• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    நவகிரக ஹோமம்

    நவகிரக ஹோமம்

    நவக்கிரக ஹோமம் - 'நவ' என்றால் ஒன்பது மற்றும் 'கிரக' என்பது கோள்களை குறிக்கும். உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பது கிரகங்களே. உங்கள் பிறந்த ஜாதகத்தில் அவற்றின் அமைவைப் பொறுத்து உங்களுடைய கர்மாவை தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்வில் நீங்கள் பெறும் வெற்றி அல்லது தோல்வியின் அளவையும் அறிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களையும் வசப்படுத்தும் வகையில் இந்தச் சிறப்பு ஹோமத்தைச் செய்து துயரங்களிலிருந்து மீண்டு வாருங்கள்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    நவகிரக ஹோமம் (தெய்வீக ஆசி அளிக்கும் ஹோமம்)

    அறிமுகம்
    9 Planets Homa

    நவம் என்பது, எண் ஒன்பதைக் குறிக்கும். கிரகம் என்றால் கோள் எனப் பொருள். வேத ஜோதிடப்படி, நமது வாழ்வில் 9 கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவர் பிறக்கும் பொழுது காணப்படும் இந்த நவகிரகங்களின் நிலைகள் தான், அவருடைய வாழ்க்கைப் பாதையையும் ஏறத்தாழ்வுகளையும், சுக துக்கங்களையும் நிர்ணயிக்கின்றன. நம்மை ஆளும் இந்த 9 கிரகங்களின் ஆசிகளைப் பெற, நவக்கிரக ஹோமம் செய்யப்படுகிறது.

    ஒருவரின் கர்ம வினையைப் பொறுத்துத் தான், அவரது ஜாதகத்தில் இந்த 9 கிரகங்கள் அமைந்திருக்கும். சில நேரங்களில், கிரகங்களின் தோஷம் காரணமாக வாழ்வில் இடையூறுகள் ஏற்படும். இந்த நவகிரக ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், கிரக தோஷங்கள் அகலும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, கிரகங்களை சாந்திப்படுத்தி, நீங்கள் உங்கள் வாழ்வில் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் நீடித்த வெற்றிகள் பெறலாம்.

    நவகிரக ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    நவகிரக ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், நமது அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும், ஒன்பது சக்தி வாய்ந்த கிரகங்களின் அனுக்கிரகத்தைப் பெற இயலும். ஹோமத்தின் மூலம் கிடைக்கும் தெய்வீக ஆற்றல்கள், வாழ்வில் சகல நன்மைகளையும் அளிக்க வல்லவை.

    கிரகங்கள் அனைத்தும், பலவேறு பலன்களை அளிக்க வல்லவை. அவை

    • சூரியன் – சிறந்த ஆரோக்கியம்
    • சந்திரன் - வெற்றி
    • செவ்வாய் – வளம் மற்றும் செல்வம்
    • புதன் - அறிவு
    • வியாழன் (குரு) – கல்வி
    • சுக்கிரன் – கலை, இசை
    • சனி – ஒழுக்கம் மற்றும் வைராக்கியம்
    • ராகு – பலம் நிறைந்த வாழ்க்கை
    • கேது – வளங்கள்
    பாரம்பரிய முறை ஹோமம்

    நவகிரக ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு கிரகமும் அதற்குரிய முறையில், தகுந்த மந்திரங்களுடன் ஆராதிக்கப்படும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் உங்கள் தினசரி வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, மன அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ முடியும்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.

    நன்மைகள்

    நவகிரக ஹோமத்தின் நற்பலன்கள்
    • 9 கிரகங்களின் அனுக்கிரகம் கிடைக்கும்

    • துன்பங்களை எதிர்கொள்ள இயலும்

    • தடைகளை அகற்ற முடியும்

    • அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண இயலும்

    • அதிர்ஷ்டமும், நன்மையும் பெற இயலும்

    • வெற்றிகரமான வாழ்க்கை வாழ இயலும்

    • மன அழுத்தத்தை சமாளிக்க முடியும்

    • உங்கள் செயல்திறனை நிரூபிக்க இயலும்

    • வாழ்க்கையில் வளர்ச்சி பெற இயலும்

    • வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி காண முடியும்

    • கல்வியில் வெற்றி, செழிப்பு, நீண்ட ஆயுள் அடைய முடியும்

    • வியாபாரிகள் வளமாக வாழ இயலும்

    நவகிரக ஹோம மந்திரம்  

    நம ஆதித்யாய சோமாய மங்களாய புதாய ச

    குரு சுக்ர சனிப்யஷ்ச் ச

    ராஹவே கேதவே நமஹ

    9 Planets Ceremonies

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here