• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    கேது ஹோமம்

    கேது ஹோமம்

    கேது ஹோமம் கேது பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இரண்டு நிழல் கிரகங்களில் ஒன்றான கேது உங்களுக்கு ஆன்மீக ஞானத்தை தருவதோடு உங்களுக்குள் மறைந்து கிடக்கும் நேர்மறையான நல்ல பண்புகளை வெளியே கொண்டு வருவதற்கு உதவும் கிரகம் ஆகும். மேலும் நீங்கள் சாதனைகளை படைக்கவும் உதவி செய்யும் கிரகம் கேது ஆகும். கேது ஹோமத்தைச் செய்து சகல சௌபாக்கியங்களையும் சிறந்த ஆரோக்கியத்தையும் பெற்று பொருளாதார அதிர்ஷ்டங்களையும் பெறுங்கள்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    கேது ஹோமம்
    (கேது கிரகத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான ஹோமம்)

    முன்னுரை

    Ketu Homa

    கேது கிரகம் சாயா கிரகம் அல்லது நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. கேது கிரகம், எந்த ராசிக்கும் அதிபதியாக இருந்து ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஒருவரது ஜாதகத்தில், அவர் எந்த ராசி, எந்த வீட்டில் இருக்கிறாரோ, அந்த இடத்தின் பலனை, அவர் முழுமையாகத் தரக்கூடியவர். கேது கிரகம் தான் ஒருவருக்கு ஆன்மீக ஈடுபாட்டை அளிக்கிறது. கடவுள் நம்பிக்கை மற்றும் சம்பிரதாய நம்பிக்கை போன்றவற்றையும் அளிக்கிறது.

    ஒருவர் ஜாதகத்தில் கேது அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து, நன்மை அல்லது தீய விளைவுகள் ஏற்படும். இவரைக் குறித்துச் செய்யப்படும் கேது ஹோமம், நோய்களை குணப்படுத்தவும், தீய விளைவுகளால் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கவும் துணை புரியும்.

    கேது ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    கேது நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் கொடுப்பவர். சில சமயங்களில், நமது கவனத்தை, கடவுளை நோக்கித் திருப்பக் கூடியவர். உங்களது கர்மாவிற்கேற்ப பலனளிக்கக் கூடியவர். கேது ஹோமம் செய்வதன் மூலம், உங்களுக்குள் மறைந்திருக்கும் நேர்மறைப் பண்புகள் வெளிப்பட்டு, நீங்கள் வெற்றியின் உச்சத்தைத் தொட முடியும்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    கேது ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. கேது ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், வாழ்வில் வளங்களும், அதிர்ஷ்டம் மற்றும் செல்வங்களும் பெறலாம். எதிர்பாராத வெற்றிகளும், புகழும் உங்களை வந்து சேரும்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.

    நன்மைகள்

    கேது ஹோமத்தின் நற்பலன்கள்
    • ஒழுக்கமான வாழ்க்கை முறையை பராமரிக்க இயலும்

    • கஷ்டங்களை எளிதாக சமாளிக்க இயலும்

    • நோய் மற்றும் பாம்புக்கடிகளிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்

    • தொழிலில் நிபுணராக இருக்க முடியும்

    • வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடையவும், அதன் சாரத்தை அனுபவிக்கவும் முடியும்

    • அறிவு மற்றும் ஞானத்தைப் பெற முடியும்

    • ஆன்மீக நாட்டம் பெற முடியும்

    கேது ஹோம மந்திரம்

    ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஸஹ் கேதவே நமஹ

    கேது சிறப்பு ஹோமங்கள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here