Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 (Kanni Rasi Guru Peyarchi Palangal Tamil 2019 to 2020)

October 4, 2019 | Total Views : 5,650
Zoom In Zoom Out Print

கன்னி ராசி அன்பர்களே!

ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், கன்னி ராசிக்கு 4 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, சுப கிரகமான குரு, நன்மைகள் செய்யும் இடமாக இருக்காது. இந்த வீட்டிலிருந்து இவர், எதிர்பாராத ஆதாயங்கள், உதவி, கடின உழைப்பு, கீழ் பணிபுரிபவர்கள், ஆராய்ச்சி, தடைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் 8 ஆம் வீட்டையும்; வேலை, நடவடிக்கைகள், கௌரவம், சமுதாய அந்தஸ்து, வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றைக் குறிக்கும் 10 ஆம் வீட்டையும்; மோக்ஷம், கடன், நஷ்டம், செலவு, வெளிநாட்டில் குடியேறுவது, முதலீடு, தான தர்மம் ஆகியவற்றைக் குறிக்கும் 12 ஆம் வீட்டையும், பார்க்கிறார். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

இந்தக் காலகட்டத்தில், பல விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடைபெறலாம். குறிப்பாக, உங்கள் தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். பட்டப்படிப்பு படிப்பவர்களும், கல்லூரி, கலாசாலை கல்விக்கு முயல்பவர்களும் பல பிரச்சினைகளைச் சந்திக்கலாம். நீங்கள் வசிக்கும் வீட்டை பழுதுபார்ப்பதற்கோ அல்லது புதிப்பிப்பதற்கோ கடும் செலவுகளை செய்ய வேண்டி வரும். புது வாகனங்களை வாங்குவதற்கோ, உங்கள் பழைய வாகனங்களை விற்பதற்கோ, இது ஏற்ற தருணம் அல்ல. இது போலவே, நிலம், மனை, வீடு போன்றவற்றை வாங்கவோ, விற்கவோ இது சாதகமான காலமில்லை. மனநிறைவும், சந்தோஷமும் இல்லாமல் போவதால், இந்த குரு பெயர்ச்சி காலம், பொதுவாக, சங்கடங்களைத் தருவதாக அமையக் கூடும். 

கல்வித்துறையில் இருப்பவர்களுக்கும் திருப்தி இருக்காது. பணவரவும் மனநிறைவு தராது. சிலருக்கு, வாழ்க்கையில் எங்கும் பிரச்சினைகளாகவே தோன்றும். இந்த நேரத்தில் உங்கள் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். அதிக உழைப்பும், பிறர் உதவியும் கூட எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். பணித்துறையிலும் பிரச்சினைகள் எழலாம். செலவுகளும் மிகக் கடுமையாக இருக்கலாம். அயல்நாடு தொடர்பான முயற்சிகளும், வெற்றி தராமல் போகலாம்.

 

கன்னி ராசி - வேலை மற்றும் தொழில்

வேலை, தொழிலில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவக் கூடும். அலுவலகத்திலும் நிம்மதி காண இயலாமல் போகலாம். சக தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பது கடினம். தொழிலைப் பொறுத்தவரை, தொடக்க காலம், சுமாரான பலன்களைத் தரக்கூடும்; ஆனால் தொடரும் காலங்களில் இதைக் கூட எதிர்பார்க்க முடியாமல் போகலாம். சொத்து வாங்கல், விற்றல் தொடர்பான நடவடிக்கைகளில் தேக்க நிலை காணப்படும். இது தொடர்பாக, எந்தப் பெரிய முயற்சியையும் இப்பொழுது செய்யாமல் இருப்பது நல்லது.    

பரிகாரம்: ருத்ர ஹோமம்

கன்னி ராசி - நிதி

ஆரம்பத்தில் வருமானம் சுமாராக இருக்கும்; ஆனால் பின்னர் இது இன்னும் குறையக் கூடும். ஆனால் இந்த நேரத்தில், செலவுகள் அதிகரிக்கக் ,கூடும். இதன் காரணமாக, உங்கள் சேமிப்பிலிருந்து கூட, கணிசமான தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும். ஆகவே, செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்புகளை அதிகரிப்பது நல்லது.  

பரிகாரம்: செல்வத்தை ஈர்க்கும் வழிபாடுகள்

கன்னி ராசி - குடும்பம்

தொடக்க காலத்தில் குடும்ப சூழ்நிலை சாதாரணமாக இருக்கும், ஆனால் போகப் போக, தனிப்பட்டவர்களின் அகம்பாவம், கருத்து வேறுபாடுகள் காரணமாக, பிரச்சினைகள் எழலாம். இதனால், அங்கு சுமுகமான, நிம்மதியான சூழ்நிலை நிலவுவது கடினம். எனினும், குடும்பத்தினருடன் தேவையான நேரம் செலவழிப்பதனால், நிலைமையை ஓரளவாவது சுமுகமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக கணவர் அல்லது மனைவி, தாய், மூத்த சகோதர சகோதரிகள் போன்றவர்களுடனான உறவை கவனமாகக் கையாள வேண்டும்.   

பரிகாரம்: மகா சுதர்சன ஹோமம்

கன்னி ராசி - கல்வி

கல்வியில் வெற்றி பெறுவதற்கு, மாணவர்கள், மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டுப் படிப்புகளுக்காக முயற்சி செய்வதற்கு, இது தகுந்த நேரம் அல்ல. இப்பொழுது, படிப்பில் வெற்றிபெற சில நேர்மையற்ற வழிகளைக் கையாளும் எண்ணம் சிலருக்கு எழலாம்; ஆனால் அவ்வாறு செய்வது கண்டிப்பாக நல்லதல்ல. உதவித் தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கும் ஏமாற்றமே கிடைக்கக்கூடும். ஆகவே மாணவர்கள், நேரம் காலம் பார்க்காமல், முழு கவனத்துடன் படிப்பது சிறந்தது. இதனால் கல்வி மேம்படும் வாய்ப்புள்ளது.  

பரிகாரம்: கணபதி யந்திரம்

காதல் மற்றும் திருமணம் 

ஆரம்ப காலங்கள், திருமணத்திற்கு வரன் தேடுவதற்கு ஏற்ற நேரமாக இருப்பதால், அதற்கான தீவிர முயற்சிகளில் உடனடியாக இறங்கலாம். ஏனெனில், தொடர்ந்து வரும் காலங்கள் இதற்கு சாதகமாக இல்லை. இந்தப் பெயர்ச்சி காலத்தில், துணையிடம் நீங்கள் காட்டும் அன்பு, குறைவாகவே இருக்கக் கூடும். இதனால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. எனவே, அன்பை நன்கு வெளிப்படுத்தப் பழகுங்கள்; இதனால் உறவு சுமுகமடையும். 

பரிகாரம்: சர்வ ஐக்கிய மகா யந்திரம்

கன்னி ராசி - ஆரோக்கியம்

இந்த நேரத்தில், உங்கள் உடல்நிலையில் சிறிய பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால், போகப் போக நிலைமை சீரடையும். ஆகவே ஆரம்பத்தில் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. குறிப்பாக, உடல் கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சரியாகப் பராமரிப்பதில் கவனம் தேவை. இல்லாவிட்டால், இவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்பொழுது நெஞ்சு, இதயம் குறித்தும் எச்சரிக்கை தேவை. இவை தொடர்பாக எந்த பிரச்சினை எழுந்தாலும், உடனடியாக கவனித்து, சரி செய்து கொள்ளவும். 
 
பரிகாரம்: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிபாடுகள்

எளிய பரிகாரங்கள்

  • பகவான் தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ சத்யநாராயணர் ஆகியவர்களை வழிபடவும் 
  • 'குரு காயத்ரி மந்திர’ த்தைப் பாராயணம் செய்யவும் அல்லது கேட்கவும் 
  • பிறரிடம் கருணை காட்டவும் 
  • மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்யவும்  
  • பெண்களையும், குழந்தைகளையும் மரியாதையுடன் நடத்தவும்
banner

Leave a Reply

Submit Comment