• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  துர்கா ஹோமம்

  துர்கா ஹோமம்

  துர்கா ஹோமம் - பிரபஞ்சத்தைக் காத்தருளும் பார்வதி தேவியின், உக்கிர வடிவமாக விளங்கும் துர்கா தேவியின் ஆசிகளைப் பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. மண வாழ்க்கை மற்றும், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க துர்கா தேவியைச் சரணடையுங்கள். இந்த ஹோமத்தை நிகழ்த்துவதன் மூலம், நம் மனதில் ஏற்படும் கோபம், பொறாமை, ஆணவம், சுயநலம், வெறுப்பு போன்ற தீமைகள் அழிந்தொழியும். திருமண வாழ்க்கையிலும், உறவுகளிலும் எழும் பிரச்சினைகள் தீரும்.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  மண வாழ்க்கை மற்றும் உறவுகளை மேம்படுத்தும் ஹோமம்

  அறிமுகம்

  Durga Homa

  பார்வதி தேவியின் பிரம்மாண்ட வடிவமாகத் திகழ்கிறாள், அன்னை துர்கா தேவி. பூமியில் அவதாரம் எடுத்து, அரக்கர்களின் அட்டூழியங்களை அழித்து, மக்களைக் காத்த, மாபெரும் சக்தி வாய்ந்த தெய்வம் அவள். துர்கா ஹோமம், இந்த தேவிக்கு செய்யப்படும் சிறந்த வழிபாடு ஆகும். இந்த ஹோமத்தை நிகழ்த்துவதன் மூலம், நம் மனதுள் இருக்கும் கோபம், பொறாமை, ஆணவம், சுயநலம், வெறுப்பு போன்ற தீமைகள் அழிந்தொழியும். திருமண வாழ்க்கையிலும், உறவுகளிலும் எழும் பிரச்சினைகள் தீரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

  துர்கா ஹோமத்தின் மூலம், தடைகள், எதிர்மறை எண்ணங்கள், சிக்கல்கள் போன்றவற்றுக்கு எதிராக, தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும். இது, வீரத்தையும், நேர்மறை உணர்வுகளையும் கொடுக்கும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, துர்கா தேவியின் பேரருள் பெற்று, இதன் மூலம், நல்ல சிந்தனைகளுடன் கூடிய, தெளிவான மனதையும், நிறைவான வாழ்க்கையையும் பெற இயலும்.

  துர்கா ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  இந்த ஹோமம், பெரும் சக்தி வாய்ந்த துர்கா தேவியின் அளப்பரிய, தெய்வீக ஆற்றலை உணரவும், அதைப் பெற்று, அன்றாட வாழ்க்கையில் பயன் பெறவும் வகை செய்கிறது. ஆகவே இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, நம்மை வாட்டி வதைக்கும் அனைத்து தீமைகள், சந்தேகம், குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவான பாதுகாப்பு பெறுங்கள்.

  பாரம்பரிய முறை ஹோமம்

  துர்கா ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இதன் மூலம், நீங்கள் இறை சக்தியை உணர்ந்து, அதனால் விளையும் அபார பலன்களை வாழ்க்கையில் பெற முடியும். இந்த ஹோமத்தை, நீங்கள் பிறந்த நட்சத்திரம், பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ தினங்களில் செய்வது, சிறந்த பலனைத் தரும்.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  நன்மைகள்

  துர்கா ஹோமத்தின் நற்பலன்கள்
  • பயம், பொறாமை, மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்

  • உறவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்

  • தீய விளைவுகள் நீங்கும்

  • ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி காணலாம்

  • மன அழுத்தம், பதட்டம்‌ குறையும்

  • நம்பிக்கை, மகிழ்ச்சி பிறக்கும்

  • துர்கா தேவியின் பேரருள் கிட்டும்

  துர்கா ஹோம மந்திரங்கள்

  ஓம் தும் துர்காயை ஸ்வாஹா

  அல்லது

  ஓம் காத்யாயநாய வித்மஹே

  கன்யா குமாரி ச தீமஹீ

  தன்னோ துர்கே ப்ரசோதயாத்

  துர்கா ஹோம மந்திரங்கள்

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here