பூஜை என்ற சமஸ்கிருத சொல், இரண்டு வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது. இதற்கு, 'மனதைச் சுத்தப்படுத்தி, தீய குணங்கள் அல்லது கர்மாக்களை நீக்கி, நல்ல குணங்களைப் பெறுவதற்கு' என்று பொருள் கொள்ளலாம். இதில், வேதமறிந்த, தகுதி வாய்ந்த எங்கள் புரோகிதர் குழுவினர், நியமத்துடன், முறையாக மந்திர உச்சாடனம் செய்து, தெய்வங்களை வழிபட்டு, அவர்களை திருப்திப் படுத்துகின்றனர். இதனால் இந்தப் பூஜைகள் புனிதமடைகின்றன. மிகச் சரியான நாட்களிலும், நேரங்களிலும் நடத்தப்படும் இந்த வழிபாடுகள், நல்ல பலனும் அளிக்கின்றன.