பூஜை என்பது ஒரு சிறந்த வழிபாட்டு முறையாகும். இதில், மந்திரங்கள் ஓதுவது, இறைவனின் நாமங்களை உச்சரிப்பது, பிரார்த்தனைகள் செய்வது போன்றவற்றின் மூலம், கடவுள் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தப் பூஜைகள் வழியாக தெய்வங்களைப் போற்றி வணங்குவதன் மூலம், கடவுளுக்கும், உங்களைப் போன்ற பக்தர்களுக்கும் இடையே, ஒரு தெய்வீகப் பிணைப்பு உருவாகும் வாய்ப்பு கிடைக்கிறது.
தெய்வீக சக்திகளின் அருளைப் பெறுவதற்கு, சரியான நேரத்தில், சரியான பிரசாதங்களைப் படைத்து, சரியான மந்திர உச்சாடணங்களுடன் இந்தப் பூஜையை நடத்துவது, மிக முக்கியமாகும். வேதங்கள் கற்றறிந்த, நன்கு பயிற்சி பெற்ற எங்கள் புரோகிதர்கள், இந்தப் பூஜை நடைபெறும் நாட்களை ஆட்சி செய்யும் தெய்வீக சக்திகளின் அருளைப் பெறுவதற்கு ஏற்ற வகையில், இந்த வாழிபாட்டை மிகச் சரியாக நடத்தித் தருவார்கள். உங்கள் வசதிக்காகவும், நீங்கள் எளிதாக அடையாளம் காணுவதற்காகவும், இந்தப் பூஜைகளை, நவக்கிரகங்களுக்கு நடத்தப்படும் கிரக பூஜைகள், தெய்வங்களுக்கு நடத்தப்படும் பிரதான பூஜைகள், மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நடத்தப்படும் விசேஷ பூஜைகள், என இங்கு வகைப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.