x
x
x
cart-added The item has been added to your cart.

ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 (Rishaba Rasi Guru Peyarchi Palangal Tamil 2019 to 2020)

October 3, 2019 | Total Views : 4,728
Zoom In Zoom Out Print

அன்பார்ந்த ரிஷபம் ராசி நேயர்களே!

ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், ரிஷப ராசிக்கு 8 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். சுப கிரகமான குருவிற்கு, இது, சாதகமான இடம் அல்ல. இந்த வீட்டிலிருந்து இவர், மோக்ஷம், கடன், நஷ்டம், செலவு, ரகசியம், வெளிநாட்டில் குடியேறுவது, முதலீடு, தான தர்மம் ஆகியவற்றைக் குறிக்கும் 12 ஆம் வீட்டையும்; செல்வம், குடும்பம், குரல் மற்றும் பேச்சு, ஆரம்பக் கல்வி, உடமைகள், சொத்து, ஆடை, கோபம், உணவு ஆகியவற்றைக் குறிக்கும் 2 ஆம் வீட்டையும்; வசதிகள், தாய், கல்வி, வீடு, நிலம், மனை, வாகனங்கள், உறவினர், ஆடம்பரம் ஆகியவற்றைக் குறிக்கும் 4 ஆம் வீட்டையும் பார்க்கிறார்.  

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

இந்த குரு பெயர்ச்சி காலத்தில், சில எதிர்பாராத, விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறலாம். ஆகவே, இப்பொழுது, வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் தவறாமல் கடைபிடிப்பது அவசியம். குறிப்பாக, ஆரம்ப காலத்தில் உங்களை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்வதில், ஆழ்ந்த கவனம் செலுத்தவும். உங்கள் முன்னேற்றத்திற்கு எதிராக பல தடைகளும் ஏற்படலாம். உடல்நிலையை மிகுந்த கவனத்துடன் கையாளவும்; தவறினால், அறுவை சிகிச்சை கூட செய்து கொள்ள நேர்ந்து விடலாம். எதிர்பாராத அதிர்ஷ்டம், லாபம் போன்றவற்றை இப்பொழுது ஏதிர்பார்க்க இயலாது. பல ஏமாற்றங்கள், தோல்விகள் போன்றவற்றையும் நீங்கள் சந்திக்க நேரலாம். உங்களது கடும் உழைப்பும், பிறர் செய்யும் உதவியும் கூட, உரிய பலனையோ, வெற்றியையோ தராமல் போகலாம். செலவுகள் கூடும்; பண விரயங்கள் ஏற்படும். தொடக்கத்தில் சுமாராக இருக்கும் ஆரோக்கியம், பின்னர் மோசமாக மாறக்கூடும். ஆரம்பத்தில், வேலை, தொழில் போன்றவற்றில் தடைகள் ஏற்படலாம்; எனினும் பின்பு அவை சாதாரணமாக அமையும்.  

     .

ரிஷபம் ராசி - வேலை மற்றும் தொழில்   

துவக்கத்தில் சுமாராக இருக்கும் வேலை, தொழில் போன்றவை, போகப் போக முன்னேற்றம் காணும். குரு பெயர்ச்சி காலத்தின் பிற்பகுதியில், உங்கள் அன்றாட நடவடிக்கைகளை முடிக்கவும் நீங்கள் சிரமப்படலாம். வேலை பார்க்கும் சூழ்நிலையும் சுமுகமாக இல்லாமல் போகலாம். இப்பொழுது தொழில் சுமாராக நடக்கும். எனினும், வீடு, மனை வாங்கி, விற்கும் தொழிலில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.    

பரிகாரம்: கணபதி ஹோமம்

ரிஷபம் ராசி - நிதி

தேவையற்ற விஷயங்களிலும், பயனற்ற பொருட்களை வாங்குவதிலும், அதிக பணம் விரயமாகும். இதனால் இப்பொழுது நீங்கள் கடும் செலவுகள் செய்ய நேரிடும். இதன் காரணமாக பண, பொருள் நஷ்டம் ஏற்படும். பெயர்ச்சி காலத்தின் பிற்பகுதியில் வருமானமும் குறைந்து போகலாம்; ஆகவே நிதிநிலை மேலும் மோசமடையக் கூடும். மருத்துவமனை சிகிச்சைக்காகவும் ஏராளமான பணம் செலவழியலாம். மருத்துவக் காப்பீடு மூலம் பணம் பெற வேண்டிய நிலையும் உருவாகலாம். எனவே, உங்கள் உடல்நிலை விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். இல்லாவிட்டால், மருத்துவம், அறுவை சிகிச்சை போன்றவற்றுக்காக பெரும் பணம் செலவு செய்ய வேண்டி வரும். ஆகவே, உங்கள் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, இந்த குரு பெயர்ச்சி, உங்களுக்கு சாதகமாக அமைவது கடினம்.    

பரிகாரம்: குரு பகவான் ஹோமம்

ரிஷபம் ராசி - குடும்பம் 

குடும்பத்தில் மனக் கசப்பும், கொந்தளிப்பான சூழ்நிலையும் நிலவக் கூடும். சொந்த பந்தங்கள் ஒத்துழைப்பு தராததால், குடும்பத்தில் அமைதியற்ற சூழல் நிலவும். குறிப்பாக தாயார், குழந்தைகள், மூத்த சகோதர சகோதரிகள் போன்றவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளாமல் போகலாம். உறவினர்களின் அணுகுமுறை  உங்களுக்கு எதிரானதாக இருக்கும். இது மோதல்களுக்கு வழி வகுக்கும். இதன் காரணமாக, உங்களுக்கு, ஆழ்ந்த மன வருத்தம் ஏற்படக்கூடும்.  

பரிகாரம்: சத்திய நாராயண பூஜை 

ரிஷபம் ராசி - கல்வி

குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலம், மாணவர்களின் கல்வியில், கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும். பள்ளி மாணவர்களுக்கும் சரி, கல்லூரி மாணவர்களுக்கும் சரி,  இது சவாலான நேரமாக இருக்கும். ஒருமுகப்பட்ட கவனத்துடனும், ஆர்வத்துடனும் படிப்பது கடினமாக இருக்கும். ஆகவே, நேரம், காலம் பார்க்காமல், நீங்கள் கடினமாக உழைத்துப் படிக்க வேண்டியது அவசியம். வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்க முயற்சி செய்யும் மாணவர்களும், சில ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி வரலாம்.

பரிகாரம்: சரஸ்வதி யந்திரம்

ரிஷபம் ராசி - காதல் மற்றும் திருமணம் 

தொடக்கத்தில், உங்கள் அன்பையும், காதலையும் துணையிடம் தெரிவிப்பது, உங்களுக்குக் கஷ்டமாகத் தோன்றும். திருமணத்திற்காக வரன் தேடினால், அவை கிடைக்கும் வாய்ப்பு சுமாராகவே உள்ளது. ஆகவே, இந்த விஷயத்தில் தீவிரமாக முயற்சி செய்தால் மட்டுமே, வெற்றி கிடைக்கும்.    

பரிகாரம்: பார்வதி அழகு பூஜை 

ரிஷபம் ராசி - ஆரோக்கியம்

இந்தக் காலகட்டத்தில் மருத்துவமனை சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்த நேரத்தில் சாதாரண உடல்நிலைக் கோளாறுகளைக் கூட அலட்சியப்படுத்தினால், அவை பெரும் பிரச்சினைகளாக மாறிவிடக்கூடும். ஆகவே, உங்கள் ஆரோக்கியத்திலும், உடலின் ஒவ்வொறு உறுப்பையும் சரியாகப் பராமரிப்பதிலும், உரிய கவனம் தேவை.  

பரிகாரம்: அங்காரக ஹோமம்

எளிய பரிகாரங்கள் 

  • ‘ஓம் வாசஸ்பதயே நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபிக்கவும் 
  • புனிதமான மஞ்சள் சரடு ஒன்றை, மணிக்கட்டில் அணியவும்  
  • அனைவரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் பழகவும் 
  • உங்கள் பெற்றோர், வாழ்க்கைத் துணை/துணைவர், குழந்தைகள் போன்றவர்களுக்கு, உரிய மரியாதை அளிக்கவும் 
  • முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்யவும் 
  • வாழைப்பழம், வெல்லம், தேன் தானம் அளிக்கவும்
  • கோவில் பூசாரிகள், அந்தணர்கள் ஆகியவர்களின் நலனுக்காக, உங்களால் இயன்ற அளவு தானம் கொடுக்கவும் 
  • பசுக்களுக்கும், பறவைகளுக்கும் உணவு படைக்கவும் 

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos