Navaratri 2023 - Invoke the Blessings of 28 Forms of Divine Feminine Energy to Destroy Negativity and Bestow Power, Prosperity and Progress in Life Join Now
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தினசரி ராசி பலன் – இந்தப் பகுதியில் நீங்கள் அன்றாடம் உங்கள் ராசிக்குரிய பலன்களை அறிந்து கொள்ள முடியும். கிரகங்களின் கோட்சாரம் அடிப்படையில் கணிக்கப்படும் இந்த தினசரி ராசி பலன் (Horoscope In Tamil) பகுதியில் உங்கள் அன்றாட ராசி பலன்களை நீங்கள் அறிந்து கொள்ள இயலும்.

வாழ்க்கை என்னும் பாதையில் நாம் நடந்து செல்கையில் நமக்கு உதவும் கரங்கள் கூடவே இருந்து வழி காட்டிக் கொண்டிருக்கும் என்றால் நாம் எளிதில் எந்தப் பாதையையும் கடந்து செல்ல முடியும். நமது வாழ்க்கையின் நிகழ்வுகள் யாவும் நமது கர்ம வினைகளை அடிப்படையாகக் கொண்டே நிகழ்கின்றன. வானில் உலவும் நவ கோள்கள் பன்னிரண்டு ராசிக் கட்டங்களுள் மேற்கொள்ளும் இயக்கம், நகரும் தன்மை, பார்வை இவற்றில் நாள்தோறும் ஏற்படும் சில குறிப்பட்ட மாற்றங்கள், நமது எண்ண அலைகளில், அங்க செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன. அன்றாடம் உங்கள் வாழ்விற்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குவது தான் ஜோதிடத்தின் ஒரு பகுதியான தினசரி ராசி பலன் (Horoscope In Tamil).

தமிழ் ஜோதிடம் (Tamil Astrology)

வேதங்களின் ஆறு அங்கங்களில் ஓர் அங்கமாக ஜோதிடம் விளங்குகின்றது. எனவே ஜோதிடம். வேத ஜோதிடம் என்றும் கூறப்படும். பாரம்பரியம் மிக்க இந்த ஜோதிடம் இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப ஜோதிடமும் பல்வேறு பரிணாமங்களில் பல்கிப் பெருகிக் கொண்டே செல்கிறது என்றால் மிகை ஆகாது. விரிந்து கொண்டே இருக்கின்றது. பொதுவாக வேத ஜோதிடம் என்றும், மேலை நாடுகளில், மேல் நாட்டு ஜோதிடம் என்றும் இங்கு நம் நாட்டில் தமிழ் ஜோதிடம் (Tamil Astrology) என்றும் இது பல்வேறு பெயர்களையும், பரிணாமங்களையும் பெற்றுள்ளது.

இந்திய ஜோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் மற்றும் தமிழ் நாட்டில் தமிழ் ஜோதிடம்(Tamil Astrology) என்ற பெயரில் அறியப்படுகிறது. ஜோதிடத்தில் பொதுவாக சூரியனை வைத்துப் பலன் சொல்லும் முறையும், சந்திரனை வைத்துப் பலன் சொல்லும் முறையும் உள்ளது. மேல் நாட்டு முறையில் சூரியனை வைத்து பலன் சொல்லுவார்கள். தமிழ் ஜோதிடத்தில் சந்திரனின் நிலையை முதன்மையாக வைத்து ஜாதகம் கணிப்பார்கள். குழந்தை பிறக்கும் நேரத்தினைக் கொண்டு அந்த நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. குழந்தை பிறந்த ஊரினபொதுப் பலனாக பன்னிரண்டு ராசிக்கரர்களுக்கும் கணிக்கப்பட்டு வழங்கப்படும் எங்களின் தினசரி ராசி பலன் (Horoscope In Tamil) பகுதி மூலம் நீங்கள் உங்களுக்கான ராசியின் கீழ் இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப உங்களைத் தயார் படுத்திக் கொண்டு உங்கள் நாளை இனிமையாக ஆக்கிக் கொள்ள இயலும். எவற்றைச் செய்தால் நன்மை விளையும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப நீங்கள் திட்டமிட்டு அன்றைய நாளை உங்களுக்கு சாதகமானதாக ஆக்கிக் கொள்ளலாம். எதிர்பாராமல் நிகழவிருக்கும் ஆபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். உங்களைத் தேடி வரும் அதிர்ஷ்டத்தை நீங்கள் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வதன் மூலம் அதிர்ஷ்டத்தை ஆரத் தழுவிக் கொள்ளலாம். உறவினர்களிடம் நடந்து கொள்ளும் முறை, உங்கள் ஆரோக்கியம் போன்றவற்றை நீங்கள் அறிந்து கொள்ள இயலும். உங்கள் நாளின் தொடக்கத்தை இனிமையாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அன்று முழுவதும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் வகையில் உங்கள் அணுகுமுறையை திட்டமிட்டுக் கொள்ளலாம்.் தீர்காம்சம், அட்சாம்சம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், லக்னமும் குறிக்கப்படுகின்றன.

தமிழ் ஜோதிடத்தில் பல அம்சங்கள் அல்லது பிரிவுகள் உள்ளன. ஜாதகம் கணித்துப் பலன் கூறுவது, ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிரசன்னம் எனும் முறையில் கேள்வி கேட்கப்படும் நேரத்தில் உள்ள கிரகங்களின் நிலையைப் பொருத்து பலன் கூறுவது என்று பல முறைகள் உள்ளன. மேலும் கடிகாரப் பிரசன்னம், ஆருடப் பிரசன்னம், சோழிப் பிரசன்னம், தாம்பூலப் பிரசன்னம் என பல்வேறு முறைகளில் ஜோதிடம் மூலம் பலன்களை கணித்து கூறும் வழிகள் உள்ளன. கை ரேகை மூலம் பலன் கூறுதல், எண் கணித முறையில் பலன்களைக் கூறுதல் எனவும் மச்ச சாஸ்திரம் எனப்படும் மச்சங்களை வைத்து குணாதிசயங்களைக் கூறும் முறை, சாமுத்ரிகா லட்சணம் என உடல் அமைப்பை வைத்துப் பலன் கூறும் முறை, கை விரல் ரேகை கொண்டு நாடி ஜோதிட முறையில் பலன் கூறுதல் என பலவகை வழி முறைகளில் ஜோதிடம் காணப்படுகின்றது. நாடி ஜோதிடம் என்னும் முறையில் பிருகு நந்தி நாடி ஜோதிட முறை, ஜெய்முனி ஜோதிட முறை என பலவகை தமிழ் ஜோதிட முறைகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் மரபணு ஜோதிட முறை என்னும் முறை தமிழ் ஜோதிடத்தில் தற்காலத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது என்று கூறலாம்.

எது எப்படியாயினும் ஜோதிட முறையில் முன்கூட்டி பலன்களை அறிந்து கொள்வதன் மூலம் நமது முன்னேற்றத்தை நாம் எளிமை ஆக்க்கிக் கொள்ளலாம்.

தினசரி ஜோதிடம் (Daily Astrology In Tamil)

நாம் அன்றாடம் ஏதாவது செயல்களைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம். நாம் எதை செய்கிறோமோ அது, அதாவது நாம் செய்யும் செயல்கள் நமது எண்ண அலைகளுக்கேற்ப மாறுபடுகின்றன. எண்ணங்கள் நமது கர்ம வினைகளின் படி தான் நம்முள் உருவாகுகின்றது. எனவே நாம் செய்யும் அனைத்தும் நமது முயற்சியால் மட்டுமே ஏற்படுவது என்று கூற இயலாது. நமது அனைத்து நிகழ்வுகளையும் கிரகங்கள் தான் நிர்ணயிக்கின்றன என்றால் அது மிக ஆகாது. ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படும் ஒன்பது கிரகங்கள் பன்னிரண்டு ராசிக் கட்டங்களில் நிகழ்த்தும் சஞ்சாரம் மற்றும் நமது பிறப்பு நேரத்தில் காணப்படும் கிரகங்களின் அமைப்பு நமது அன்றாட நிகழ்வுகளுக்கு காரணியாக அமைகின்றது.

கிரகங்களின் சாதக நிலை, இறை சங்கல்பம், நமது முயற்சிகள் என மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது நமது வாழ்வில் முன்னேற்றம் வளர்ச்சி, செல்வம், செழிப்பு என ஏற்றமான பலன்கள் கிட்டுகின்றன. அத்தகைய நல்ல நேரத்தை நாம் அறிந்து செயல்பட உதவுவது தினசரி ஜோதிடம் (Daily Astrology In Tamil) ஆகும்ஜோதிடம் வேறு நாம் வேறு என்று பிரித்துக் காண இயலாது. வான் மண்டலம், வானில் சஞ்சரிக்கும் கோள்கள், இவை யாவும் நம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதுவே ஜோதிடம் ஆகும். இந்த ஜோதிடமே தனிப்பட்ட நபரின் பிறப்பு நேரத்தை அனுசரித்து ஜாதமாக கருதப்படுகிறது..

தினசரி ஜோதிடம் மூலம் உங்கள் பலா பலன்களை நீங்கள் முன் கூட்டியே அறிந்து உங்களின் சாதகமான வாழ்விற்குரிய அணுகுமுறைகளை நீங்கள் மேற்கொள்வதன் மூலம் நன்மை பல காண இயலும். உங்கள் முயற்சி உங்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும் என்றாலும் சரியான திசையில் உங்கள் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள் தினசரி ஜோதிடம் உங்களுக்கு உதவும். எதை எப்போது செய்தால் நன்மை கிடைக்கும் என்ற கேள்விக்கு நம்முள் நாம் தேடினால் பதில் கிடைக்காது. அதற்கு துணை புரிவது தான் தினசரி ஜோதிடம் (Daily Astrology In Tamil)

இன்றைய ஜோதிடம் (Today Astrology In Tamil)

மனிதர்களாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தேடுவது நிம்மதி என்றால் மிகை ஆகாது.சிக்கல்கள் ஏதும் இல்லாமல் போராட்டம் ஏதும் இல்லாமல் அமைதியான முறையில் நமது ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டும் என்னும் ஆவல் நம் அனைவருக்கும் உள்ளது. காலைப் பொழுதில் சூரியக் கதிர்கள் அளிக்கும் புத்துணர்ச்சி நாள் முழுவதும் நம்மிடம் தங்கிட நேரம் காலம் அறிந்து எந்தவொரு செயலையும் செய்வது நல்லது. அதற்கு துணை புரிவது தான் இன்றைய ஜோதிடம்(Today Astrology In Tamil).

உங்கள் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் எதேச்சையாக நடப்பது அல்ல. உங்களுக்கு வரும் பிரச்சினைகள் என்ன? அது வரவிடாமல் தடுக்க இயலுமா? வந்தால் எப்படி சமாளிப்பது. உங்களை நாடி வரும் நபர்களும் நீங்கள் நாடிச் செல்லும் நபர்களும் உங்கள் வாழ்க்கையில் ஆற்றும் பங்கு இருவருக்கும் சாதகமாக இருக்குமா? உங்கள் உள்ளும் புறமும் மக்ழிச்சி பொங்குமா. உங்கள் ஆரோக்கியம் சிறக்குமா சிறக்க என்ன ? இவற்றிற்கெல்லாம் நீங்கள் விடை காண உங்களுக்கு உதவுவது இன்றைய ஜோதிடம் (Today Astrology In Tamil). அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் இருக்கும் என்று சித்தர்கள் கூறுவார்கள்.

வான் மண்டலம் என்பது தான் நமக்கு குருவாகி பல ஞானங்களை அள்ளி வழங்குகின்றது. நாம் என்ன கேட்கிறோமோ எவ்வளவு ஆர்வத்துடன் கேட்கிறோமோ அதனை இந்த பிரபஞ்சம் வழங்கத் தயாராக உள்ளது. ஆனால் எதை எப்பொழுது கேட்க வண்டும் என்ற நியதியில் தான் நமது வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கின்றது. மழை பெய்யும் போது உப்பு விற்பதும் காற்று அடிக்கும் போது பஞ்சு விற்பதும் பயனில்லை. உங்கள் வாழ்வில் நீங்கள் எதை எப்போது செய்யலாம், எதனை செய்யக் கூடாது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பொதுவான ஆலோசனை கூற ஜோதிடம் உங்களுக்கு வழி காட்டுகிறது.

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் நட்சத்திரம் (Panchangam Tamil)

சுப - அசுப நேரங்கள்

  • ஹோரை: சுக்ர ஹோரை இரவு 11:24 முதல் 12:24 வரை அடுத்து புத ஹோரை
  • இன்றைய நட்சத்திரம்: கேட்டை, செப்டம்பர் 22, காலை 04:04 வரை
  • திதி: சப்தமி, செப்டம்பர் 22, காலை 02:05 வரை
  • சூரிய உதயம்: காலை 06:22 சூரிய அஸ்தமனம்: மாலை 06:25
  • யோகம்: ஆயுஷ்மான், செப்டம்பர் 22, பிற்பகல் 12:22 வரை அடுத்து சௌபாக்கியம்
  • கரணம்: வணிசை, செப்டம்பர் 22, காலை 02:05 வரை
  • ராகு காலம்: பிற்பகல் 01:54 முதல் 03:24 மணி வரை
  • எமகண்டம்: காலை 06:22 முதல் 07:52 மணி வரை
  • நல்ல நேரம்: காலை 09:23 முதல் 10:53 மணி வரை
  • நேர மண்டலம்: 06:00 நகரம்:

உங்கள் ராசி பலனை தினமும் இலவசமாகப் பெற பதிவு செய்க

Resolve the simple captcha below:
2 + 10 =
LIVE ASTROLOGY CONSULTATION

நேரடி ஜோதிட ஆலோசனை

உங்கள் மனதில் உங்கள் எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் உள்ளதா? நீங்கள் விரும்பும் நேரத்தில் எங்கள் ஜோதிடருடன் தொடர்பு கொண்டு உங்களின் கேள்விகளுக்கு உடனடி பதிலைப் பெறலாம்.

LIVE ASTROLOGY CONSULTATION

பிரசன்னம்

பிரசன்னம் என்பது பழமை வாய்ந்த ஜோதிடத்தின் ஒரு அங்கமாகும். இதனை ஹோரா பிரசன்னம் என்றும் கூறலாம். இதில் நீங்கள் கேள்வி கேட்கும் நேரத்தில் காணப்படும் கிரக நிலையைக் கொண்டு உங்களுக்கான பலன்கள் கூறப்படும்.

பூஜை மற்றும் ஹோமங்கள்
(Homam Pooja In Tamil)

மாதாந்திர ஹோமங்கள்

குரு பெயர்ச்சி 2020 - 2021

குரு பெயர்ச்சி 2020 - 2021

புரோகிதர் சேவைகள்

உங்கள் விழாவை திட்டமிடுங்கள்

சனி பெயர்ச்சி 2020 -2021