sign in Account
x
x
Search
x
சனி ஹோமம்

சனி ஹோமம்

சனி ஹோமம் சனி பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. சனி என்பது கர்மாவைக் குறிக்கும் கிரகம் ஆகும. இந்த ஹோமத்தை செய்து சனி பகவானை திருப்திப் படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றங்களைக் காணலாம். எதிர்மறைத் தாக்கங்களை விலக்கி, நன்மை தரும் முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக, சனிக்கிழமைகளில் சனி பகவானை இவ்வாறு வழிபடுவதனால், மேலும் சிறந்த பலன்களை அடையலாம்.
{{variation.Name}}:
{{variationdetail.VariationName}}
{{oldPrice}} You Save {{Save}}
{{Price}}
இலவச ஷிப்பிங்
அளவு:
{{requiredQty}}
{{prdvariation.ParentName}}:
{{variation.Name}}
{{childname.ChildVariationTypeName}}:
{{childDetails.VariationName}}

சனி ஹோமம்
(சனி கிரக ஹோமம்)

அறிமுகம்

Saturn Homa

சனி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனால் இவர், சனி பகவான், சனீஸ்வரன் என்றெல்லாம் போற்றி வணங்கப்படுகிறார். சனி ஹோமம், சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நமது வாழ்வில் சனி கிரகத்தின் சக்தியானது, பல நேரங்களில் சோதனைகளை ஏற்படுத்தக் கூடியது. நம்மை நேர்வழியில் அழைத்துச் செல்வதே அதன் நோக்கம் என்றாலும், சில சமயங்களில் சனியின் தாக்கம் நம்மால் தாங்க முடியாததாகவும் இருக்கும். சனி ஹோமம், சனி கிரகத்தை சாந்தப் படுத்துவதற்காகவும், அவர் அருள் பெற்று, வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை எதிர்கொள்வதற்காகவும் நடத்தப்படுகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் காணப்படும் சனியின் எதிர்மறைத் தாக்கத்தை நிவர்த்தி செய்து, அவர் தமது முயற்சிகளில் வெற்றி காணத் துணை புரியும் வகையில், இந்த ஹோமம், செய்யப்படுகின்றது.

சனி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

தனிச்சிறப்பு வாய்ந்த இந்த ஹோமம் நடத்தும் போது, ஒருவரின் ஜாதகத்தில் காணப்படும் சனியின் எதிர்மறைத் தாக்கம் நீங்கி, துன்பங்கள் விலகுகின்றன. சனி கிரகத்தின் அருளால், சாதகமான பலன்கள் கிடைக்கவும், விருப்பங்கள் நிறைவேறவும், வாய்ப்புகள் பெருகுகின்றன.

பாரம்பரிய முறை ஹோமம்

சனி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தை செய்து சனி பகவானை திருப்திப் படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றங்களைக் காணலாம். எதிர்மறைத் தாக்கங்களை விலக்கி, நன்மை தரும் முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக, சனிக்கிழமைகளில் சனி பகவானை இவ்வாறு வழிபடுவதனால், மேலும் சிறந்த பலங்களை அடையலாம்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

சனி ஹோமத்தின் நற்பலன்கள்
  • தெய்வீக அருளால், தர்மத்தின் பாதையில் நடக்க இயலும்
  • கடவுளோடு இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ முடியும்
  • கருணையையும், பணிவையும் வளர்த்துக் கொள்ள இயலும்
  • எல்லைகளை வகுத்து, அதற்குள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ முடியும்
  • உங்கள் பாதையில் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்
  • இயல்பாகவும், யதார்த்தமாகவும் இருக்க கற்றுக் கொள்ள முடியும்
  • உங்கள் இலட்சியங்களை அடைய முடியும்
  • தொழிலில் வாய்ப்புகள் பெற்று, முன்னேற முடியும்
  • உங்கள் அதிகாரம் மேம்படும்
  • கடமை உணர்வு ஏற்படும்
  • ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்ள இயலும்

சனி ஹோம மந்திரம்

ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ் சநிஷ்ச்சராய நமஹ

Saturn Ceremonies

வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept