• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    சந்திரன் ஹோமம்

    சந்திரன் ஹோமம்

    சந்திர ஹோமம் சந்திர பகவானின் ஆசீர்வாதங்களைப் பெற உதவுகிறது. சந்திரன் உங்களுடைய மனதையும் உணர்ச்சிகளையும் ஆட்சி செய்து வெற்றியைத் தருபவர். கிரகங்களின் ராணி என்று கருதப்படுபவர். ஒருவரது உணர்ச்சி, மனநிலை போன்றவற்றைத் தீர்மானித்து, சில நேரங்களில் அசாதாரணமான சிந்தனை, நடத்தை போன்றவற்றுக்கு வழி வகுக்கிறார். அவரைக் குறித்த இந்த சந்திர ஹோமத்தை நடத்துவதன் மூலம், ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனின் அனுகூலமற்ற நிலையால் காணப்படும் தோஷங்களை நிவர்த்தி செய்ய இயலும். உங்கள் தாயுடன் உள்ள உறவை மேம்படுத்தும்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    சந்திரன் ஹோமம்
    (சந்திர கிரக ஹோமம்)

    அறிமுகம்

    Moon Homa

    சந்திரன் உங்கள் மனம் மற்றும் உணர்ச்சிகளை ஆள்கிறார். ஆகவே மனோகாரகன் எனப் பெயர் பெறுகிறார். அவர் வெற்றியை அளிக்கக் கூடியவர். சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த நட்சத்திரம், ராசியில் இருக்கிறாரோ, அவற்றைத் தான் அவரது ஜென்மநட்சத்திரம், ஜென்மராசி என்று கூறுகிறோம்.

    சந்திரன், பூமியின் துணைக்கோளாக, பூமிக்கு அருகாமையில் இருப்பதால், புவி மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இதன் காரணமாக, ஒருவரது உணர்ச்சி, மனநிலை போன்றவற்றைத் தீர்மானித்து, சில நேரங்களில் அசாதாரணமான சிந்தனை, நடத்தை போன்றவற்றுக்கு வழி வகுக்கிறார். அவரைக் குறித்த இந்த சந்திர ஹோமத்தை நடத்துவதன் மூலம், ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனின் அனுகூலமற்ற நிலையால் காணப்படும் தோஷங்களை நிவர்த்தி செய்ய இயலும்.

    சந்திரன் ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் அரசியாகக் கருதப்படும் சந்திரன், கடல்களில் அலைகளை உருவாக்குவது போலவே, மனித மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சந்திரனை ஆராதிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த ஹோமம், முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி, உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தைச் சேர்க்க வல்லது. நிலையற்ற மனம், உணர்ச்சிவசப்படுதல் போன்ற பாதிப்புகள் இருந்தால், இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் தக்க நிவாரணமும், நன்மையும் காணலாம்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    சந்திர ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதன் மூலம், சந்திரனால் ஏற்படும் தோஷங்களை நீக்கி, நற்பலன்களைப் பெற முடியும். இதில் பங்கு கொண்டு, அன்பு, மகிழ்ச்சி, வெற்றி, உற்சாகம் பெற்று இனிமையான வாழ்க்கை நடத்துங்கள்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.

    நன்மைகள்

    சந்திரன் ஹோமத்தின் நற்பலன்கள்
    • உங்கள் மனதையும், உணர்ச்சிகளையும் சமநிலைப்படுத்துகிறது

    • சுயமதிப்பு உணர்வை அதிகரிக்கிறது

    • வாழ்வில் அன்பு, வெற்றி, பெருமை, மகிழ்ச்சி போன்றவற்றைப் பெற உதவுகிறது

    • உங்களுக்கும், உங்கள் தாய் மற்றும் பிற பெண்களுக்கும் இடையே நல்லுறவு மேம்பட உதவுகிறது

    • தானும் செழித்து, பிறரையும் செழிக்கச் செய்யும் திறன் பெறத் துணை புரிகிறது

    • நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் இருக்க உதவுகிறது

    • உடல்நலத்தைப் பாதுகாத்து, ஆரோக்கியம் தருகிறது

    • புண்கள், குடல் மற்றும் வயிற்று பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கிறது

    சந்திரன் ஹோம மந்திரம்

    ஓம் சந்த்ராய ஸ்வாஹா

    ஓம் சந்த்ராய ஸ்வாஹா

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here