Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 (Meenam Rasi Guru Peyarchi Palangal Tamil 2019 to 2020)

October 4, 2019 | Total Views : 8,397
Zoom In Zoom Out Print

மீன ராசி அன்பர்களே! ஆன்மீகம்,

அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், மீன ராசிக்குப் 10 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, சுப கிரகமான குரு, சாதகமாக அமையும் இடமல்ல. இந்த வீட்டிலிருந்து இவர், செல்வம், குடும்பம், குரல் மற்றும் பேச்சு, சிந்தனைகள், ஆரம்பக் கல்வி, உடமைகள், சொத்து, ஆடை, கோபம், உணவு ஆகியவற்றைக் குறிக்கும் 2 ஆம் வீட்டையும்; வசதிகள், தாய், கல்வி, இல்லம், நிலம், வீடு, மனை வாகனம், நண்பர்கள், உறவினர்கள், ஆடம்பரம் ஆகியவற்றைக் குறிக்கும் 4 ஆம் வீட்டையும்; நோய், கடன், போட்டிகள், பிரச்சினைகள், சந்தேகம், தோல்வி, துக்கம், பலவீனம் ஆகியவற்றைக் குறிக்கும் 6 ஆம் வீட்டையும், பார்க்கிறார். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

                                           2019 குரு பெயர்ச்சி பற்றிய முழு விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த குரு பெயர்ச்சி, உங்கள் பணித் துறையில், சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற, சில கடும் செலவுகளால் உங்கள் சேமிப்பு கரையக் கூடும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கும், நீங்கள் தள்ளப்படலாம். போட்டிகளும் இப்பொழுது அதிகரிக்கும். புதிதாக, சொத்து வாங்கல், விற்றல் போன்றவற்றிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உங்கள் உடல்நிலையும், சற்றே கவலையளிப்பதாக இருக்கக் கூடும். சிறிய பிரச்சினைகளைக் கூட, உடனடியாக கவனித்து விடவும். நீங்கள் இப்பொழுது சந்திக்கும் சங்கடங்கள் ஏமாற்றம் தருவதாக அமைந்தாலும், பின்னர் அவை தீர்ந்து போகும் வாய்ப்புள்ளது. 

பெயர்ச்சி காலம் செல்லச் செல்ல, குழந்தைகளின் ஆரோக்கியமும், அவர்களுடனான உங்கள் உறவும், முன்னேற்றம் அடையும். முன்னோர்கள் சொத்தை அடையும் வாய்ப்பும், சிலருக்குக் கிடைக்கும். உங்கள் கடும் உழைப்பும், பிறர் அளிக்கும் உதவியும் பெயர்ச்சி காலத்தின் பிற்பகுதியில் துணைபுரியும். பொதுவாக, இந்த குரு பெயர்ச்சி காலத்தின் முற்பகுதியை விட, அதன் பிற்பகுதி, பலவகையிலும் ஆறுதல் அளிப்பதாக அமையக்கூடும். 

மீனம் ராசி - வேலை மற்றும் தொழில்

வேலையில் பின்னடைவு ஏற்படக்கூடும். சக ஊழியர்கள், கீழ் பணியாற்றுபவர்கள், உயரதிகாரிகள் போன்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது. இது சூழ்நிலையை பாதித்து, உங்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தும். பதவி, ஊதிய உயர்வுகள் போன்றவற்றை இப்பொழுது எதிர்பார்க்க முடியாது. தொழிலதிபர்களுக்கு இந்த பெயர்ச்சியின் முற்பகுதி சங்கடங்கள் நிறைந்ததாகவே இருந்தாலும், பின்னர் நிலைமை முன்னேற்றம் அடையும். சொத்து வாங்கல், விற்றல் தொழிலிலும் தேக்க நிலையே காணப்படும் என்பதால், அதில் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். 

பரிகாரம்: சூர்ய ஹோமம்

மீனம் ராசி - நிதி

இந்த நேரத்தில் ஏற்படும் பெரும் செலவுகளால், நிதிநிலை திருப்திகரமாக இருக்காது. மருத்துவ செலவுகள் கடுமையாக இருக்கலாம். காப்பீட்டுத் தொகையைப் பெறுவதிலும், சிக்கல் எழலாம். சொத்து, வாங்குவது விற்பது போன்றவற்றிலும் நஷ்டம் ஏற்படலாம். வருமானம் சாதாரணமாகவே இருக்கும் இந்த காலகட்டத்தில், நீங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். 

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் மற்றும் ஸ்ரீசூக்தம் ஹோமம் 

மீனம் ராசி - குடும்பம்

குடும்பத்தினருடன் சுமுக உறவு இல்லாமல் போகலாம்; இதனால் ஆழ்ந்த மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்துடன் அதிக நேரத்தை, மகிழ்ச்சியாகச் செலவழிக்க முயற்சி செய்யுங்கள்; இதனால் குடும்ப இணக்கம் மேம்படும். பெயர்ச்சியின் ஆரம்ப காலத்தில், துணைவரின் மகிழ்ச்சிக்காக அதிக நேரம் ஒதுக்குவதும் நன்மை தரும். குழந்தைகளுடன் உறவு திருப்திகரமாக இருக்கும். எனினும், தந்தையுடனான உறவு சுமாராகவே இருக்கும். 

பரிகாரம்: பிரத்யேக லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் துர்கா சூக்தம் ஹோமம் (தெய்வீக பாதுகாப்புக்கான ஹோமம்) 

மீனம் ராசி - கல்வி

ஆரம்ப மற்றும் உயர் கல்வி கற்கும் மாணவர்கள், தங்கள் படிப்பில் போராட வேண்டியிருக்கும். சில மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பிய கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றில் இடம் கிடைக்காமல் போகலாம். எனவே, இதில் தீவிர முயற்சி அவசியம். வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்பும், இந்த பெயர்ச்சியின் முற்பகுதியில் சுமாராகவே உள்ளது; ஆனால், பிற்பகுதியில் இதில் வெற்றி கிடைக்கக்கூடும். பொதுவாகவே, முற்பகுதி காலத்தை விட, பிற்பகுதி காலம் கல்வி முன்னேற்றத்திற்குச் சிறந்தது எனலாம். 

பரிகாரம்: சந்திர ஹோமம்

மீனம் ராசி - காதல் மற்றும் திருமணம் 

துணை அல்லது துணைவரிடம் நீங்கள் கொண்டிருக்கும் அன்பு, ஆரம்பத்தில் சுமாராக  இருந்து, பின்னர் மேம்படும். கணவன் மனைவி உறவும் பிற்பகுதியில், இணக்கமாக இருக்கும். வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த பெயர்ச்சியின் பிற்பகுதியில், சாதகமான வாய்ப்புகள் உருவாகும்.

பரிகாரம்: பார்வதி அழகு ஹோமம்

மீனம் ராசி - ஆரோக்கியம்

உங்கள் உடல்நிலை மனநிறைவு தராது. சில நோய்களும், கோளாறுகளும் கூட இப்பொழுது உங்களைத் தாக்கக்கூடும். குறிப்பாக, கண்கள், முகம், தொண்டை, இதயம், தொப்புள் தொடர்பாக மிகுந்த கவனம் தேவை. தொண்டையில் சதை வளர்வது, அதிக ரத்த அழுத்தம், அஜீரணம், வயிற்றுப் புண் போன்றவை குறித்தும் எச்சரிக்கையாக இருக்கவும். ஆனால் மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பவர்கள், குரு பெயர்ச்சியின் பிற்பகுதியில் விரைவாக குணமடைய வாய்ப்புள்ளது.  

பரிகாரம்: காயத்ரி ஹோமம் (நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்விற்கான ஹோமம்)

எளிய பரிகாரங்கள்

  • பகவான் மகா விஷ்ணுவை வழிபடவும் 
  • ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் கேட்கவும் 
  • உடல்நிலை அனுமதித்தால், வியாழக்கிழமைகளில் உபவாசம் இருக்கவும் 
  • நன்கு கற்றுணர்ந்த அறிஞர்களிடம் மரியாதை குறைவாக நடக்காமல் இருக்கவும் 
  • பெற்றோர்கள், வயதில் மூத்தவர்களிடம் மரியாதையுடன் பழகவும்
  • பேச்சு, எண்ணம் இரண்டிலும் எதிர்மறைகளைத் தவிர்த்து விடவும் 
banner

Leave a Reply

Submit Comment