• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    புதன் ஹோமம்

    புதன் ஹோமம்

    புதன் ஹோமம் மூலம் புத பகவானின் ஆசீர்வாதங்கள் பெறப்படுகிறது. உங்கள் மனம், உங்கள் தொடர்பு திறன், நகைச்சுவை உணர்வு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை புதன் கிரகம் ஆளுகின்றது. இதன் மூலம், நல்ல புத்தி கூர்மையும், பேச்சாற்றலும் கிடைக்கப்பெறும். எழுத்து, ஓவியம், தத்துவம் மற்றும் கற்றல் திறன்கள், நம் வசப்படும். உங்கள் பேச்சுத் திறனை வளர்ப்பதோடு நல் வாழ்வையும் சகல சௌபாக்கியங்களையும் இந்த ஹோமம் உறுதி செய்யும்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    புதன் ஹோமம்
    (புதன் கிரகத்தின் அனுகூலத்தைப் பெறுவதற்கான ஹோமம்)

    அறிமுகம்

    Mercury Homa

    புதன், அதாவது புத கிரகம், புத்தி அல்லது அறிவைக் குறிக்கும். ஆகவே அவர் புத்தி காரகர் என்று அழைக்கப்படுகிறார். புத்தி கூர்மை, சமயோசித சிந்தனை, பிறருடன் அதனைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை புதனே நிர்ணயிக்கிறார். சுறுசுறுப்புக்கும், விரைந்து ஒரு செயலை செய்து முடிப்பதற்கும் புதனே காரணமாகிறார். புதன் சாதகமாக இருந்தால் பேச்சுத்திறன், உரையாடல் திறன், நகைச்சுவை உணர்வு, விரைவான சிந்தனை போன்ற குணங்கள் காணப்படும்.

    சக்திமிக்க புதன் கிரகத்தை சாந்திப்படுத்துவதற்காக, புதன் ஹோமம் செய்யப்படுகிறது. இதன் மூலம், நல்ல புத்தி கூர்மையும், பேச்சாற்றலும் கிடைக்கப்பெறும். எழுத்து, ஓவியம், தத்துவம் மற்றும் கற்றல் திறன்கள், நம் வசப்படும்.

    புதன் ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    புதன் கிரகத்திற்கு செய்யப்படும் ஹோமம் ஒருவரின் ஜாதகத்தில் காணப்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் வல்லமை வாய்ந்தது. இது திக்குவாய் போன்ற பல தீய விளைவுகளை போக்க வல்லது. புதன் கிரகத்தின் சாதகமற்ற நிலை காரணமாக வேதனை மற்றும் இன்னல்கள் காணப்பட்டால், இந்த ஹோமம் செய்வது மிகவும் சிறந்தது என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஹோமம் நீடித்த பலனை அளிக்கக் கூடியது. எதிர்மறை விளைவுகளை நீக்கக் கூடியது. தனிப்பட்ட ஒருவரின் வாழ்வில் எல்லா நலன்களையும், செழிப்பையும் சேர்க்க வல்லது.

    பாரம்பரிய முறை ஹோமம்

    புதன் ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. புத கிரகத்தை ஆராதிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த ஹோமத்தின் மூலம், புத பகவானின் ஆசி கிடைக்கும். நன்மையும், மகிழ்ச்சியும், உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் ஏற்படும்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.

    நன்மைகள்

    புதன் ஹோமத்தின் நற்பலன்கள்
    • மனோ வியாதிகளை வெல்ல இயலும்

    • திக்குவாய் மற்றும் குரல்வளக் கோளாறுகள் கட்டுப்படும்

    • உங்கள் ஊக்கம் மற்றும் உத்வேகம் மேம்படும்

    • உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிகளின் சக்தி அதிகரிக்கும்

    • உங்கள் உண்மையான திறன் மேம்படும்

    • பேச்சுத்திறன் அதிகரிக்கும்

    புதன் ஹோம மந்திரம்

    ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஸஹ் புதாய நமஹ

    புதன் சிறப்பு ஹோமங்கள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here