாக இல்லாத இந்தக் காலகட்டத்தில், இவர்கள் நேர்மையாக நடந்து கொள்வது நலம் தரும். அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை இருந்தால், இந்த நேரத்திலும் இவர்களால் வெற்றிகளை ஈட்ட முடியும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
.
விருச்சிகம்
அன்பார்ந்த விருச்சிக ராசி நேயர்களே! இந்தப் பெயர்ச்சியின் மூலம், விருச்சிக ராசியிலிருந்து நகர்ந்து, அதற்கு 2 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இதன் விளைவாக, விருச்சிக ராசி அன்பர்கள் சில வரவேற்கத்தக்க பலன்களை எதிர்பார்க்கலாம்.