Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search

விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 (Viruchigam Rasi Guru Peyarchi Palangal Tamil 2019 to 2020)

October 4, 2019 | Total Views : 5,808
Zoom In Zoom Out Print

விருச்சிக ராசி அன்பர்களே!

ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், விருச்சிக ராசிக்கு 2 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, சுப கிரகமான குரு, நன்மைகள் செய்யும் இடமாக அமைகிறது. இந்த வீட்டிலிருந்து இவர், நோய், கடன், எதிரிகள் ஆகியவற்றைக் குறிக்கும் 6 ஆம் வீட்டையும்; எதிர்பாராத ஆதாயங்கள் மற்றும் தடைகளைக் குறிக்கும் 8 ஆம் வீட்டையும்; வேலை, செயல்பாடுகள், கௌரவம் ஆகியவற்றைக் குறிக்கும் 10 ஆம் வீட்டையும், பார்க்கிறார்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தொடக்கத்தில் நிதிநிலை சாதாரணமாகவே இருக்கும். தடைகளும், தாமதங்களும் கொண்ட இந்த நேரத்தில், திடீர் லாபங்கள், ஆதாயங்கள் போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. ஆனால், பின்னர் நிலைமை மெதுவாக சீரடையும். அப்பொழுது வளர்ச்சி, எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், பொருளாதார முன்னேறங்கள் போன்றவை ஏற்படக்கூடும். வேலை வாய்ப்புகள் உருவாகும்; பணியில் நல்ல பலன்கள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ், கௌரவம் பெருகும். குடும்பத்தினருடனான உறவு, சுமுகமாக இருக்கும். ஆரம்பத்தில் சுமாராகவே இருக்கும் உங்கள் உடல் நிலையும், மெது மெதுவே மேம்பாடு அடையும். இப்பொழுது உங்களுக்கு ஆன்மீக நாட்டமும் உண்டாகும்.

விருச்சிகம் ராசி - வேலை மற்றும் தொழில்

வேலையில் உங்களுக்குப் பல பயனுள்ள அனுபவங்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் உங்கள் வேலைத்திறன் மேம்படும்; இதனால் பல நன்மைகளும், முன்னேற்றமும் ஏற்படும். ஆனால், அளவிற்கு அதிகமான தன்னம்பிக்கை கொள்ளாதீர்கள்; இது, உங்கள் பலவீனங்களை மறைத்து, வேலை தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கி விடக்கூடும். எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம்: காலபைரவ யந்திரம்

விருச்சிகம் ராசி - நிதி

தொடக்க காலத்தில், நீங்கள் சாதாரணமான பொருளாதார நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆனால் பின்னர் வரும் காலகட்டத்தில் நிதிநிலை மேம்படும்; எனினும், செலவுகளும் அதிகரிக்கும். இதன் காரணமாக, சிலருக்கு, திருப்திதராத சூழ்நிலை உருவாகக் கூடும். எனினும், ஊக வணிகம் போன்றவற்றில் பணம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அவற்றில் அளவுக்கு அதிகமாக ஈடுபடுவது நல்லதல்ல. இந்த நேரத்தில், செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது, நிதிநிலையை சீராக பராமரிக்க உதவும்.

பரிகாரம்: குரு பகவான் ஹோமம்

விருச்சிகம் ராசி - குடும்பம்

குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். குழந்தைகளுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். ஏதாவது சிறு பிரச்சினைகள் தலை தூக்கினாலும், அதைத் திறமையாக சமாளித்து விடுவீர்கள். இதனால், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் செல்லும்.    

பரிகாரம்: நவக்கிரக ஹோமம்

 

விருச்சிகம் ராசி - கல்வி

தொடக்க காலம், கல்விக்குச் சாதகமாக இருக்கும்; எனினும் விரைவிலேயே சில சங்கடங்கள் தோன்றலாம். மாணவர்கள் கடுமையாகப் பாடுபட்டு, ஊக்கத்துடன் படித்தால், தங்கள் அறிவாற்றலையும் பெருக்கிக் கொள்ளலாம்; தேர்வுகளில் மிகச் சிறந்த வெற்றிகளையும் ஈட்டலாம். அயல்நாட்டுக் கல்வியில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள், குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலத்திலேயே, அதற்கான கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்; ஏனெனில், தொடரும் காலம் இதற்கு அவ்வளவு சாதகமாக இருக்காது.  

பரிகாரம்: புதன் ஹோமம்

விருச்சிகம் ராசி - காதல் மற்றும் திருமணம் 

குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலத்தில்,உங்கள் துணையிடம் அன்பையும், காதலையும் தாராளமாக வெளிப்படுத்துவீர்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, இது பெரிதும் குறைந்து விடக் கூடும். ஆகவே, இது குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. துணைவருடன் எண்ணங்களை எப்பொழுதும் சுமுகமாகப்  பரிமாறிக் கொள்வதால், உறவுப் பிரச்சினைகள் தீரும் வாய்ப்புள்ளது. திருமணத்திற்கு வரன் அல்லது துணை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், தொடக்க காலம் சாதகமாக இருக்காது; எனினும் போகப் போக நல்ல பலன்கள் ஏற்படும்.  

பரிகாரம்: சுக்கிர ஹோமம்

விருச்சிகம் ராசி - ஆரோக்கியம்

இந்த பெயர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், நீங்கள், உங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறிய உபாதைகள் கூட, சரியாக கவனிக்கப்படாவிட்டால், மருத்துவமனையில் அனுமதி, அறுவை சிகிச்சை என்ற நிலைக்கு அழைத்துச் சென்று விடலாம். எனினும், பின்னர் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், வயிறு, இடுப்பு, கால்களில் எழும் பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கை தேவை. 

பரிகாரம்: சனி ஹோமம்

எளிய பரிகாரங்கள்

  • பகவான் தக்ஷிணாமூர்த்தியை வழிபடவும்; குறிப்பாக இந்த வழிபாட்டை, வியாழக்கிழமைகளில் செய்யவும் 
  • ‘ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ’ என்ற மந்திரத்தை ஜபிக்கவும்
  • இந்த மந்திரத்தை, வியாழக்கிழமைகளிலோ அல்லது புனர்பூசம், பூரட்டாதி, விசாகம் நட்சத்திர நாட்களிலோ, 108 முறை ஜபிக்கவும்  
  • நெற்றியில் தினமும் அல்லது வியாழக்கிழமைகளிலாவது, சந்தனப் பொட்டு வைத்துக் கொள்ளவும் 
banner

Leave a Reply

Submit Comment