• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  குரு ஹோமம்

  குரு ஹோமம்

  குரு ஹோமம் குரு பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. குரு பகவான் புத்திரகாரகர் மற்றும் தனகாரகர் ஆவார். அதாவது செல்வத்தைக் குறிப்பவர். மிகப் பெரிய கிரகமாகத் திகழும் குரு, உயர்ந்த குண நலன்கள், நேர்மை, நம்பிக்கை, மற்றும் விருப்பத்தையும் குறிக்கிறார். இவரைக் குறித்துச் செய்யப்படும் ஹோமம் குரு ஹோமம் ஆகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க, கற்பனை சக்தி அதிகரிக்க, அறிவுத்திறன் பெற மற்றும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க இந்த குரு ஹோமம் செய்யப்படுகிறது.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  குரு ஹோமம்
  (குரு கிரகத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான ஹோமம்)

  அறிமுகம்

  Jupiter Homa

  கல்வியும் ஞானமும் நிறைந்த குருவாக மதிக்கப்படும் வியாழன் கிரகம், குரு என்றே அழைக்கப்படுகிறது. ஆன்மீகவாதிகளுக்கும், மத குருமார்களுக்கும், குரு பகவான், ஆசிரியராகக் கருதப்படுகிறார். குரு கிரகம் வெற்றிக்கான கிரகம் என்று ஜோதிட சாஸ்திராம் கூறுகிறது. அவரே தனகாரகர், அதாவது செல்வத்தைக் குறிப்பவர். மிகப் பெரிய கிரகமாகத் திகழும் குரு, உயர்ந்த குண நலன்கள், நேர்மை, நம்பிக்கை, மற்றும் விருப்பத்தையும் குறிக்கிறார். இவரைக் குறித்துச் செய்யப்படும் ஹோமம் குரு ஹோமம் ஆகும்.

  குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் சாதகமற்ற வீட்டில் காணப்படுவது குரு தோஷத்துக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக ஏற்படும் எதிர்மறை விளைவுகள், இந்த ஹோமம் செய்வதன் மூலம் நீங்கி, சாதகமான பலன்கள் விளையும். இது, உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றி அமைக்கக் கூடியது. வாழ்வில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.

  குரு ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  குரு பகவான் ஹோமம், உங்கள் வாழ்வில் ஆச்சரியகரமான பல நன்மைகளைக் கொண்டு சேர்க்கும். ஆழ்ந்த சுய நம்பிக்கையைத் தூண்டும். ஹோமம் செய்வதன் மூலம் வெளிப்படும் சக்திகள் உங்கள் புத்தி கூர்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இந்த ஹோமத்தில் நீங்கள் பங்கு கொண்டு, லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் நற்பலன்களைப் பெறுங்கள்.

  பாரம்பரிய முறை ஹோமம்

  குரு ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. குறிப்பாக, வியாழக்கிழமைகளில், குரு ஹோரையில் நடத்தப்படும் இந்த ஹோமம், உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், சிறந்த பலன்களையும் அளிக்க வல்லது.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.

  நன்மைகள்

  குரு ஹோமத்தின் நற்பலன்கள்
  • உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற இயலும்

  • மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்க இயலும்

  • நிலையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள இயலும்

  • உங்கள் கற்பனைத் திறனை அதிகரித்துக் கொள்ள இயலும்

  • அறிவை உபயோகித்து, உங்களை உயர்த்திக் கொள்ள இயலும்

  குரு ஹோம மந்திரம்

  ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஸஹ் குரவே நமஹ

  Jupiter Ceremonies

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here