x
x
x
cart-added The item has been added to your cart.

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 (Thulam Rasi Guru Peyarchi Palangal Tamil 2019 to 2020)

October 4, 2019 | Total Views : 4,057
Zoom In Zoom Out Print

துலாம் ராசி அன்பர்களே!

ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமைஅன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், துலாம் ராசிக்கு 3 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, சுப கிரகமான குரு, சாதகமாக அமையும் இடமாக இருக்காது. இந்த வீட்டிலிருந்து இவர், வாழ்க்கைத் துணை, திருமணம், தொழில், தொழில் கூட்டாளிகள், இன்பம், உதவி, தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைப்பது ஆகியவற்றைக் குறிக்கும் 7 ஆம் வீட்டையும்; பாக்கியம், மதம், தர்மம் அல்லது நேர்மை, புண்ணியம், தந்தை, உயர் அதிகாரிகள், முன்னோர்கள், நம்பிக்கை, யோகா, தியானம் ஆகியவற்றைக் குறிக்கும் 9 ஆம் வீட்டையும்; லாபம், ஆதாயம், விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றைக் குறிக்கும் 11 ஆம் வீட்டையும், பார்க்கிறார். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

இந்த குரு பெயர்ச்சி காலத்தில், வாழ்க்கையின் பல விஷயங்களிலும் உங்களுக்குக் கலவையான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இளைய சகோதர, சகோதரிகளுடனும், அண்டை அயலார்களுடனும் உறவு சுமாராக இருக்கும். பணியிடத்தில், சக தொழிலாளர்கள் உங்களுக்கு, ஒத்துழைப்பு தராமலும், அனுசரித்துப் போகாமலும் இருக்கலாம். வழக்கமான தைரியமும், இப்பொழுது உங்களிடம் இல்லாமல் போகலாம். உங்கள் தகவல் தொடர்புத் திறன், பேச்சு போன்றவையும் சுமாராகவே இருக்கும். அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை இருந்தால், இந்த நேரத்திலும் நீங்கள் வெற்றிகளை ஈட்டலாம். 

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், உளவியல் போன்ற துறைகளில் நீங்கள் இருந்தால், கால நிலைக்கு ஏற்றவாறு, இவற்றில் உங்கள் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால், இது தொடர்பான சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும், இது சாதகமான நேரமாக இருக்காது. அலைபேசி, சிம் அட்டை, தரவு அட்டை போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை வாங்க விரும்பினால், தொடக்க காலத்திலேயே இவற்றை வாங்கி விடவும்; பின்னர் வாங்குவது நன்மை தராமல் போகலாம். ஆகவே, பொதுவாக, சுமாரான மற்றும் கலவையான பலன்கள் விளையும் இந்தக் காலகட்டத்தில், நீங்கள் நேர்மையாக நடந்து கொள்வது நலம் தரும்.

  
துலாம் ராசி - வேலை மற்றும் தொழில்

குரு பெயர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், வேலையில் உங்களுக்கு சுமாரான பலன் கிடைக்கும். நாட்கள் செல்லச் செல்ல, இடர்பாடுகளும், தாமதங்களும் உங்கள் முன்னேறத்தைத் தடை செய்யக் கூடும். ஆகவே, வேலையில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், அதற்காக, துவக்கத்திலேயே கடுமையாகப் பாடுபட வேண்டும். தொழில் முன்னேற்றமும், சுமாராகவே இருக்கும். எனவே, புதிய தொழிலைத் தொடங்குவதற்கோ அல்லது கூட்டுத் தொழில் செய்வதற்கோ, இது தகுந்த நேரம் அல்ல. இருப்பினும், கூட்டாளிகளுடன் சுமுக உறவைப் பராமரிப்பது நல்லது.   

பரிகாரம்: மத்ஸ்ய யந்திரம்  

துலாம் ராசி - நிதி

நீங்கள் எதிர்பார்த்தை விட குறைவான வருமானமே, உங்களுக்கு இப்பொழுது கிடைக்கும்; குரு பெயர்ச்சி காலப் பலன்களும் இது போல சுமாராகவே தான் இருக்கும். ஆனால் ஆரம்பத்தில், சில சுப செலவுகள் ஏற்படும். நல்ல வருமானம் வரும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதால், தேவையற்ற செலவுகள், கடன்கள் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். 

பரிகாரம்: ருண விமோசன பூஜை

துலாம் ராசி - குடும்பம்

குடும்ப சூழல் சாதாரணமாக இருக்கும்; இங்கு உங்களுக்கு குறிப்படத்தக்க நன்மைகள் எதுவும் விளைய வாய்ப்பில்லை. குடும்பத்தினரிடம் அன்பாகவும், அமைதியாகவும் பழகுவது, இணக்கமான சூழலை உருவாக்க உதவும். இந்தப் பெயர்ச்சியின் பிற்பகுதியில், தந்தையுடனான உறவில் விரிசல் வரலாம்; எனவே இதில் விசேஷ கவனம் செலுத்தவும். தாய் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவு சாதாரணமாக இருக்கும். குழந்தைகளுடன் தொடக்கத்தில் நன்றாக இருக்கும் உறவு, பின்னர் சீர்கெடும் வாய்ப்புள்ளது. ஆகவே அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழக்கவும்.   

பரிகாரம்: பார்வதி ஹோமம்

துலாம் ராசி - கல்வி

கல்வியில் உங்கள் அறிவுத் திறன் பிரகாசிக்கும்; இதனால், தடைகள், பிரச்சினைகள், தாமதங்கள் இல்லாமல், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் குரு பெயர்ச்சியின் பிற்பகுதி சாதாரணமாகவே இருக்கும். அயல்நாட்டுக் கல்வி முயற்சிகளுக்கு சுமாரான பலன்கள் தான் கிடைக்கும்.  

பரிகாரம்: சரஸ்வதி ஹோமம்

துலாம் ராசி - காதல் மற்றும் திருமணம் 

இந்தக் காலகட்டத்தில், உங்கள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. திருமணத்திற்கு நல்ல வரன் அமைவதும் கடினமாக இருக்கும். எனினும், இந்த காலத்தின் முற்பகுதியில் துணையின் மீது நீங்கள் காட்டும் அன்பு பெருகும்; மணவாழ்க்கையில் தம்பதிகள் இனிமை காண்பார்கள். ஆனால், பின்னர் இந்த சந்தோஷம் குறைந்து விடக் கூடும். எனவே, வாழ்க்கைத் துணையுடன் எப்பொழுதும், சுமுகமான உறவைப் பராமரிக்க முயலுங்கள். 

பரிகாரம்: பார்வதி அழகு பூஜை

துலாம் ராசி - ஆரோக்கியம்

ஆரம்பத்தில் சாதாரணமாக இருக்கும் உங்கள் ஆரோக்கியம், பின்னர் மெதுவாக சீர்கேடு அடையக் கூடும். எனவே நல்ல உடல்நிலையைப் பராமரிப்பதில் தகுந்த கவனம் செலுத்தவும். குறிப்பாக, தொப்புள், கால் தசைப் பகுதிகளில் பிரச்சினை எழுந்தால், உடனடியாக கவனிக்கவும். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் மூத்த சகோதர, சகோதரிகள் ஆரோக்கியம் குறித்தும் எச்சரிக்கை தேவை.   

பரிகாரம்: சுதர்சன யந்திரம்

எளிய பரிகாரங்கள்

  • ‘ஓம் ப்ரம் பிருஹஸ்பதயே நமஹ’ என்ற மந்திரத்தை, வியாழக்கிழமைகளில் 108 முறை ஜபிக்கவும்
  • தினமும் சிவபெருமானை வழிபடவும்; அல்லது ‘ஓம் நமோ பகவதே ருத்ராய’ என்ற மந்திரத்தை ஜபிக்கவும்
  • ருத்ராபிஷேகம் செய்யவும்; அல்லது ருத்ர ஹோமத்தில் பங்கு எடுத்துக்கொள்ளவும்  
  • முடிந்தால், 5 முக ருத்ராக்ஷம் அணியவும் 
  • வியாழக்கிழமைகளில், சாத்வீகமான, சைவ உணவையே உட்கொள்ளவும் 

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos