• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  சுக்கிரன் ஹோமம்

  சுக்கிரன் ஹோமம்

  சுக்கிரன் ஹோமம், சுக்கிர பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் சுக்கிரனின் கருணைப் பார்வையை உங்கள் பக்கம் திருப்ப இயலும். உங்களுக்குள் செயலிழந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர இயலும். உங்கள் படைப்பாற்றலை சிறப்பாகப் பயன்படுத்தி, பெயரும், புகழும் அடைய இயலும். மேலும், நீண்ட ஆயுள், செல்வம், மகிழ்ச்சி, வாரிசு, சொத்து மற்றும் நல்ல கல்வியை சுக்கிர பகவான் வழங்குகிறார். இந்த ஹோமத்தின் மூலம் நீங்கள் இவற்றையும் பெற்று, வாழ்க்கையில் மேன்மையுறலாம்.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  சுக்கிரன் ஹோமம்
  (சுக்கிர கிரக ஹோமம்)

  அறிமுகம்

  Venus Homa

  சுக்கிரன் பெண்மையைக் குறிக்கும் கிரகமாகத் திகழ்கிறார். காதல் மற்றும் திருமணம் போன்றவற்றையும் குறிக்கும் இவர், களத்ரகாரகன் என அழைக்கப்படுகிறார். அழகு, கலைகளில் தேர்ச்சி போன்றவற்றின் வடிவமாகவும் விளங்கும் சுக்கிர கிரகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக செய்யப்படுவது, சுக்கிர ஹோமம் ஆகும்.

  சுக்கிர ஹோமம் செய்வதன் மூலம் ஒருவரது, சமூக, பொருளாதார மற்றும் கலாசாரம் தொடர்பான படைப்பாற்றல் வெளிப்படும்.

  சுக்கிர ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  கலைத் துறையில் பிரகாசிக்க விரும்புபவர்கள் அனைவருக்கும், சுக்கிர ஹோமம் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதன் மூலம் சுக்கிரனின் கருணைப் பார்வையை உங்கள் பக்கம் திருப்ப இயலும். உங்களுக்குள் செயலிழந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர இயலும். உங்கள் படைப்பாற்றலை சிறப்பாகப் பயன்படுத்தி, பெயரும், புகழும் அடைய இயலும். மேலும், நீண்ட ஆயுள், செல்வம், மகிழ்ச்சி, வாரிசு, சொத்து மற்றும் நல்ல கல்வியை சுக்கிர பகவான் வழங்குகிறார். இந்த ஹோமத்தின் மூலம் நீங்கள் இவற்றையும் பெற்று, வாழ்க்கையில் மேன்மையுறலாம்.

  பாரம்பரிய முறை ஹோமம்

  சுக்கிர ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இந்த ஹோமம் செய்வதற்கு உகந்த நேரம், வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிர ஹோரை ஆகும். இசை மற்றும் கலைத்துறையில் உள்ளவர்கள், தங்கள் முயற்சிகளில் வெற்றி அடைய இந்த ஹோமத்தில் பங்கு கொள்ளலாம். இதன் மூலம், உங்கள் வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்களை அனுபவித்து மகிழுங்கள்.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.

  நன்மைகள்

  சுக்கிர ஹோமத்தின் நற்பலன்கள்
  • கலைஞர்களுக்கு, குறிப்பாக இசைக்கலைஞர்களுக்கு நன்மை ஏற்படும்

  • உங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள இயலும்

  • நீண்ட ஆயுளை வழங்கும்

  • செல்வம் ஈட்டவும், சொத்துக்கள் சேர்க்கவும் இயலும்

  • நல்ல சந்ததி உருவாகும்

  • நல்ல கல்வி கற்க இயலும்

  • மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இயலும்

  • நல்லதிர்ஷ்டத்தை அடைய இயலும்

  சுக்கிர ஹோம மந்திரம்

  ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஸஹ் ஷுக்ராய நமஹ

  Venus Ceremonies

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here