x
x
x
cart-added The item has been added to your cart.

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 (Mesha Rasi Guru Peyarchi Palangal Tamil 2019 to 2020)

October 3, 2019 | Total Views : 5,197
Zoom In Zoom Out Print

அன்பார்ந்த மேஷம் ராசி நேயர்களே,

ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், மேஷ ராசிக்கு 9 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். சுப கிரகமான குருவிற்கு, இது, நலம் விளைவிக்கும் இடமாகும். இந்த வீட்டிலிருந்து இவர், ஒருவரது திறன், குணாதிசயம், வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கும் 1 ஆம் வீட்டையும்; தொடர்புகள், தைரியம், கடவுள் நம்பிக்கை, இளைய சகோதர சகோதரிகள், அண்டை அயலார்கள் போன்றவற்றைக் குறிக்கும் 3 ஆம் வீட்டையும்; மக்கட் செல்வம், பூர்வ புண்ணியம், அறிவுத்திறன், அன்பு, நினைவாற்றல், ஊகவணிகம் ஆகியவற்றைக் குறிக்கும் 5 ஆம் வீட்டையும் பார்க்கிறார். இந்த குரு பெயர்ச்சியினால், இறை நம்பிக்கை, மதம், ஆன்மீகம் மற்றும் ஆன்மீகத் தேடல்கள், நேர்மை, நல்லொழுக்கம் போன்றவற்றில், உங்களுக்கு நல்ல பலன்கள் விளையும். இந்த காலகட்டத்தில், நீங்கள், புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்; பல ஆலயங்களுக்கும் செல்வீர்கள். மேற்படிப்பு, ஆராய்ச்சி போன்றவற்றிலும் உங்களுக்கு ஆர்வம் ஏற்படும். உங்கள் அறிவுத் திறன் மேம்படும்; தொடர்புகள் அதிகரிக்கும். உங்கள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசும். நியாயமாகவும், சட்ட திட்டங்களுக்குத் தலைவணங்கியும் நடப்பீர்கள். தந்தை, அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியவர்களுடன் மிகவும் இணக்கமாக நடந்து கொள்வீர்கள்.  

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

இந்த நேரத்தில், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. நிறைவேற்ற வேண்டிய பிரார்த்தனைகள், சடங்கு வழிபாடுகள் ஆகியவற்றைச் செய்வதற்கும் இது உகந்த காலம் ஆகும். மேல் படிப்புகளுக்குத் தேவையான வழிகாட்டிகளைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, சரியான வழிகாட்டிகள் அமைவார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குருமார்கள் போன்றவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கும், இது ஏற்ற காலம் ஆகும். இப்பொழுது நீங்கள், தைரியத்துடன் செயலாற்றக் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியமும் ஏற்படும்.  

மேஷம் ராசி - வேலை மற்றும் தொழில் 

குரு பெயர்ச்சியின் தொடக்க காலங்கள், தொழிலுக்கு அனுகூலம் தருவதாக அமையும். ஆனால் நேரம் செல்லச் செல்ல, பலவித தடைகளும், பிரச்சினைகளும் எழலாம். உங்கள் தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள், மெதுவாக வளரலாம். பணியில் இருப்பவர்கள் மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். இவை சாதகமாகவும் அமையக் கூடும். ஆகவே, வேறு வேலைக்குச் செல்வது குறித்து யோசித்துக் கொண்டிருப்பவர்கள், இந்த குரு பெயர்ச்சி காலத்தில், தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். வீடு, மனை வாங்குவது, விற்பது போன்றவை, துவக்கத்தில் சற்று லாபகரமாகவே இருப்பது போல் தோன்றினாலும், பின்னர் உங்களுக்குச் பெருமளவு சாதகமாக அமையாமல் போகலாம். 

பரிகாரம்: கூர்ம யந்திரம்

மேஷம் ராசி - நிதி

குரு பெயர்ச்சி தொடக்க காலத்தில் வருமானம் சுமாராகவே இருக்கக்கூடும். மேலும், நாட்கள் செல்லச் செல்ல, செலவுகளும் பெருமளவு அதிகரிக்கக் கூடும். ஆகவே, எதிர்காலத்திற்காக சேமிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தவும். சொத்து வாங்கல், விற்றல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், இந்த காலத்தின் பிற்பகுதியில் பொருள் நஷ்டம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்கவும். 

பரிகாரம்: லக்ஷ்மி நாராயண ஹோமம்

மேஷம் ராசி - குடும்பம் 

குடும்ப வாழ்க்கையில், நல்ல மற்றும் நல்லவை அல்லாத பலன்கள் என இரண்டும் கலந்து காணப்படும். உங்கள் பெற்றோர்களுடன் உள்ள உறவில், விரிசல்கள் ஏற்படலாம். இதனால் உங்களுக்கு மனவருத்தம் உண்டாகலாம். ஆகவே, அவர்களுடனான உறவை சுமுகமாக்கிக் கொள்வது நல்லது. அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதும், அவர்களுக்கு உரிய மரியாதை தருவதும், அவர்களுடன் பேசி மகிழ்வதும், நல்ல பலன் தரும். 

பரிகாரம்: வாஸ்து யந்திரம்

மேஷம் ராசி - கல்வி

ஆரம்பத்தில் கல்வி சுமாராகவே இருக்கும். மாணவர்கள், படிப்பு விஷயத்தில், சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, பட்டப்படிப்பு படிப்பவர்களும், கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றில் சேர்ந்து கல்வி கற்க இருப்பவர்களும், குரு பெயர்ச்சியின் பிற்பகுதியில், நல்ல பலன்களை அடைய போராட வேண்டியிருக்கும். ஆகவே, இந்த நேரத்தில், மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்துப் படித்தால் தான் வெற்றியடைய முடியும். 

பரிகாரம்: சரஸ்வதி ஹோமம்

மேஷம் ராசி - காதல் மற்றும் திருமணம் 

துணை மீது காதல் பெருகும். ஆகவே துணையுடனான காதல் உறவு இனிக்கும்; இது உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் அளிக்கும். இந்தப் பெயர்ச்சி நேரத்தில், உங்களது ஆழ்ந்த காதல் உணர்வை, உங்கள் துணையிடம் மிக அழகாக வெளிப்படுத்தவும் முடியும். ஆனால் திருமணத்திற்கு நல்ல வரன்கள் அமைய, இது ஏற்ற தருணம் அல்ல. குறிப்பாக, இந்த பெயர்ச்சியின் பிற்பகுதியில் திருமணங்களை நிச்சயம் செய்வதில், தடைகளும், தாமதங்களும் ஏற்படக் கூடும். ஆகவே, குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலத்திலேயே, திருமணத்திற்குத் தகுந்த துணையை தேடிக் கொள்வது நல்லது.     

பரிகாரம்: உமா மகேஸ்வர ஹோமம்

மேஷம் ராசி - ஆரோக்கியம்

இந்த குரு பெயர்ச்சியினால் உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இது தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தவறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சிறு உடல் உபாதைகள் கூட, உடனடியாக கவனிக்கப்படாவிட்டால், பெரும் கோளாறுகளாக உருவெடுத்து, மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டிய நிலைக்கு அழைத்துச் சென்று விடும். குறிப்பாக, குடல்கள், மண்ணீரல் போன்ற உறுப்புகள் தொடர்பாக, மிகவும் எச்சரிக்கை தேவை. ஜீரண உறுப்புகளுக்கும், எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.  

பரிகாரம்: தன்வந்திரி ஹோமம்

எளிய பரிகாரங்கள் 

  • பௌர்ணமி நாளில் பகவான் சத்ய நாராயணரின் புராணக்கதை கேட்கலாம் 
  • மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிற ஆடைகளை எழைகளுக்கு தானம் செய்யலாம் 
  • பசுக்களுக்கு வெல்லம் அளிக்கலாம்; அல்லது பசுக்களை பராமரிக்க உதவலாம் 
  • எந்த சுப காரியத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர், தொடர்ந்து 8 நாட்களுக்கு, மஞ்சள் பொடியை தானம் செய்யலாம். (இந்த தானத்தை வியாழக் கிழமைகளிலோ அல்லது பூரட்டாதி, விசாகம், புனர்பூசம் போன்ற நட்சத்திர நாட்களிலோ ஆரம்பிக்கலாம்.)   

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos