மகர ராசி அன்பர்களே!
ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், மகர ராசிக்கு 12 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, சுப கிரகமான குரு, சாதகமான பலன்களைத் தரும் இடம் அல்ல. இந்த வீட்டிலிருந்து இவர், வசதிகள், தாய், கல்வி, இல்லம், நிலம், வீடு, மனை வாகனம், நண்பர்கள், உறவினர்கள், ஆடம்பரம் ஆகியவற்றைக் குறிக்கும் 4 ஆம் வீட்டையும்; நோய், கடன், போட்டிகள், பிரச்சினைகள், சந்தேகம், தோல்வி, துக்கம், பலவீனம் ஆகியவற்றைக் குறிக்கும் 6 ஆம் வீட்டையும்; எதிர்பாராத ஆதாயங்கள், உதவி, கடின உழைப்பு, வசதிக்குறைவு, தடைகள், அறுவை சிகிச்சை போன்றவற்றைக் குறிக்கும் 8 ஆம் வீட்டையும்; பார்க்கிறார்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
2019 குரு பெயர்ச்சி பற்றிய முழு விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த குரு பெயர்ச்சி காலத்தில், உங்கள் ஆரோக்கியம், செலவு போன்றவற்றில், சில விரும்பத்தகாத பலன்கள் விளையக் கூடும். வருமானம் சுமாராகவே இருக்கும் நிலையில், சில தேவையற்ற, பெரும் செலவுகள், குறிப்பாக ஆரம்ப கட்டங்களில் ஏற்படக் கூடும். இதனால், சிலர் திவாலாகும் நிலைக்குக் கூடத் தள்ளப்படலாம். எதிரிகள், போட்டியாளர்கள் போன்றவர்கள் பெரும் சவாலாக அமைவார்கள். கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை; புதிய கடன் வாங்குவதற்கோ, பழைய கடனை அடைப்பதற்கோ இது ஏற்ற நேரம் அல்ல. வழக்குகளும் உங்களுக்கு எதிராகப் போய்விடலாம். வீடு, நிலம் வாங்கல், விற்றல் போன்றவையும் சாதகம் தராது.
ஆரம்ப காலத்தில் வேலை சுமாராக இருக்கும். மனைவி, குடும்பத்தினருடன் உறவும் அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. தைரியம், பேச்சுத் திறன் குறையக்கூடும். எனினும், கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, நேர்மையாக நடந்து கொள்வது நன்மை பயக்கும்.
மகரம் ராசி - வேலை மற்றும் தொழில்
துவக்கத்தில் சுமாராக இருக்கும் உங்கள் வேலை நிலவரம், போகப் போக பாதகமாக மாறக்கூடும். உயர் அதிகாரிகளிகளிடமிருந்து ஆதரவையோ, சக ஊழியர்கள், கீழ் பணியாற்றுபவர்கள் போன்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பையோ, நீங்கள் எதிர்பார்க்க முடியாது. வருமானமும் சாதாரணமாகவே இருக்கும். தொழிலும், இது போலவே, சுமாராகத் தொடங்கி, மிகச் சுமாராக முடியக்கூடும். தொழில் கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகளும், மனக்கசப்பும் ஏற்படக் கூடும்.
மகரம் ராசி - நிதி
செலவுகள் கடுமையாக இருக்கும்; குறிப்பாக மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும். எனவே பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும். சொத்து வாங்குவது, விற்பது போன்றவற்றிலும் பணம் விரையமாகக்கூடும். இந்த நிலை குறிப்பாக, இந்த பெயர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும். பிற்பகுதியிலும் கூட வருமானம் குறைவாகவே இருக்கும். எனவே பணத்தைப் பொறுத்தவரை, இது நல்ல காலம் என்று சொல்வதற்கில்லை.
மகரம் ராசி - குடும்பம்
ஆரம்பத்தில் சுமாராக இருக்கும் குடும்ப உறவுகள், பின்னர் சற்றே மேம்படும். தாய், துணை இவர்களுடன் உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால், இவர்களிடம் அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ளவும். மற்ற உறவுகளுடனும், அண்டை அயலார்களுடனும் நட்புடன் பழகுவது நல்லது.
மகரம் ராசி - கல்வி
இந்த நேரத்தில், கல்வியில் வெற்றி பெற, மாணவர்கள் தீவிர ஆர்வத்துடன், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். முழு கவனம் செலுத்தி, கால நேரம் பார்க்காமல் படிக்க வேண்டும். பட்டப்படிப்பு, கலாசாலைப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கும், இது மிக சாதகமான நேரமாக இருக்காது. அயல்நாட்டுப் படிப்புக்காக முயல்பவர்களுக்கும், இது நல்ல நேரம் எனக் கூறமுடியாது.
மகரம் ராசி - காதல் மற்றும் திருமணம்
காதல் உறவும் சரி, திருமண உறவும் சரி, சுமாராகவே இருக்கும். எனவே, இப்பொழுது, துணையிடம் அன்பையும், காதலையும் நன்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம். திருமணத்திற்குத் துணை தேடுவதிலும், சுமாரான பலனே கிடைக்கும். எனவே இப்பொழுது திருமணம் நிச்சயமாக வேண்டும் என்றால், அதற்காக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
பரிகாரம்: ஸ்வயம்வர பார்வதி ஹோமம்
மகரம் ராசி - ஆரோக்கியம்
நீங்கள் இப்பொழுது நோய், நொடிகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், ஆரோக்கியம் கேள்விக்குறியாகவே இருக்கும். சரியான நேரத்தில், முறையாக கவனிக்கப்படாவிட்டால், சாதாரண சங்கடங்கள் கூட, கடும் வியாதிகளாக மாறிவிடலாம்; சிலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்படும் நிலையும் உருவாகலாம். எனவே, உடல்நிலை குறித்த அனைத்து பிரச்சினைகளையும், உடனடியாக கவனித்து விடவும்.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் மற்றும் சூரிய ஹோமம்
எளிய பரிகாரங்கள்
- சிவபெருமனை வழிபடவும்
- ஏழைகளுக்கு, தன்னலம் இல்லாமல் உதவி செய்யவும்
- பௌர்ணமி தினத்தில்,சத்ய நாராயண ஸ்வாமி புராணக் கதை கேட்கவும்
- உங்கள் உடல்நிலை அனுமதித்தால், பௌர்ணமி அன்று உபவாசம் இருக்கவும்
- உப்பு, மஞ்சள், எலுமிச்சை போன்றவற்றை, ஏழைகளுக்கு தானம் செய்யவும்

Leave a Reply