Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 (Kumba Rasi Guru Peyarchi Palangal Tamil 2019 to 2020)

October 4, 2019 | Total Views : 5,104
Zoom In Zoom Out Print

கும்ப ராசி அன்பர்களே!

ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், கும்ப ராசிக்கு 11 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, சுப கிரகமான குரு, நன்மைகள் அருளும் இடமாகும். இந்த வீட்டிலிருந்து இவர், தகவல் தொடர்புகள், தைரியம், கடவுள் நம்பிக்கை, இளைய சகோதர சகோதரிகள், அண்டை அயலார்கள் போன்றவற்றைக் குறிக்கும் 3 ஆம் வீட்டையும்; மக்கட் செல்வம், பூர்வ புண்ணியம், அறிவுத்திறன், அன்பு, நினைவாற்றல், ஊக வணிகம் ஆகியவற்றைக் குறிக்கும் 5 ஆம் வீட்டையும்; வாழ்க்கைத் துணை, திருமணம், தொழில், தொழில் கூட்டாளிகள், இன்பம், உதவி, தொலைந்து போன பொருட்களை மீண்டும் அடைவது ஆகியவற்றைக் குறிக்கும் 7 ஆம் வீட்டையும், பார்க்கிறார். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

இந்த குரு பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் பல நல்ல நிகழ்வுகளை ஏற்படுத்தித் தரும். கணிசமான, நிலையான வருமானம் வரும். விருப்பங்கள் பல நிறைவேறும்; இதனால் உங்களுக்கு மிகுந்த மனநிறைவு ஏற்படும். பணி, தொழில் என இரண்டும் சிறந்து விளங்கும். தைரியம், அறிவு, நினைவாற்றல், கற்பனை வளம்,  பேச்சுத் திறன், கடவுள் நம்பிக்கை, போராடும் மற்றும் எதிர்வினையாற்றும் திறன் போன்றவை மேம்படும். இளைய சகோதர, சகோதரிகள், சக தொழிலாளர்கள், அண்டை அயலார் போன்றவர்களுடன் நல்லுறவு ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவதற்கும் இது ஏற்ற காலம் ஆகும். கல்வித்திறன் சிறந்து விளங்கும். மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும் நன்மை பயக்கும் நேரமாகவும் இது திகழும். சிலருக்கு பொழுது போக்கு நடவடிக்கைகளிலும், பயணத்திலும் ஆர்வம் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் இப்பொழுது நடைபெறக் கூடும். மணவாழ்க்கையும் இன்பகரமாக இருக்கும். சிலருக்கு, முக்கியஸ்தர்களின் நட்பும் கிடைக்கும். 

கும்பம் ராசி - வேலை மற்றும் தொழில்

வேலை நிலவரம், மாற்றங்கள் அதிகமின்றி, சாதாரணமாக இருக்கும். ஆனால் தொழில் வல்லுனர்கள், இந்த நேரத்தில் நல்ல வளர்ச்சியையும், பெரும் லாபங்களையும் ஈட்டுவார்கள். இறக்குமதித் தொழிலும் நல்ல பலன்களை அளிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்; வர வேண்டிய தொகைகளும் கைக்கு வந்து சேரும். 

பரிகாரம்: காலபைரவ யந்திரம்

கும்பம் ராசி - நிதி

கணிசமான வருமானம், லாபம் போன்றவற்றுடன், இந்த பெயர்ச்சி காலத்தில், நிதி நிலையும், பணப் புழக்கமும் சிறப்பாக விளங்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். பொருள் வளம் பெருகும். 

பரிகாரம்: பார்வதி யந்திரம்

கும்பம் ராசி - குடும்பம்

தொடக்க காலத்தில் சுமுகமாக இருக்கும் தந்தையுடனான உறவில், பின்னர் சற்றே விரிசல் ஏற்படலாம். எனினும், வாழ்க்கைத்துணை, குழந்தைகள், தாய், மூத்த சகோதர, சகோதரிகள், மருமகன், மருமகள், சுற்றத்தினர் போன்றவர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். எனவே, குடும்ப சூழ்நிலை, அமைதியும், இன்பமும் தருவதாக அமையும்.  

பரிகாரம்: தைத்ரிய உபநிஷத் பாராயணம் மற்றும் ஐக்யமாத்ய சூக்தம் ஹோமம்

கும்பம் ராசி - கல்வி

படிப்பில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும், இப்பொழுது சிலர், நேர்மையற்ற செயல்களில் இறங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, கல்வியைப் பொறுத்தவரை, சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர, கல்வியில் இப்பொழுது ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டுக் கல்விக்கு முயற்சிப்பவர்கள், அதில் வெற்றி காண்பதற்கும், சுமாரான வாய்ப்பு உள்ளது.  

பரிகாரம்: புதன் யந்திரம் 

கும்பம் ராசி - காதல் மற்றும் திருமணம் 

இந்தப் பெயர்ச்சி காலத்தில், உங்கள் வாழ்க்கையில் பொதுவாக, அன்பு, காதல், இன்பம் குடிகொண்டிருக்கும். துணையுடன் உங்கள் காதலைத் தயக்கமின்றி, முழுமையாகப் பகிர்ந்து கொள்வீர்கள். கணவன், மனைவி இடையேயும் பாசமும், நேசமும் நிறைந்திருக்கும். திருமணத்திற்கு சரியான வரன்களும் கிடைக்கக்கூடும்; திருமணமும் தடையின்றி நடைபெறக் கூடும்.   

பரிகாரம்: லக்ஷ்மி நாராயண ஹோமம்

கும்பம் ராசி - ஆரோக்கியம்

ஆரம்பத்தில் சில மாத காலத்திற்கு ஓரளவு நன்றாகவே இருக்கும் உங்கள் ஆரோக்கியம், பின்னர் சீர்கெடும் வாய்ப்புள்ளது. ஆகவே, உடல்நிலையில் ஆழ்ந்த கவனம் தேவை. குறிப்பாக, மார்பு, வயிறு போன்ற பகுதிகளை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளுங்கள். ஜீரணப் பிரச்சினைகள் வராமலும் பார்த்துக் கொள்ளுங்கள். வேளா வேளைக்குத் தவறாமல் உணவு உண்பது, சத்தான பொருட்களை உட்கொள்வது போன்றவற்றால் ஆரோக்கியம் மேம்படும். 

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் மற்றும் சூரிய ஹோமம்

எளிய பரிகாரங்கள்

  • வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இறைவனுக்குப் பூஜை செய்யவும்; அல்லது வழிபாடுகளில் கலந்து கொள்ளவும்  
  • இனிப்புகள், வெல்லம், தேன் தானம் செய்யவும் 
  • பெற்றோர், ஆசிரியர்கள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியவர்களை அணுகி, ஆசி பெறவும்  
banner

Leave a Reply

Submit Comment