US $ 161.00 You Save: US $ 40.25 (25%)
அவஹந்தி ஹோமம் என்பது, குரு வழிபாடாகும். இந்த ஹோம வழிபாட்டை நடத்தி குருவை கௌரவிப்பதன் மூலம், நாம் அறியாமையைப் போக்கி, ஞானத்தை வளர்த்துக் கொள்ள முடியும் என்கிறது, தைத்ரேய உபநிஷத். குருவிடமிருந்தே, புத்தி, ஞானம் போன்றவை நம்மை வந்தடைகின்றன. எனவே, குருவின் நலனுக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள், அவஹந்தி ஹோமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒருவர் அடையக்கூடிய மிகப் பெரிய செல்வம் அறிவு தான். அவஹந்தி ஹோமத்தின் முக்கிய நோக்கம், இந்த அறிவைப் பெற்றுப் பயனடைவது தான். எனவே கல்வியில் முன்னேற்றம் காணவும், பரிட்சைகளின் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவும், இந்த ஹோம வழிபாடு மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.
அவஹந்தி ஹோமத்தில் ஓதப்படும் சக்தி வாய்ந்த மந்திரங்கள், நமக்கு தெய்வீக ஞானத்தை வழங்கக் கூடியவை. இவற்றை உச்சரிப்பது மட்டுமல்ல, நம்பிக்கையுடன் கேட்பது கூட பெரும் நன்மையை விளைவிக்கும். இதன் மூலம் இவ்வுலக சுகங்களைப் பெற முடியும். அத்துடன் ஆன்மீக நாட்டமும் ஏற்படும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதனால், உங்களுக்கும் பயன் விளையும். உலக, சமுதாய நன்மையும் ஏற்படும்.
அவஹந்தி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இந்த வழிபாட்டின் பொழுது, நான்கு விதமான மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இவை, அறிவு, செல்வம், ஞானத்தை போதிக்கும் திறன் ஆகியவற்றை அளித்து, முக்திக்கும் வழி வகுக்கும். இது, சுப தினங்களிலோ, உங்கள் ஜன்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற நாட்களிலோ நடத்தப்படும்.
இந்த ஹோமத்தில் பங்கு கொள்வது, உங்கள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அமைதியை அளிக்கும். குருவின் அருளால், உங்கள் அறிவும், ஞானமும் பெருகும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
கல்வி, அறிவுச் செல்வம், புரிந்து கொள்ளும் திறன், ஞானம் கிடைக்கும்
புதுமையான, பயனுள்ள எண்ணங்கள் தோன்றும்
உடல், மன ஆரோக்கியம் பெருகும்
பேச்சுத் திறன், நினைவாற்றல் கூடும்
வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
சிறந்த உள்ளுணர்வு தோன்றும்
ஆசிரியர்களுக்கும், குருமார்களுக்கும் நன்மை விளையும். அவர்கள் ஆசி கிடைக்கும்
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out