sign in Account
x
x
Search
x
நவகிரக ஹோமம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமம்

நவகிரக ஹோமம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமம்

வான்வெளியில் சுழலும் நவகிரகங்களாக போற்றப்படும் ஒன்பது கோள்கள், நமது வாழ்க்கையில் தினசரி நாம் செய்யும் கர்மாக்களை நிர்ணயிக்கின்றன. ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறாரோ, அதுவே அவரது ஜன்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நவகிரக ஹோமம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமம் என்பது, இந்த சக்தி வாய்ந்த நவகிரகங்கள் மற்றும் ஒருவரது ஜன்ம நட்சத்திரத்துடன் ஆன்மீகத் தொடர்பு ஏற்படுத்தவல்ல, சக்தி வாய்ந்த வேத கால வழிபாடாகும்.
US $ 1093.00
இலவச ஷிப்பிங்

வெற்றிக்கும், சந்தோஷத்துக்கும் நவகிரகங்கள் மற்றும் ஜன்ம நட்சத்திரத்தின் ஆசி வேண்டும் ஹோமம்

அறிமுகம்

Durga Homa

வான்வெளியில் சுழலும் நவகிரகங்களாக போற்றப்படும் ஒன்பது கோள்கள், நமது வாழ்க்கையில் தினசரி நாம் செய்யும் கர்மாக்களை நிர்ணயிக்கின்றன. ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறாரோ, அதுவே அவரது ஜன்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நவகிரக ஹோமம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமம் என்பது, இந்த சக்தி வாய்ந்த நவகிரகங்கள் மற்றும் ஒருவரது ஜன்ம நட்சத்திரத்துடன் ஆன்மீகத் தொடர்பு ஏற்படுத்தவல்ல, சக்தி வாய்ந்த வேத கால வழிபாடாகும்.

இரண்டு ஹோமங்களை சேர்த்து நடத்தப்படும் இந்த கூட்டு ஹோம வழிபாடு, வேத கால ஆகம நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் ஜாதகத்தின் முக்கிய அம்சங்களுடன் நீங்கள் நல்ல முறையில் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதனால், கிரகங்களின் ஆதரவுடன் உங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்துக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது.

நவக்கிரக ஹோமம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

இந்த ஹோமத்தில் ஓதப்படும் வேத மந்திரங்கள், தெய்வீக ஆற்றல் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியவை. இவை ஒரு பலமான கவசம் போல உங்களை சூழ்ந்து காணப்பட்டு , எதிர்மறை சக்திகள், துரதிர்ஷ்டம் போன்றவை, உங்களை அணுகாமல் தடுத்து பாதுகாக்கும். மேலும், உங்கள் ஜன்ம நட்சத்திரத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட சில கிரக அமைப்புகளும், சில தோஷங்களை உருவாக்கலாம். இவற்றால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும் போக்கும் வல்லமை, மிக விசேஷமான இந்த ஹோம மந்திரங்களுக்கு உண்டு. இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, கடும் நோய்களிலிருந்தும் குணம் பெற்று, ஆரோக்கியம் பெற்றிடுங்கள். உங்கள் தலையெழுத்தையே நல்ல முறையில் மாற்றியமைத்து, பெருவாழ்வு வாழுங்கள்.

பாரம்பரிய முறை ஹோமம்

நவகிரக ஹோமம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. உங்கள் ஜன்ம நட்சத்திரம், உங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அதை திருப்திப்படுத்தக் கூடிய இந்த ஹோமம் பல நன்மைகளைத் தரக் கூடியது. பல வகைகளிலும் பயனளிக்க வல்லது.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

நவக்கிரக ஹோமம் மற்றும் நட்சத்திர சாந்தி ஹோமத்தின் நற்பலன்கள்

  • சாதகமற்ற கிரகங்களின் பாதிப்புகள் நீங்கும்

  • வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பங்களை மிக சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்

  • வாழ்க்கையில் அமைதி, வெற்றி, சந்தோஷம் பெற முடியும்

காணொளிகள்

We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept