Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 (Simha Rasi Guru Peyarchi Palangal Tamil 2019 to 2020)

October 4, 2019 | Total Views : 7,325
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி அன்பர்களே!

ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமைஅன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், சிம்ம ராசிக்கு 5 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, சுப கிரகமான குரு, நன்மைகள் தரும் இடமாகும். இந்த வீட்டிலிருந்து இவர், பாக்கியம், மதம், ஆன்மிகம் ஆகியவற்றைக் குறிக்கும் 9 ஆம் வீட்டையும்; லாபம், ஆதாயம், விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றைக் குறிக்கும் 11 ஆம் வீட்டையும்; ஒருவரது திறன், குணாதிசயம், வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கும் 1 ஆம் வீட்டையும் பார்க்கிறார்.  

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

2019 குரு பெயர்ச்சி பற்றிய முழு விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இதன் காரணமாக கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியமும் ஏற்படலாம். உங்கள் புத்தி, நினைவாற்றல், அறிவுத் திறன், கற்பனை உணர்ச்சி ஆகியவை மேம்படும். உங்களிடமிருந்து அன்பும் பெருகும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த நல்ல செயல்களினால் விளையும் சாதகமான பலன்களை, இப்பொழுது நீங்கள் அனுபவிக்க முடியும். நிதிநிலையும் மேம்படும். தொழில் லாபம் தரும்.  

வெளிநாட்டு நண்பர்கள், கூட்டாளிகள் தொடர்பு ஏற்படும். இது குறித்து, நீங்கள் சில பணிகளையும் மேற்கொள்ளக்கூடும். உறவுகள், குறிப்பாக, மூத்த சகோதர, சகோதரிகள், மருமகன், மருமகள் போன்றவர்களுடனான உறவுகள் சிறந்து விளங்கும். பெண்களால் ஆதாயம் கிடைக்கும்; நண்பர்கள், சமுதாயம் போன்றவற்றிலிருந்து அங்கீகாரம் கிடைக்கும். இசை நடனம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்படும். பொதுவாக, வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.  

சிம்மம் ராசி - வேலை மற்றும் தொழில்

வேலைத் துறை சாதாரணமாகத் தான் இருக்கும்; இந்தப் பெயர்ச்சி காலத்தில் நீங்கள், இது தொடர்பான பெரிய முன்னேற்றங்களைக் காண இயலாது. தொழிலைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் நீங்கள் போராட வேண்டியிருக்கும்; சில பின்னடைவுகளும், கூட்டாளிகளுடன் பிரச்சினைகளும் ஏற்படலாம். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலம், புது தொழில்கள் துவங்குவதற்கு ஏற்றதல்ல; அவ்வாறு துவக்கப்படும் தொழில் முயற்சிகள் வெற்றியடையாமல் போகலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல, தொழில் முன்னேற்றம் காணும். 

பரிகாரம்: ஹயக்ரீவ யந்திரம்

சிம்மம் ராசி - நிதி

பொருளாதாரத்தில் பலன்கள் கலவையாக இருக்கும் என்றாலும், ஓரளவு நன்றாகவே இருக்கும் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் அதிகமாக வரும் வருமானம், போகப் போகக் குறையக் கூடும். பிற்பகுதியில் பெரும் செலவுகளும் ஏற்படக்கூடும். ஆகவே, பெயர்ச்சியின் பிற்காலத்தில் ஓரளவு நல்ல பணப்புழக்கம், பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெற, செலவுகளைக் கட்டுப்படுத்தியே தீர வேண்டும். எனினும் இந்த நேரத்தில், சில அதிர்ஷ்டங்களும், எதிர்பாராத லாபங்களும் கிடைக்கலாம். எது எப்படி இருந்தாலும், குரு பெயர்ச்சி காலம் முழுவதும் செலவுகளை சமாளிக்கக்கூடிய அளவு, வருமானம் வந்து கொண்டே இருக்கும். கவலை வேண்டாம். 

பரிகாரம்: லக்ஷ்மி நாராயண யந்திரம்

சிம்மம் ராசி - குடும்பம் 

பொதுவாக குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வும், ஒற்றுமையும் நன்றாக இருக்கும்; எனினும் சிலருடன், சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி, அதை இனிமையாகச் செலவிட்டால், வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். அனைவருக்கும் மனநிறைவு ஏற்படும். உறவுப் பிரச்சினைகள் எது ஏற்பட்டாலும், அதைத் திறமையாகச் சமாளித்தால், உறவுகள் வலுப்படும்.

பரிகாரம்: பிரத்யங்கிரா தேவி ஹோமம்

சிம்மம் ராசி - கல்வி

கல்வியில் நல்ல முன்னேற்றம் காணலாம்; சிலருக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆகவே, இந்த நேரத்தில் வெளிநாட்டுப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தால், அவற்றில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். இந்த காலத்தில் உங்கள் புத்திசாலித்தனமும், வேகமாக சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும்; இவை போட்டிகளிலும், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற உதவும். கல்விக்கான உதவித் தொகையை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு, அதுவும் கிடைக்கக்கூடும். ஆராய்ச்சி மாணவர்களும் முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் இந்த பெயர்ச்சியின் பிற்பகுதியில், முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக, மாணவர்கள் தைரியமாகச் செயல்பட வேண்டியது அவசியம்.  

பரிகாரம்: காலபைரவ யந்திரம்

சிம்மம் ராசி - காதல் மற்றும் திருமணம் 

குரு பெயர்ச்சியின் தொடக்கத்தில், திருமணம் நடைபெறுவதில், தடைகளும், சிக்கல்களும் நேரலாம். ஆனால், காலப்போக்கில், விரைவிலேயே, தடைகள் நீங்கி, திருமணங்கள் நடைபெறும். ஆகவே, வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டிருப்பவர்கள், அது எதிர்பார்த்தபடி நிறைவேற, இந்தக் காலத்தின் பிற்பகுதிக்காகக் காத்திருங்கள். உங்கள் துணையிடம் நீங்கள் அன்பு செலுத்தினால், உங்களுக்கு அது திரும்பக் கிடைக்கும். இதன் மூலம் மணவாழ்க்கையை இனிமையாக நடத்த முடியும்.   

பரிகாரம்: துர்கா ஹோமம்

சிம்மம் ராசி - ஆரோக்கியம்

ஆரோக்கியம் சுமாராக இருக்கும். நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால், அதை சிறப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். அப்படியே ஏதாவது பிரச்சினைகள் எழுந்தாலும், அதைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. விரைவிலேயே அவை தானாகவே சரியாகி விடும். தவிர, மருத்துவர்களின் சரியான ஆலோசனையும் இந்த நேரத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.

பரிகாரம்: குஷ்மந்தா ஹோமம் (கர்ம வினைகளைப் போக்கும் ஹோமம்)

எளிய பரிகாரங்கள்

  • இந்த குரு பெயர்ச்சி காலத்தில், இறைவன் மீது பரிபூரண நம்பிக்கை வைக்கவும் 
  • சனிக்கிழமைகளில், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர'த்தைப் பாராயணம் செய்யவும் அல்லது கேட்கவும்
  • குரு பகவானுக்கு உரிய மந்திரத்தை, வியாழக்கிழமைகளில், 108 முறை ஜபிக்கவும்
  • புரோகிதர்கள், கற்றறிந்த சான்றோர்கள், வயதில் மூத்தவர்கள் ஆகியவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தவும்.
banner

Leave a Reply

Submit Comment