அக்னி எனப்படும் நெருப்பு, தூய்மைப்படுத்தும் சக்தியாக விளங்குகிறது. ஒன்றை உயர்ந்தவையாக மாற்றும் சக்தியாகவும் அது திகழ்கிறது. தெய்வீக சக்திகளுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்தும் திறனும் அதற்கு உள்ளது. “இந்த அக்னியைக் கொண்டு செய்யப்படும் யாகம் அல்லது ஹோமம், தெய்வங்களை மகிழ்வடையச் செய்யும். இதனால் மனிதர்களுக்குத் தெய்வ அருள் கிடைக்கும். ஹோமங்களால் இறை சக்திகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உருவாகும் இது போன்ற கூட்டுறவால், வாழ்க்கை வளம் பெறும்.” (பகவத் கீதை, 3 ஆவது அத்யாயம், 11 ஆவது ஸ்லோகம்).
வேதங்களைக் நன்கு கற்றறிந்த எங்கள் புரோகிதர்கள், இந்த ஹோமங்களை நிகழ்த்துவதற்கு மிகவும் ஏற்ற நாட்களைத் தேர்ந்தெடுத்து, மிகச் சரியான மந்திரங்களை ஓதி, தகுந்த பிரசாதங்களைப் படைத்து, எந்த கடவுளைக் குறித்து அந்த ஹோமம் செய்யப்படுகிறதோ, அந்த கடவுளை வழிபடுவார்கள். இதனால், உங்கள் ஆசைகள் நிறைவேறும். விரும்பிய பலன் கிடைக்கும்.
ஷரப ஹோமம் மிகவும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். பட்சிகளின் ராஜாவான ஷரபத்தின் ஆசீர்வாதங்களை இதன் மூலம் பெறலாம்.பக்தர்களை பாதுகாக்கும் சரபேஸ்வரர் உக்ரமான தெய்வம் ஆகும். எதிர்மறை ஆற்றல்கள், உடல்நலப் பிரச்சினைகள், உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் நபர்கள் அல்லது சூழ்நிலைகள் ஆகியவற்றிலிருந்து உங்களை காக்க இந்த ஹோமம் உதவி புரிகின்றது.
மூல நட்சத்திரம், சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘ஆண் மூலம் அரசாளும்’ என, இதன் பெருமையைப் பேசும் பழமொழிகளும் உண்டு. மூல நட்சத்திர ஹோமம், இந்த நட்சத்திரத்தைக் குறித்துச் செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோம வழிபாடாகும். இந்த ஹோமத்தின் வழியே, அந்த நட்சத்திரத்தை சாந்தப்படுத்தி சாதகமான விளைவுகளைப் பெற முடியும். இந்த நட்சத்திர ஹோமத்தில் பங்கு கொண்டு, இதன் தெய்வீக ஆற்றலை உங்கள் நாடி நரம்பெல்லாம் பரவச் செய்து, எதிர்மறைத் தாக்கங்களை நீக்கி, வாழ்வில் வளம் பெறுங்கள்.
பார்வதி ஹோமம் சக்தி மிக்க ஹோமங்களுள் ஒன்றாகும். இந்த ஹோமம் செய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் அன்னையான பார்வதி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெறலாம். ஒரு இனிமையான மற்றும் இணக்கமான குடும்பம்தான் அமைதி, மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கிறது. பார்வதி ஹோமத்திலிருந்து உருவாகும் தெய்வீக சக்தி உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் இணக்கத்தையும் ஏற்படுத்தும். எண்ணிலடங்காத நற்பலன்கள் கிடைக்கும்.
ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சிவபெருமானின் அருளாசி பெறுவதற்காக நிகழ்த்தப்படுகிறது. இந்த வழிபாட்டின் மூலம், மரண பயம் அகலும், மோட்சம் அடைய வழி பிறக்கும். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க தெய்வீகக் சக்தி, நமது ஒவ்வொரு அணுவிலும் கலந்து, நம் மனதிலும், நம்மைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அறியாமையை விலக்குகிறது.
காயத்ரி, சாவித்ரி, மற்றும் சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் ஒருங்கிணைந்த நற்பன்புகளாகிய நல்லுணர்வு, நல்ல மனம் மற்றும் நல்ல வாக்கு ஆகியவற்றை வேண்டி செய்யும் ஹோமம் காயத்ரி ஹோமம் ஆகும். மூன்று தெய்வங்களும் இணைந்து உலகை ஆள்வதாலும், உயிர்கள் அனைத்தின் ஆற்றலாக விளங்குவதாலும் இந்த ஹோமம் சுக்ருத ஹோமம் என்று அழைக்கபடுகின்றது.
உமா மகேஸ்வர ஹோமம், சிவனையும் சக்தியையும் ஒரு சேர வழிபடும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிவன் (மகேஸ்வரன்) மற்றும் அவரது துணைவியான சக்தி (உமா) ஆகிய இரு தெய்வங்களின் ஆசீர்வாதங்களைப் பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. உமா மகேஸ்வர ஹோமத்தைச் செய்வதால் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஏற்படும் உறவுச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதோடு ஒருவருக்கொருவர் இணக்கமான உறவை வளர்த்துக்கொள்ள இயலும்.
காக்கும் கடவுள் மகா விஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். இந்த சக்ராயுதம், சுதர்சனராக வழிபடப்படுகிறார். பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்த சக்தி வாய்ந்த ஆயுதம், பெரும் ஆற்றல் வாய்ந்தது. தீயதை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோமம், சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.
ருத்ர ஹோமம் – இந்த ஹோமம் ஒன்பது கிரகங்களை சாந்திப்படுத்தி அதன் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து நன்மை தரும் பலன்களை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் இதன் மூலம் லௌகீக மற்றும் ஆன்மீக இன்பங்களைப் பெற இயலும்.
சந்தான கோபால ஹோமம் கிருஷ்ண பகவானின் குழந்தை வடிவமான சந்தான கோபாலனை திருப்திபடுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த ஹோமமானது குழந்தை செல்வத்தை வழங்கி உங்களை ஆசீர்வதிப்பதற்கும், எதிர்பாரா கருச்சிதைவுகளுக்கு ஆளாகதவாறு தாய்மார்களைப் பாதுகாப்பதற்கும், குழந்தையைப் பாதுகாப்பான முறையில் பெற்றெடுப்பதற்கும் மிகவும் உதவியாக உள்ளது.
சரஸ்வதி ஹோமம், கலை வாணி என்றும் கலைமகள் என்றும் போற்றப்படும், சரஸ்வதி தேவி குறித்து செய்யப்படும் ஹோமம் ஆகும். பத்மாசனம் எனப்படும். தாமரையை தன் ஆசனமாகக் கொண்டு கையில் வீணை ஏந்தியிருக்கும் சரஸ்வதி தேவி, கல்வி மற்றும் கலைகள் அனைத்துக்கும் சொந்தமானவள். ஒலி, இசை, பாடல், ஞானம், மொழி ஆகியவற்றின் வடிவாக இருப்பவள். புத்தி கூர்மை மற்றும் ஞாபக சக்தி பெறவும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும் இந்த ஹோமம் செய்யப்படுகின்றது.
லக்ஷ்மி நாராயண ஹோமம் – இந்த ஹோமம் ஏராளமான பொருட்செல்வங்கள் பெற உதவும். ஸ்ரீமன் நாராயணின் இதய கமலத்தில் உறைவிடம் கொண்டவள் ஸ்ரீ லக்ஷ்மி தேவி. ஸ்ரீ லக்ஷ்மி தேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் தனது பக்தர்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் வழங்குபவர்கள். இந்த ஹோமத்தை செய்வதன் மூலம் கடன்கள் விலகும், பொருளாதார கஷ்டங்கள் விலகும், உறவுப் பிரச்சினைகள் விலகும்.
முருகர் ஹோமம் சக்தி வாய்ந்த ஹோமங்களில் ஒன்று ஆகும். எதிரிகள், மற்றும் போட்டியாளர்களிடமிருந்து பாதுகாப்பு பெற முருகனின் ஆசீர்வாதங்களைப் பெறலாம். வழக்குகள் மற்றும் பிற சட்ட சிக்கல்களைத் தவிர்க்க பிரார்த்தனைகள் மூலம் அனுக்கிரகம் பெறலாம். கடன்கள் மற்றும் நோய்களை சமாளிக்க முருகப்பெருமான் உதவியாக இருப்பார்.
பார்வதி சௌந்தர்ய ஹோமம் அன்பு மற்றும் அழகின் உருவமாக இருக்கும் பார்வதி தேவியின் அருளாசிகளைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. பார்வதி ஹோமம், அழகை அதிகரித்து, உடலை மிளிர வைக்கக் கூடியது. அத்துடன் கூட, தூய எண்ணங்களை ஊக்குவித்து, உங்களுக்குள் மறைந்திருக்கும் வசீகரத்தையும் வெளிக் கொணர உதவுகிறது. நல்ல தோற்றத்தையும், பொலிவையும் பெற விரும்பும் அனைவருக்கும், இது ஒரு நல் வாய்ப்பாக அமைகிறது. இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, அகத்திலும், புறத்திலும் அழகும், பொலிவும் பெற்று மகிழுங்கள்.
லக்ஷ்மி ஹோமம் – இந்த ஹோமம் ஏராளமான பொருள் வளம் மற்றும் செல்வ வளம் பெற, தெய்வத்தின் ஆசியை பெற்றுத் தரும். ஸ்ரீமன் நாராயணின் இதயக் கமலத்தில் வாழும் ஸ்ரீ லக்ஷ்மி தேவி தனது பக்தர்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் வழங்கி அருள்பாலிக்கிறார். கடன்களிலிருந்து மீளவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் செல்வச் செழிப்பை அடையவும் இந்த ஹோமத்தை செய்து லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறுங்கள்.
தன்வந்திரி ஹோமம், தெய்வீக மருத்துவர் என்று அழைக்கப்படுகின்ற, பிரபஞ்சத்தின் பாதுகாவலரான விஷ்ணுவின் அவதாரமாக விளங்குகின்ற, தன்வந்திரி பகவானின் ஆசிகளைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த ஹோமத்தின் பொழுது வெளியாகும் ஆற்றல்கள் சக்தி வாய்ந்தவை. நம்மைப் பாதுகாக்கும் கவசமாக செயல்படக்கூடியவை. நோய் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளை நீக்க வல்லவை. இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, தன்வந்தரி பகவானின் பரிபூரண அருளைப் பெற்று, நோயற்ற நீண்ட ஆயுளைப் பெற்று மகிழுங்கள்
துர்கா ஹோமம் - பிரபஞ்சத்தைக் காத்தருளும் பார்வதி தேவியின், உக்கிர வடிவமாக விளங்கும் துர்கா தேவியின் ஆசிகளைப் பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. மண வாழ்க்கை மற்றும், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க துர்கா தேவியைச் சரணடையுங்கள். இந்த ஹோமத்தை நிகழ்த்துவதன் மூலம், நம் மனதில் ஏற்படும் கோபம், பொறாமை, ஆணவம், சுயநலம், வெறுப்பு போன்ற தீமைகள் அழிந்தொழியும். திருமண வாழ்க்கையிலும், உறவுகளிலும் எழும் பிரச்சினைகள் தீரும்.
கணபதி ஹோமம், உங்கள் வெற்றிப் பாதையில் ஏற்படும் தடைகளை அகற்றும், மேலும் அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். உறுதியான வெற்றிக்கு எந்தவொரு புதிய முயற்சியையும் ஆரம்பிக்கும்போதும் விநாயகரின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
ஹனுமன் ஹோமம் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். சிவபெருமானின் தெய்வீக அவதாரம் அல்லது பதினொன்றாம் ருத்ரன் என்று அழைக்கப்படும் ஹனுமன், வலிமை மற்றும் விசுவாசத்தின் அடையாளமாக விளங்குகிறார். ஹனுமனின் தெய்வீக ஆசீர்வாதத்தால் தைரியத்தையும் மன அமைதியையும் பெற முடியும். எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத அபாயங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். சாபங்கள் மற்றும் திருஷ்டி காரணமாக ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க முடியும்
கால பைரவ ஹோமம் வெற்றி மற்றும் ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு உங்கள் நேரத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக காலத்தின் கடவுளான கால பைரவரின் அருளாசியைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த ஹோமத்தைச் செய்வதால் கால பைரவரின் ஆசீர்வாதங்களைப் பெறுவதோடு உங்கள் நேரத்தைச் சரியான முறையில் வெற்றிகரமாகப் பராமரிப்பதற்கும் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவுவதோடு வெற்றி அடைவதற்கும் ஆக்கப் பூர்வமாக செயல்படுவதற்கும் உதவியாக இருக்கிறது.
குக்குட என்ற வடமொழிச் சொல், சேவல் என்ற பொருள்படும். இந்த சொல், தமிழ்க் கடவுள் முருகனின் கையில் விளங்கும் கொடியின் தெய்வீகச் சின்னமாகிய சேவலைக் குறிக்கிறது. முருகப்பெருமானின் தெய்வீக ஆற்றல் நிறைந்த சேவல் கொடியானது, எதிர்மறை ஆற்றலையும், தீமையையும் அழிக்க வல்லது. குக்குட ஹோமம் என்ற சக்தி வாய்ந்த வழிபாடு, இந்த தெய்வீக சேவலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
செல்வ வளம் பெருக, பொருளாதார நிலை மேம்பட, வெற்றி பெற இந்த ஹோமம் நடத்தபடுகின்றது. இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும், வாழ்வில் ஆஸ்தியை பெருக்கிக் கொள்வதன் முயற்சியில் ஏற்படும் தடைகளை சமாளிக்கலாம்.
சக்தியின் ஸ்வரூபமான பார்வதி தேவி, சிவ பெருமானின் சரி பாதி அம்சமாக விளங்குபவள். சிவபெருமான், சக்திக்கு அளித்த ஸ்வயம்வர பார்வதி மந்திரம் திருமணத் தடைகளை வேரறுக்க வல்லது. கிரக தோஷம் காரணமாக ஏற்படும் திருமண தோஷம் அல்லது திருமணத் தடையை அகற்றுவதற்காக, ஸ்வயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்படுகின்றது.
ப்ரத்யங்கிரா ஹோமம் மூலம் ப்ரத்யங்கிரா தேவியின் ஆசிர்வாதங்களைப் பெறமுடியும். ப்ரத்யங்கிரா ஹோமத்தை நிகழ்த்துவதினால், வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை நீங்கள் பெறுவீர்கள். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் சக்தியானது தீமைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் -அதாவது எதிரிகள், விபத்துக்கள், திருஷ்டி என எந்த வடிவத்தில் இருந்தாலும் அவற்றை விரட்டுவதற்கு உதவியாக இருக்கிறது. நீங்கள் அன்னையின் அருளால் அமைதி மற்றும் , செல்வச் செழிப்பை பெறுவீர்கள். தேவயின் அருள் உங்களை அரண் போல் பாதுகாக்கும்.
சண்டி ஹோமம், உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டி தேவியைக் குறித்து செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழ விடாமல் நம்மைத் தடுக்கும் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றைப் போக்குவதற்கும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களைக் களைவதற்கும், உடல், ஆன்மா போன்ற இரண்டையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஹோமம் வரப்பிரசாதமாக விளங்குகிறது.
மேலும் படிக்க ...
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out