ஹோமங்கள், வாழ்க்கையில் நம்மை பாதிக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கும் ஆற்றல் வாய்ந்த சடங்குகளாகத் திகழ்கின்றன. இதன் மூலம் சிறந்த ஆரோக்கியம், நெருக்கமான உறவுகள், நல்ல வேலை, செல்வ வளம் போன்றவற்றை அடைவதில் இருக்கும் தடைகள் நீங்குகின்றன.
உங்களது தனிப்பட்ட நோக்கங்களை அடைவதற்காக நிகழ்த்தப்படும் இந்த சிறப்பு ஹோமங்கள், உங்கள் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேத சாஸ்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற, நல்ல தகுதிவாய்ந்த எங்கள் புரோகிதர்கள், மிகவும் ஏற்ற நேரத்தில், முறையான நியமங்களுடன், சரியான மந்திர உச்சரிப்புகளுடன் இந்த ஹோம வழிபாட்டை நடத்தி, உங்கள் நோக்கங்களை அடையத் துணை புரிவார்கள். நாங்கள் உங்களுக்காக நடத்தும் இந்தப் புனிதமான சடங்குகளின் மூலம், நல்ல ஆரோக்கியம், அழகான சந்ததிகள், நீண்ட ஆயுள் போன்ற பல நன்மைகளை, வாழ்க்கையில் நீங்கள் அடைந்து பயன் பெற முடியும்.
ஆயூர் தேவதையை குறித்து நடத்தப்படும் ஹோமம் ஆயுஷ் ஹோமம்.இதன் மூலம் நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், மன வேதனைகளிலிருந்து நிவாரணம் ஆகியவற்றை கொடுப்பவரான ஆயுர் தேவதாவின் ஆசீர்வாதங்களை நாம் பெறலாம். ஆயுர் தேவதா என்பவர் வாழ்வின் ஆற்றலுக்கான தெய்வம் ஆகும். நமது பொறுப்புகளை சிறப்பாகக் கையாளக்கூடிய திறனை ஆன்மீக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நமக்குக் கொடுப்பவர். ஒரு வருடத்திற்கு ஒரு முறை இந்தச் சடங்கில் கலந்து கொள்வதால் உங்கள் அனைத்து இலக்குகளையும் சிறப்பாக அடைய முடியும்.
கனகதாரா என்றால் “பொன் மழை” என்று பொருள்படும். இது பெருமதிப்பு மிக்க ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் இயற்றப்பட்ட பாடல் ஆகும். இந்தப் பாடல் செல்வத்தின் அதிபதியாக விளங்கும் லக்ஷ்மி தேவியைக் குறித்து செல்வத்தை வேண்டியும் ஏழ்மையை நீக்க வேண்டியும் ஆசி பெற பாடும் பாடல் ஆகும். இந்தப் பாடலை லக்ஷ்மி தேவிக்கான ஸ்ரீ சுக்த ஹோமத்துடன் சொல்லும் போது நிதி நெருக்கடிகள் நீங்கி பொருட் செல்வங்கள் சேரும். இதன் மூலம் செல்வம் ஆரோக்கியம் அமைதி செழிப்பு மற்றும் நிறைவான வாழ்வு அமையும்.
ஆதித்ய ஹ்ருதய ஸ்லோக பாராயணத்தை தொடர்ந்து சூரிய ஹோமத்தை நடத்தி, சூரிய தேவனை வழிபடும் பொழுது, அனைத்து விதமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் உறுதி பிறக்கிறது.எதிரிகள் தொல்லை, கவலைகள் யாவும் நீங்கி, நீண்ட ஆயுள் பெற இயலும். இந்த சிறப்புஹோமம் செய்வதன் மூலம் இறை ஆற்றல் பெற்று அனைத்து சிக்கல்களையும் நீக்கி, உங்கள் குறிக்கோள்களில் வெற்றி அடைய முடியும்.
அவஹந்தி ஹோமம் செய்வதன் மூலம் சகல சௌபாக்கியங்களும், புத்திக்கூர்மையும், செல்வங்களையும் பெற இயலும் என்று தைத்ரேய உபநிஷத் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் அடையக்கூடிய மிகப் பெரிய செல்வம் அறிவு தான். அவஹந்தி ஹோமத்தின் முக்கிய நோக்கம், இந்த அறிவைப் பெற்றுப் பயனடைவது தான். எனவே இந்த ஹோமம் செய்வதன் மூலம் அறியாமை இருள் நீங்கி ஞானம், மற்றும் புத்திக்கூர்மை பெற இயலும். அதன் மூலம் செல்வ வளமும் பெற இயலும்
கருடன் மகாவிஷ்ணுவின் வாகனமாக விளங்குகிறார். பறவைகளின் தலைவராகவும், பெரும் பலம் வாய்ந்தவராகவும் கருதப்படும் இவர், நாகங்களினால் ஏற்படும் சாபங்களின் விளைவுகளை நீக்கவோ, குறைக்கவோ கூடியவர். ஆஷு கருட ஹோமம், இவரைக் குறித்துச் செய்யப்படும் ஹோம வழிபாடு ஆகும். சர்ப்ப சூக்த ஸ்லோகத்தை ஓதி, ஆஷு கருட ஹோமம் செய்வது, உங்களைச் சூழ்ந்துள்ள சூனியம் போன்ற தீய சக்திகளை விலக்கும். நீங்களும், உங்கள் குடும்பமும் நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தத் துணை புரியும்.
சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்பது, சர்ப்பங்கள் அல்லது நாகங்கள் எனப்படும் பாம்புகளின் காரணமாக ஏற்படும் சாபம் அல்லது துன்பம் ஆகும். சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு, கேது கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் 2, 5, 7 அல்லது 8 ஆம் வீட்டில் அமைந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
துர்கா தேவி, தெய்வீக சக்தியின் வடிவமாகத் திகழ்பவள் ஆவாள். மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதாரம் எடுத்த இவர், அன்னை பார்வதியின் வடிவமாகவும் விளங்குகிறார். இவரது அருளால், தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் அமைதியும், சந்தோஷமும் பெருகும்.
தைத்திரிய உபநிஷத் மற்றும் அதனை தொடர்ந்து நடத்தப்படும் ஐக்யமத்ய சுக்தம் ஹோமம் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தக் கூடியது. குடும்பம் மற்றும் சமூகத்தில் செழிப்பும் ஆன்மீக மேம்பாட்டையும் அளிக்க வல்லது. நாம் உலகில் காணும் பல்வேறு மக்களிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும் மக்களிடையே நல்ல பிணைப்பை வலுப்படுத்தவும் இது வழி வகுக்கின்றது.
நவகிரக ஸுக்த பாராயணத்துடன் கூடிய நட்சத்திர சாந்தி ஹோமம், அதன் சக்தி வாய்ந்த அதிர்வலைகளின் மூலம் தோஷங்களைப் போக்க வல்லது. ஒரு தனி நபரின் வாழ்க்கையில் கிரகங்களின் பெயர்ச்சி மாறுதல்களை ஏற்படுத்தும். இந்தப் பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காணப்படும். இந்த ஹோமத்தின் மூலம் அதிக பட்ச நன்மை பெற இதனை வருடத்திற்கு ஒரு முறை ஒருவரது ஜென்ம நட்சத்திரத்தில் செய்வது சிறந்தது.
தன்வந்திரி, ஆயுர் தேவதை, மிருத்யுஞ்ஜயர் என்ற மூவரும், நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றை அளிக்கக்கூடிய தெய்வங்கள் ஆவர். ஆரோக்கியம் அளிக்கும் ஹோமம் (பேக்கேஜ்) என்பது இந்த மூவரையும் கூட்டாக ஆராதித்து, அவர்களின் தெய்வீக அருள் பெற்று, நோய்களிலிருந்து உடனடி நிவாரணமும், நிரந்தரமான குணமும் பெற உதவும் ஹோம வழிபாடு ஆகும்.
உயர்பதவி, அங்கீகாரம் மற்றும் திறமைகள் போன்றவற்றை பெறுவதற்கு முத்தேவியரை வணங்கி ஆராதிக்கும் ஹோமம் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ஹோமம். மூன்று தேவியர்களும் முறையே வீரம், செல்வம் மற்றும் ஞானத்தை குறிப்பவர்கள். இந்த மூன்றையும் இணைத்து நடத்தப்படும் இந்த ஹோமம் பல மடங்கு பலன்களை அளிக்க வல்லது. உண்மையில் உங்கள் விதியை மாற்றக் கூடியது. உங்களை அமைதி, மகிழ்ச்சி மற்றும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடியது.
நட்சத்திர சாந்தி பாராயணம் மற்றும் நவகிரக ஹோமம் புனித வேதாகம வைபவங்களாக கருதப்படுகின்றது. இது கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யவும் ஜென்ம நட்சத்திரத்திற்காகவும் செய்யும் ஹோமம் ஆகும். தீய கர்மாக்களை விலக்குவதற்கும் கிரகங்களை நமக்கு அனுகூலமாக்கிக் கொள்ளவும் இந்த ஹோமம் செய்வது சிறந்தது என புனித நூல்களில் கூறப்பட்டுள்ளன.
வான்வெளியில் சுழலும் நவகிரகங்களாக போற்றப்படும் ஒன்பது கோள்கள், நமது வாழ்க்கையில் தினசரி நாம் செய்யும் கர்மாக்களை நிர்ணயிக்கின்றன. ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறாரோ, அதுவே அவரது ஜன்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நவகிரக ஹோமம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமம் என்பது, இந்த சக்தி வாய்ந்த நவகிரகங்கள் மற்றும் ஒருவரது ஜன்ம நட்சத்திரத்துடன் ஆன்மீகத் தொடர்பு ஏற்படுத்தவல்ல, சக்தி வாய்ந்த வேத கால வழிபாடாகும்.
தச மஹா வித்யா என்பவர்கள், இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, ஆட்சி செய்யும் உலக அன்னையின் பத்து வித தெய்வீக சக்தி வடிவங்கள் ஆவார். பரம்பொருளாக விளங்கும் ஆதி தேவியின் இந்த பத்து அம்சங்கள், இவ்வுலகில் நம் அறிவுக்கு உட்பட்ட, அறிவுக்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களுடனும் பின்னிப் பிணைந்து, அவற்றின் வடிவமாகவே திகழ்கின்றனர்.
Read More...
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out