• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    ராகு ஹோமம்

    ராகு ஹோமம்

    ராகு ஹோமம் ராகு பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த விசேஷமான ஹோமத்தைச் செய்வதன் மூலம், உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும், புதிய வாய்ப்புகளை அடையவும், வாழ்வின் வளங்களைப் பெறவும் முடியும். நீங்கள் விரும்பினால், மிகத் தீவிரமான எதிரியுடன் கூட, நீங்கள் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். இந்த ஹோமத்தினால், உங்களிடம் நற்பண்புகள் பல தோன்றி, அதன் மூலம் உறுதியான இலட்சியத்துடன், நீங்கள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ முடியும்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    ராகு ஹோமம்
    (ராகு கிரக ஹோமம்)

    அறிமுகம்

    Rahu Homa

    ராகு கிரகம் சாயா கிரகம் அல்லது நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. கேது கிரகத்தின் இணை கிரகமாகவும் கருதப்படுகின்றது. ராகு, எந்த ராசிக்கும் அதிபதியாக இருந்து ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஒருவரது ஜாதகத்தில், அவர் எந்த ராசி, எந்த வீட்டில் இருக்கிறாரோ, அந்த இடத்தின் பலனை, அவர் முழுமையாகத் தரக்கூடியவர்.

    ராகுவுக்காக நடத்தப்படும் ராகு ஹோமம், ஒருவரின் சக்தியை வலுப்படுத்தி, எதிரிகளை சமாளிக்கும் பலம் அளிக்கக் கூடியதாகும். ராகு, சாதகமற்ற நிலையில் இருக்கும் போது, கடுமையானவராகவும், பல இன்னல்களை அளிப்பவராகவும் இருப்பார். இந்த ஹோமம், ராகு கிரகத்தை சாந்தப்படுத்தி, வாழ்வில் சாதகமற்ற சூழ்நிலைகளையும், அனுகூலமாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, உங்கள் வாழ்க்கையில் நல்ல பல வாய்ப்புகளை பெற்றுப் பயனடையுங்கள்.

    ராகு ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    ராகு, பொருள் ரீதியான சுகங்களை வழங்கக் கூடியவர். அவர் குறித்து, இந்த விசேஷமான ஹோமத்தைச் செய்வதன் மூலம், உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும், புதிய வாய்ப்புகளை அடையவும், வாழ்வின் வளங்களைப் பெறவும் முடியும். நீங்கள் விரும்பினால், மிகத் தீவிரமான எதிரியுடன் கூட, நீங்கள் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். இந்த ஹோமத்தினால், உங்களிடம் நற்பண்புகள் பல தோன்றி, அதன் மூலம் உறுதியான இலட்சியத்துடன், நீங்கள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ முடியும்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    ராகு ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. ராகு கிரகத்தின் ஆசிகளையும், அதன் மூலம் பல நன்மைகளையும் பெற்றுத் தரும், இந்த ஹோமத்தைச் செய்ய உகந்த நேரம், ராகு காலம் ஆகும்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.

    நன்மைகள்

    ராகு ஹோமத்தின் நற்பலன்கள்
    • நீங்கள், தன்னார்வத்துடன் செயல்பட இயலும்

    • சூழ்நிலைகளை சிறந்த முறையில் பயன்படுத்தி, அதன் மூலம் அனுகூலம் பெற முடியும்

    • உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்திக் கொள்ள இயலும்

    • வாழ்க்கையை, விரும்பியபடி வாழ்ந்து, அதில் சிறந்த பயனை அடைய முடியும்

    ராகு ஹோம மந்திரம்

    ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஸஹ் ராஹவே நமஹ

    ராகு ஹோமம்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here