US $ 161.00 You Save: US $ 40.25 (25%)
ஆதித்ய ஹ்ருதயம் என்பது, ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப் புனிதமான ஸ்லோகம் ஆகும். இது, ராமபிரான், ராவணனுக்கு எதிராகப் போரிடும் பொழுது, அவர் சூரிய பகவானின் சக்தியைப் பெறுவதற்காக, அகஸ்திய முனிவரால் உபதேசிக்கப்பட்டது. சூரியன், உயிர் சக்தியைக் குறிக்கின்றது. சூரியனிடமிருந்து பெறப்படும் ஒளியும், வெப்பமும், ஆற்றலுமே இவ்வுலகில் ஜீவராசிகள் வாழ வகை செய்கின்றன. சூரியனே வேத ஜோதிடத்தின் அடிப்படைக் கிரகம் ஆகும். நம் ஆன்மாவைக் குறிக்கும் அவர், நமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய சக்தி படைத்தவராக விளங்குகிறார். ஒருவரது ஜாதகத்தில் அமைந்துள்ள சூரியன், தனது ஆற்றலாலும், பிற கிரகங்களின் மீது உள்ள தாக்கத்தாலும், அவர் தம் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது..
ஆதித்ய ஹ்ருதயம் ஹோம பாராயணமும், அதைத் தொடர்ந்து செய்யப்படும் சூரிய ஹோமமும், சூரிய பகவானின் தெய்வீக சக்தியை நாம் பெற உதவும். இது பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவற்றை வெற்றி கொள்ளத் துணை புரியும்.
சூரிய பகவானைப் போற்றும் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து கொண்டே, சூரிய ஹோமத்தை நடத்தி, சூரிய தேவனை வழிபடும் பொழுது, அனைத்து விதமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் உறுதி பிறக்கிறது. இதன் மூலம், வாழ்க்கையில் குறுக்கிடும் அனைத்து சிக்கல்களையும் நீக்கி, உங்கள் குறிக்கோள்களை அடைய முடியும்.
ஆதித்ய ஹ்ருதய பாராயணம் மற்றும் சூரிய ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு கொள்வதன் மூலம், சூரிய பகவானின் அளப்பறிய சக்தியை உங்களால் அனுபவிக்க முடியும். இதைப் பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையை பலவிதங்களிலும் மேம்படுத்திக் கொள்ள இயலும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
தடைகளையும், பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் பிறக்கும்
கவலைகள், துன்பங்கள், சந்தேகங்கள், எதிர்மறை எண்ணங்கள் விலகும்
அறியாமை தொலையும், சக்தி பிறக்கும்
நீண்ட ஆயுள், வளமை, சந்தோஷம் உண்டாகும்
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out