• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
   கணபதி ஹோமம்

  கணபதி ஹோமம்

  கணபதி ஹோமம், உங்கள் வெற்றிப் பாதையில் ஏற்படும் தடைகளை அகற்றும், மேலும் அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். உறுதியான வெற்றிக்கு எந்தவொரு புதிய முயற்சியையும் ஆரம்பிக்கும்போதும் விநாயகரின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  வெற்றியை பெற்றுத் தரும் ஹோமம்

  அறிமுகம்

  Ganesha Homa

  முழுமுதற் கடவுள் என போற்றப்படும் விநாயகர், விக்னம் என்று கூறப்படும் தடைகளை நீக்கி வெற்றியை அருளக் கூடியவர். நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலும் தடைகள் இல்லாமல் நடைபெற கணபதியின் அருள் நமக்கு வேண்டும். நம் வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் நீக்கி அருள் வேண்டி விநாயகரை குறித்து செய்யப்படும் ஹோமமே கணபதி ஹோமம் ஆகும்.

  காக்கும் கடவுளாம் கணபதி வணங்குவதற்கு எளிதானவர். கருணைக் கடலாக விளங்குபவர். இவரை வணங்குவதன் மூலம் தடைகள் அகன்று நாம், நம்பிக்கை, தைரியம், வெற்றி, வாழ்வில் வளம் போன்றவற்றைப் பெறலாம். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னும் கணபதி ஹோமம் செய்வது சாலச் சிறந்தது. தடைகளும் கவலைகளும் அகன்று வாழ்வில் வளம் பெற கணபதி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

  கணபதி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  கணபதி ஹோமம் செய்வதன் மூலம் விநாயகரின் பரிபூரண அருள் நமக்கு கிட்டும். தடைகள் விலகும். முயற்சிகள் யாவும் வெற்றி அளிக்கும். குறிப்பாக புதிய தொழில் தொடங்குவதற்கு முன், புதுமனை குடிபோவதற்கு முன் இந்த ஹோமம் செய்வது சாலச் சிறந்தது. இதன் மூலம் உங்கள் குறிக்கோள் நிறைவேறும். ஹோமத்தின் மூலம் வெளிப்படும் தெய்வீக ஆற்றல் மூலம் அதிர்ஷ்டம் பெற்று விதியை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு பலனடையுங்கள்.

  பாரம்பரிய முறை ஹோமம்

  கணபதி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு கொண்டு, விநாயகரின் அருளால் தடைகளைக் கடந்து, நிவாரணமும், நிம்மதியும் பெறலாம்.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  நன்மைகள்

  கணபதி ஹோமத்தின் நற்பலன்கள்
  • வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் தடைகள் நீங்கும்

  • துன்பங்கள் அகலும்

  • தைரியம் பெருகும்

  • புதிய முயற்சிகளைத் தொடங்க, நம்பிக்கை பிறக்கும்

  • நல்ல வாய்ப்புகள் தேடி வரும்

  • கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் இலக்குகளை எட்டி, வெற்றி காண இயலும்

  • வாழ்க்கையில் திருப்தியும், நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும்

  கணபதி ஹோம மந்திரங்கள்

  ஓம் கம் கணேஷாய ஸ்வாஹா

  அல்லது

  ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே

  வர வரத சர்வ ஜனமே வச மானய ஸ்வாஹா

  கணபதி ஹோமம்

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here