• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    சூரிய ஹோமம்

    சூரிய ஹோமம்

    சூரிய ஹோமம் கிரகங்களுக்கு எல்லாம் அரசனாகவும் பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் ஆற்றலாகவும் உள்ள சூரிய பகவானின் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. சூரிய பகவானுக்காக செய்யப்படும் இந்த ஹோமத்தினால் வாழ்க்கையில் உங்களை வாட்டும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெல்லவும், சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் வழி பிறக்கிறது. எனவே, சூரிய ஹோமத்தை உங்கள் வெற்றிக்கான படிக்கட்டு எனலாம். உங்கள் வாழ்க்கை வளம் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு உதவியாக இருக்கிறது.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    சூரிய ஹோமம்
    (சூரிய கிரக ஹோமம்)

    முன்னுரை

    Sun Homa

    நவக்கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியன், நம் வாழ்க்கையின் ஆதாரமாக விளங்குகிறார். புனிதமான ஆன்மாவைக் குறிப்பதால், ஆன்மகாரகர் எனப் போற்றப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் தான் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, அவரது விதியை நிர்ணயிப்பது சூரியனே ஆகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சூரிய பகவானைக் குறித்துச் செய்யப்படும் ஹோம வழிபாடு, சூரிய ஹோமம் ஆகும்.

    இதன் மூலம், சூரிய கிரகத்தின் ஆசிகளைப் பெற்றுப் பயனடைய முடியும். பிற கிரகங்களின் ஆற்றலையும் பெருமளவு, நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்.

    சூரிய ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    உலகிற்கு, ஒளி மற்றும் உயிர் கொடுக்கும் ஆற்றலாகத் திகழும் சூரியன், அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார். சூரியனை வழிபடும் விதமாக, சூரிய ஹோமம் செய்வதன் மூலம், வாழ்க்கையில் உங்களை வாட்டும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெல்லவும், சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் வழி பிறக்கிறது. எனவே, சூரிய ஹோமத்தை உங்கள் வெற்றிக்கான படிக்கட்டு எனலாம்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    சூரிய ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. சக்தி வாய்ந்த இந்த கிரகத்தினை ஆராதிக்கும் வகையில் செய்யப்படும் சூரிய ஹோமத்தின் மூலம், பல நன்மைகளைப் பெறலாம். இதில் பங்கு கொண்டு, வாழ்க்கையில் சூரியனின் அருள் பெற்று உங்கள் நலனை பலவகையிலும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.

    நன்மைகள்

    சூரிய ஹோமத்தின் நற்பலன்கள்
    • உங்கள் கர்ம வினைகளை அகற்றுகிறது

    • ஆற்றல் தந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்கிறது

    • பொருளாதார சிக்கல்களைக் களைகிறது

    • உங்கள் கனவுகளை நிஜமாக்கி, வளமான வாழ்க்கை வாழ உதவுகிறது

    • உங்கள் நிர்வாகத்திறனை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது

    சூரிய ஹோமத்திற்கான மந்திரம்

    ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஸஹ் சூர்யாய நமஹ

    சூரிய சிறப்பு ஹோமங்கள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here