sign in Account
x
x
Search
x
தச மஹா வித்யா ஹோமம்

தச மஹா வித்யா ஹோமம்

தச மஹா வித்யா என்பவர்கள், இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, ஆட்சி செய்யும் உலக அன்னையின் பத்து வித தெய்வீக சக்தி வடிவங்கள் ஆவார். பரம்பொருளாக விளங்கும் ஆதி தேவியின் இந்த பத்து அம்சங்கள், இவ்வுலகில் நம் அறிவுக்கு உட்பட்ட, அறிவுக்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களுடனும் பின்னிப் பிணைந்து, அவற்றின் வடிவமாகவே திகழ்கின்றனர்.
{{variation.Name}}:
{{variationdetail.VariationName}}
{{oldPrice}} You Save {{Save}}
{{Price}}
இலவச ஷிப்பிங்
அளவு:
{{requiredQty}}
{{prdvariation.ParentName}}:
{{variation.Name}}
{{childname.ChildVariationTypeName}}:
{{childDetails.VariationName}}

ஒருவர் தனது முழு ஆற்றலை அடைய உதவும் ஹோமம்

அறிமுகம்

Dasa Maha Vidya Homa

தச மஹா வித்யா என்பவர்கள், இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, ஆட்சி செய்யும் உலக அன்னையின் பத்து வித தெய்வீக சக்தி வடிவங்கள் ஆவார். பரம்பொருளாக விளங்கும் ஆதி தேவியின் இந்த பத்து அம்சங்கள், இவ்வுலகில் நம் அறிவுக்கு உட்பட்ட, அறிவுக்கு அப்பாற்பட்ட அனைத்து பொருட்களுடனும் பின்னிப் பிணைந்து, அவற்றின் வடிவமாகவே திகழ்கின்றனர்.

தச மஹா வித்யா ஹோமம் என்பது, இவ்வுலகில் குடிகொண்டிருக்கும், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் அன்னை சக்தியின் பத்து வடிவங்களையும் ஆராதிக்கும் வழிபாடாகும். நம்முள் உறைந்து கிடக்கும், தன்னலம் கருதாத உன்னத உணர்வை இது தட்டி எழுப்பக் கூடியது. இதன் மூலம், நமது மனோ வலிமை கூடும். திறன்கள் மேம்படும். நமது ஆற்றல்களை, நம்மால், மிகச் சிறந்த முறையில் உபயோகித்துப் பயன்பெற இயலும்.

தச மஹா வித்யா தேவிகள்

  • காளி – அறியாமை, மாயை ஆகியவற்றை நீக்க உதவும் அன்னை

  • தாரா – நாவன்மை அளிக்கும் அன்னை

  • புவனேஸ்வரி – காலத்தையும், இடத்தையும் கடந்து நிறைந்திருக்கும் வகையில், அமைதியையும் அன்பையும் அளிக்கக் கூடியவர்

  • திரிபுர சுந்தரி – நமது உள்ளுணர்வை தட்டி எழுப்பக் கூடியவர்

  • பைரவி – மன அழுக்குகளை நீக்கி, பாதுகாப்பு அளிப்பவர்

  • சின்னமஸ்தா – அகம்பாவத்தை வென்று, ஆன்மீக ஞானம் அடைய உதவும் தேவி

  • தூமவதி – ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நமது திறனை முழுமையாகப் பயன்படுத்த உதவும் தேவி

  • பகளாமுகி – எதிர்மறைப் பேச்சைத் தடுப்பவர். முயற்சிகளில் வெற்றி அளிப்பவர்

  • மாதங்கி – கலைத் துறையில் முன்னேற உதவுபவர்

  • கமலாத்மிகா– செல்வம் அளிப்பவர். கடவுள் பக்தியை வளர்ப்பவர்

தச மஹா வித்யா ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

தச மஹா வித்யா சக்திகள், ஞானத்தின் வடிவமாகவே திகழ்கிறார்கள். இவ்வுலக விஷயங்களில் வெற்றி பெறவும். ஆன்மீக நிலையில் உயரவும், இவர்களுடன் தெய்வீகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. இவர்கள் அனைவரையும் ஒருசேர போற்றும் விதமாக நடத்தப்படும் தச மஹா வித்யா ஹோமம், இந்த மஹா சக்திகளை வழிபட்டுத் திருப்திப்படுத்தும் நல்ல வாய்ப்பு அளிக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த ராஜ ஹோமம் எனக் கருதப்படும் இந்த ஹோம விழிபாட்டில் பங்கு கொள்வதன் மூலம், நீங்கள், இவ்வுலகில் அசாதாரண செயல்களைக் கூட அனாயாசமாகச் செய்து முடிக்க முடியும். மிகப் பெரும் வெற்றிகளையும் அடைய முடியும்.

பாரம்பரிய முறை ஹோமம்

தச மஹா வித்யா ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தினால் விளையும் பெரும் ஆன்மீக ஆற்றல், உங்கள் வாழ்க்கையையே மிகச் சிறந்த முறையில் மாற்றியமைக்கக் கூடிய திறன் வாய்ந்தது. இதில் பங்குகொள்வதன் மூலம், உங்கள் அதிர்ஷ்டத்தையும், தலைவிதியையும் நீங்களே நிர்ணயித்துக் கொள்ளவும் இயலும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

தச மஹா வித்யா ஹோமத்தின் நற்பலன்கள்
  • பத்து தேவிகளுடன் ஆன்மீகத் தொடர்பு ஏற்படுத்தி, அவர்கள் ஆசி பெற உதவும்

  • இதிலிருந்து கிடைக்கும் சக்தி, வாழ்க்கையில் பல அதிசயங்களையும் ஏற்படுத்தக் கூடியது

  • இதனால் பெரும் வெற்றிகள், அசைக்க முடியாத மனோ வலிமை, தன்னலமற்ற குணம் ஆகியவற்றை அடையலாம்

காணொளிகள்
வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept