• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    செவ்வாய் ஹோமம்

    செவ்வாய் ஹோமம்

    செவ்வாய் என்றழைக்கப்படும் அங்காரகன் சிகப்பு கிரகம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமடைந்திருந்தாலும் அனுகூலமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், (கிரெடிட்கார்டு, மருத்துவம், அடமானம்) நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். செவ்வாய் உச்சத்தில் இருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். செவ்வாய் ஹோமம் அல்லது அங்காரக ஹோமம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி நலன் உண்டாகும்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    செவ்வாய் ஹோமம்
    (செவ்வாய் கிரகத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான ஹோமம்)

    அறிமுகம்

    Mars Homa

    அங்காரகன் என்றழைக்கப்படும் செவ்வாய், சிகப்பு கிரகம் ஆகும். போர்க்குணத்தைக் குறிக்கும் செவ்வாய் கிரகம், ஒருவரின் ஜாதகத்தில் உச்சத்தில் இருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். நீச்சமடைந்திருந்தாலும், சாதகமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்துவார். செவ்வாய் ஹோமம் அல்லது அங்காரக ஹோமம் செய்வதன் மூலம், இந்த கிரக தோஷங்கள் நீங்கி, நலன் உண்டாகும்.

    செவ்வாய் மனித உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகம் ஆகும். நமது மனோபலங்களை கட்டுப்படுத்தும் கிரகம் செவ்வாய் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இல்லையெனில், பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் ஹோமம், இந்த தோஷங்களை நீக்கி, வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கக் கூடியது.

    அங்காரக ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    வலுவாக இருக்கும் செவ்வாய், தனிப்பட்ட ஆற்றலையும், பதட்டமான சூழ்நிலையை சிறப்பாகக் கையாளும் தைரியத்தையும் அளிக்கிறார். நிதிநிலையை மேம்படுத்துகிறார். இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும், உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும், பண விஷயங்களை அமைதியாக கையாளும் திறன் ஏற்படும். இந்த கிரகத்தை சாந்தப்படுத்தும் ஹோமத்தில் பங்கு கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகத்தைப் பெற்று, அதனால் விளையும் தெய்வீக ஆற்றல்களை, உங்கள் வாழ்க்கை நலனுக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    அங்காரக ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. பல நலன்களையும் அளிக்க வல்ல இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, கடன்களிலிருந்து விடுபட்டு, நிதிநிலையை மேம்படுத்தி, வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.

    நன்மைகள்

    அங்காரக ஹோமத்தின் நற்பலன்கள்
    • உங்கள் ஆரோக்கியத்தையும், வசதிகளையும் மேம்படுத்த இயலும்

    • உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் பெற இயலும்

    • உடன்பிறந்தோருடன் நல்லுறவு வளர்த்துக் கொள்ள இயலும்

    • தெளிவாக முடிவெடுக்க இயலும்

    • அதிர்ஷ்டம் கிடைக்கும் வாய்ப்பு வந்து சேரும்

    • வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்

    அங்காரக ஹோம மந்திரம்

    ஓம் க்ரம் க்ரீம் க்ரௌம் சஹ் பௌமாய நமஹ

    செவ்வாய் சிறப்பு ஹோமங்கள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here