AstroVed Menu
x
x
search
x

Store

ஹோமங்கள்

அக்னி எனப்படும் நெருப்பு, நாம் வாழும் இவ்வுலகை தெய்வீக சக்திகளுடன் இணைக்கும் பாலமாக விளங்குகிறது. இது உணவு, தண்ணீர் போன்றவற்றைத் தூய்மைப்படுத்த வல்லது. சாதாரண பொருட்களையும், தங்கம் போல மதிப்புள்ளதாக மாற்றும் சக்தியும் இதற்கு உள்ளது. இந்த ஹோமத்தில், அக்னியின் உதவியுடன் உங்கள் பிரார்த்தனைகள் விண்வெளியில் செலுத்தப்பட்டு, அவை தெய்வங்களை அடைகின்றன. இதனால் மகிழும் இறை சக்திகள், அவர்களது தெய்வீக ஆசிகளை உங்களுக்கு தடையின்றி வழங்குவார்கள். இது உங்களுக்கு பாதுகாப்பு அளித்து, வாழ்க்கையில் பல நலன்களைச் சேர்க்கும். எனினும், மிகவும் ஏற்ற நாட்களைத் தேர்ந்தெடுத்து, மிகச் சரியான மந்திரங்களை ஓதி, தகுந்த பிரசாதங்களைப் படைப்பது என்பது, இந்த ஹோமங்களை நிகழ்த்தி, இதன் மூலம் தெய்வங்களை வழிபடுவதற்கு மிகவும் அவசியமாகும். உங்களது வசதிக்காக, இந்த ஹோமங்களை, நவக்கிரக ஹோமங்கள், தெய்வங்களைக் குறித்துச் செய்யப்படும் பிரதான ஹோமங்கள், சிறப்பு ஹோமங்கள் என நாங்கள் வகைப்படுத்தியிருக்கிறோம்.

Previous 1 - 25 of 52 Products Next

சூரிய ஹோமம் கிரகங்களுக்கு எல்லாம் அரசனாகவும் பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் ஆற்றலாகவும் உள்ள சூரிய பகவானின் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. சூரிய பகவானுக்காக செய்யப்படும் இந்த ஹோமத்தினால் வாழ்க்கையில் உங்களை வாட்டும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெல்லவும், சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் வழி பிறக்கிறது. எனவே, சூரிய ஹோமத்தை உங்கள் வெற்றிக்கான படிக்கட்டு எனலாம். உங்கள் வாழ்க்கை வளம் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு உதவியாக இருக்கிறது.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

சந்திர ஹோமம் சந்திர பகவானின் ஆசீர்வாதங்களைப் பெற உதவுகிறது. சந்திரன் உங்களுடைய மனதையும் உணர்ச்சிகளையும் ஆட்சி செய்து வெற்றியைத் தருபவர். கிரகங்களின் ராணி என்று கருதப்படுபவர். ஒருவரது உணர்ச்சி, மனநிலை போன்றவற்றைத் தீர்மானித்து, சில நேரங்களில் அசாதாரணமான சிந்தனை, நடத்தை போன்றவற்றுக்கு வழி வகுக்கிறார். அவரைக் குறித்த இந்த சந்திர ஹோமத்தை நடத்துவதன் மூலம், ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனின் அனுகூலமற்ற நிலையால் காணப்படும் தோஷங்களை நிவர்த்தி செய்ய இயலும். உங்கள் தாயுடன் உள்ள உறவை மேம்படுத்தும்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

செவ்வாய் என்றழைக்கப்படும் அங்காரகன் சிகப்பு கிரகம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமடைந்திருந்தாலும் அனுகூலமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், (கிரெடிட்கார்டு, மருத்துவம், அடமானம்) நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். செவ்வாய் உச்சத்தில் இருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். செவ்வாய் ஹோமம் அல்லது அங்காரக ஹோமம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி நலன் உண்டாகும்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

புதன் ஹோமம் மூலம் புத பகவானின் ஆசீர்வாதங்கள் பெறப்படுகிறது. உங்கள் மனம், உங்கள் தொடர்பு திறன், நகைச்சுவை உணர்வு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை புதன் கிரகம் ஆளுகின்றது. இதன் மூலம், நல்ல புத்தி கூர்மையும், பேச்சாற்றலும் கிடைக்கப்பெறும். எழுத்து, ஓவியம், தத்துவம் மற்றும் கற்றல் திறன்கள், நம் வசப்படும். உங்கள் பேச்சுத் திறனை வளர்ப்பதோடு நல் வாழ்வையும் சகல சௌபாக்கியங்களையும் இந்த ஹோமம் உறுதி செய்யும்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

குரு ஹோமம் குரு பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. குரு பகவான் புத்திரகாரகர் மற்றும் தனகாரகர் ஆவார். அதாவது செல்வத்தைக் குறிப்பவர். மிகப் பெரிய கிரகமாகத் திகழும் குரு, உயர்ந்த குண நலன்கள், நேர்மை, நம்பிக்கை, மற்றும் விருப்பத்தையும் குறிக்கிறார். இவரைக் குறித்துச் செய்யப்படும் ஹோமம் குரு ஹோமம் ஆகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க, கற்பனை சக்தி அதிகரிக்க, அறிவுத்திறன் பெற மற்றும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க இந்த குரு ஹோமம் செய்யப்படுகிறது.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

சுக்கிரன் ஹோமம், சுக்கிர பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் சுக்கிரனின் கருணைப் பார்வையை உங்கள் பக்கம் திருப்ப இயலும். உங்களுக்குள் செயலிழந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர இயலும். உங்கள் படைப்பாற்றலை சிறப்பாகப் பயன்படுத்தி, பெயரும், புகழும் அடைய இயலும். மேலும், நீண்ட ஆயுள், செல்வம், மகிழ்ச்சி, வாரிசு, சொத்து மற்றும் நல்ல கல்வியை சுக்கிர பகவான் வழங்குகிறார். இந்த ஹோமத்தின் மூலம் நீங்கள் இவற்றையும் பெற்று, வாழ்க்கையில் மேன்மையுறலாம்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

சனி ஹோமம் சனி பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. சனி என்பது கர்மாவைக் குறிக்கும் கிரகம் ஆகும. இந்த ஹோமத்தை செய்து சனி பகவானை திருப்திப் படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றங்களைக் காணலாம். எதிர்மறைத் தாக்கங்களை விலக்கி, நன்மை தரும் முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக, சனிக்கிழமைகளில் சனி பகவானை இவ்வாறு வழிபடுவதனால், மேலும் சிறந்த பலன்களை அடையலாம்.

US $ 154.00 Enter Your Amount US $

ராகு ஹோமம் ராகு பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த விசேஷமான ஹோமத்தைச் செய்வதன் மூலம், உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும், புதிய வாய்ப்புகளை அடையவும், வாழ்வின் வளங்களைப் பெறவும் முடியும். நீங்கள் விரும்பினால், மிகத் தீவிரமான எதிரியுடன் கூட, நீங்கள் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். இந்த ஹோமத்தினால், உங்களிடம் நற்பண்புகள் பல தோன்றி, அதன் மூலம் உறுதியான இலட்சியத்துடன், நீங்கள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ முடியும்.

US $ 154.00 Enter Your Amount US $

கேது ஹோமம் கேது பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இரண்டு நிழல் கிரகங்களில் ஒன்றான கேது உங்களுக்கு ஆன்மீக ஞானத்தை தருவதோடு உங்களுக்குள் மறைந்து கிடக்கும் நேர்மறையான நல்ல பண்புகளை வெளியே கொண்டு வருவதற்கு உதவும் கிரகம் ஆகும். மேலும் நீங்கள் சாதனைகளை படைக்கவும் உதவி செய்யும் கிரகம் கேது ஆகும். கேது ஹோமத்தைச் செய்து சகல சௌபாக்கியங்களையும் சிறந்த ஆரோக்கியத்தையும் பெற்று பொருளாதார அதிர்ஷ்டங்களையும் பெறுங்கள்.

US $ 154.00 Enter Your Amount US $

லக்ஷ்மி ஹோமம் – இந்த ஹோமம் ஏராளமான பொருள் வளம் மற்றும் செல்வ வளம் பெற, தெய்வத்தின் ஆசியை பெற்றுத் தரும். ஸ்ரீமன் நாராயணின் இதயக் கமலத்தில் வாழும் ஸ்ரீ லக்ஷ்மி தேவி தனது பக்தர்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் வழங்கி அருள்பாலிக்கிறார். கடன்களிலிருந்து மீளவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் செல்வச் செழிப்பை அடையவும் இந்த ஹோமத்தை செய்து லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறுங்கள்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

தன்வந்திரி ஹோமம், தெய்வீக மருத்துவர் என்று அழைக்கப்படுகின்ற, பிரபஞ்சத்தின் பாதுகாவலரான விஷ்ணுவின் அவதாரமாக விளங்குகின்ற, தன்வந்திரி பகவானின் ஆசிகளைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த ஹோமத்தின் பொழுது வெளியாகும் ஆற்றல்கள் சக்தி வாய்ந்தவை. நம்மைப் பாதுகாக்கும் கவசமாக செயல்படக்கூடியவை. நோய் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளை நீக்க வல்லவை. இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, தன்வந்தரி பகவானின் பரிபூரண அருளைப் பெற்று, நோயற்ற நீண்ட ஆயுளைப் பெற்று மகிழுங்கள்

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

துர்கா ஹோமம் - பிரபஞ்சத்தைக் காத்தருளும் பார்வதி தேவியின், உக்கிர வடிவமாக விளங்கும் துர்கா தேவியின் ஆசிகளைப் பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. மண வாழ்க்கை மற்றும், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க துர்கா தேவியைச் சரணடையுங்கள். இந்த ஹோமத்தை நிகழ்த்துவதன் மூலம், நம் மனதில் ஏற்படும் கோபம், பொறாமை, ஆணவம், சுயநலம், வெறுப்பு போன்ற தீமைகள் அழிந்தொழியும். திருமண வாழ்க்கையிலும், உறவுகளிலும் எழும் பிரச்சினைகள் தீரும்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

கணபதி ஹோமம், உங்கள் வெற்றிப் பாதையில் ஏற்படும் தடைகளை அகற்றும், மேலும் அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். உறுதியான வெற்றிக்கு எந்தவொரு புதிய முயற்சியையும் ஆரம்பிக்கும்போதும் விநாயகரின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

கர்ப்பரட்சாம்பிகை ஹோமம் செய்து கருவினை பாதுகாக்கும் கர்ப்பரட்சாம்பிகையின் அருளாசிகளைப் பெற்றிடுங்கள். இந்த ஹோமத்தை நிகழ்த்துவதால் சந்ததி இல்லாமல் வாடும் தம்பதியருக்கு வம்ச வாரிசு கிடைக்கப்பெற்று ஆசீர்வதிக்கப் படுவார்கள். குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தாய்மார்களைப் பாதுகாப்பதோடு, வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக வளர்வதற்கும் இந்த ஹோமம் உதவுகிறது.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

ஹனுமன் ஹோமம் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். சிவபெருமானின் தெய்வீக அவதாரம் அல்லது பதினொன்றாம் ருத்ரன் என்று அழைக்கப்படும் ஹனுமன், வலிமை மற்றும் விசுவாசத்தின் அடையாளமாக விளங்குகிறார். ஹனுமனின் தெய்வீக ஆசீர்வாதத்தால் தைரியத்தையும் மன அமைதியையும் பெற முடியும். எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத அபாயங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். சாபங்கள் மற்றும் திருஷ்டி காரணமாக ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க முடியும்

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

கால பைரவ ஹோமம் வெற்றி மற்றும் ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு உங்கள் நேரத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக காலத்தின் கடவுளான கால பைரவரின் அருளாசியைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த ஹோமத்தைச் செய்வதால் கால பைரவரின் ஆசீர்வாதங்களைப் பெறுவதோடு உங்கள் நேரத்தைச் சரியான முறையில் வெற்றிகரமாகப் பராமரிப்பதற்கும் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவுவதோடு வெற்றி அடைவதற்கும் ஆக்கப் பூர்வமாக செயல்படுவதற்கும் உதவியாக இருக்கிறது.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

குக்குட என்ற வடமொழிச் சொல், சேவல் என்ற பொருள்படும். இந்த சொல், தமிழ்க் கடவுள் முருகனின் கையில் விளங்கும் கொடியின் தெய்வீகச் சின்னமாகிய சேவலைக் குறிக்கிறது. முருகப்பெருமானின் தெய்வீக ஆற்றல் நிறைந்த சேவல் கொடியானது, எதிர்மறை ஆற்றலையும், தீமையையும் அழிக்க வல்லது. குக்குட ஹோமம் என்ற சக்தி வாய்ந்த வழிபாடு, இந்த தெய்வீக சேவலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

லக்ஷ்மி நாராயண ஹோமம் – இந்த ஹோமம் ஏராளமான பொருட்செல்வங்கள் பெற உதவும். ஸ்ரீமன் நாராயணின் இதய கமலத்தில் உறைவிடம் கொண்டவள் ஸ்ரீ லக்ஷ்மி தேவி. ஸ்ரீ லக்ஷ்மி தேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் தனது பக்தர்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் வழங்குபவர்கள். இந்த ஹோமத்தை செய்வதன் மூலம் கடன்கள் விலகும், பொருளாதார கஷ்டங்கள் விலகும், உறவுப் பிரச்சினைகள் விலகும்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

முருகர் ஹோமம் சக்தி வாய்ந்த ஹோமங்களில் ஒன்று ஆகும். எதிரிகள், மற்றும் போட்டியாளர்களிடமிருந்து பாதுகாப்பு பெற முருகனின் ஆசீர்வாதங்களைப் பெறலாம். வழக்குகள் மற்றும் பிற சட்ட சிக்கல்களைத் தவிர்க்க பிரார்த்தனைகள் மூலம் அனுக்கிரகம் பெறலாம். கடன்கள் மற்றும் நோய்களை சமாளிக்க முருகப்பெருமான் உதவியாக இருப்பார்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

பார்வதி சௌந்தர்ய ஹோமம் அன்பு மற்றும் அழகின் உருவமாக இருக்கும் பார்வதி தேவியின் அருளாசிகளைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. பார்வதி ஹோமம், அழகை அதிகரித்து, உடலை மிளிர வைக்கக் கூடியது. அத்துடன் கூட, தூய எண்ணங்களை ஊக்குவித்து, உங்களுக்குள் மறைந்திருக்கும் வசீகரத்தையும் வெளிக் கொணர உதவுகிறது. நல்ல தோற்றத்தையும், பொலிவையும் பெற விரும்பும் அனைவருக்கும், இது ஒரு நல் வாய்ப்பாக அமைகிறது. இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, அகத்திலும், புறத்திலும் அழகும், பொலிவும் பெற்று மகிழுங்கள்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

ருத்ர ஹோமம் – இந்த ஹோமம் ஒன்பது கிரகங்களை சாந்திப்படுத்தி அதன் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து நன்மை தரும் பலன்களை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் இதன் மூலம் லௌகீக மற்றும் ஆன்மீக இன்பங்களைப் பெற இயலும்.

US $ 154.00 Enter Your Amount US $
Free Shipping

செல்வ வளம் பெருக, பொருளாதார நிலை மேம்பட, வெற்றி பெற இந்த ஹோமம் நடத்தபடுகின்றது. இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும், வாழ்வில் ஆஸ்தியை பெருக்கிக் கொள்வதன் முயற்சியில் ஏற்படும் தடைகளை சமாளிக்கலாம்.

US $ 175.00 Enter Your Amount US $
Free Shipping

ப்ரத்யங்கிரா ஹோமம் மூலம் ப்ரத்யங்கிரா தேவியின் ஆசிர்வாதங்களைப் பெறமுடியும். ப்ரத்யங்கிரா ஹோமத்தை நிகழ்த்துவதினால், வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை நீங்கள் பெறுவீர்கள். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் சக்தியானது தீமைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் -அதாவது எதிரிகள், விபத்துக்கள், திருஷ்டி என எந்த வடிவத்தில் இருந்தாலும் அவற்றை விரட்டுவதற்கு உதவியாக இருக்கிறது. நீங்கள் அன்னையின் அருளால் அமைதி மற்றும் , செல்வச் செழிப்பை பெறுவீர்கள். தேவயின் அருள் உங்களை அரண் போல் பாதுகாக்கும்.

US $ 625.00 Enter Your Amount US $
Free Shipping

சண்டி ஹோமம், உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டி தேவியைக் குறித்து செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழ விடாமல் நம்மைத் தடுக்கும் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றைப் போக்குவதற்கும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களைக் களைவதற்கும், உடல், ஆன்மா போன்ற இரண்டையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஹோமம் வரப்பிரசாதமாக விளங்குகிறது.

US $ 2150.00 Enter Your Amount US $
Free Shipping
x
cart-added The item has been added to your cart.
Previous 1 - 25 of 52 Products Next
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept