Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

துன்பம் தீர்க்கும் அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி

April 17, 2023 | Total Views : 527
Zoom In Zoom Out Print

அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி,  கலியுகத்தில் அவதரித்த  அன்னை  ஆதிபராசக்தியின்  அம்சம் .அம்மா என்று அழைக்கும் குரலுக்கு உடன் வந்து காப்பவள் அன்னை பராசக்தி. அருள் பெருக்காகத் திகழும்  அம்பிகையின் திருக்கோலம் பல. அவற்றுள் ஒன்று தான் அன்னை வாசவி கன்னிகா   பரமேஸ்வரி திருக்கோலம்  

கி பி. 11 ஆம் நூற்றாண்டு ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வணிககுலத்தைச் சார்ந்த குசுமஸ்ரேஷ்டி மற்றும் குசு\மாம்பா தம்பதியினருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இன்றி தவித்தனர். பிறகு புத்திர காமேஷ்டி யாகம் செய்து அன்னையை வேண்டினர். அவர்களின் பக்தியில் மகிழ்ந்த அன்னை தானே அவர்களுக்கு மகளாக வந்து அவதரித்தாள். அவ்வாறு அவள் அவதரித்த நாள் சித்திரை மாத வளர்பிறை தசமி நாள் ஆகும். பிறந்த கணத்தில் பெற்றோருக்கு நான்கு கரத்துடன் காட்சி  தந்து, தான் இறை வடிவம் என்பதை உணர்த்தி அடுத்த கணம் சாதாரண குழந்தையாக மாறினாள். தெய்வமே தனக்கு மகளாகப் பிறந்ததை அறிந்த அந்த தம்பதியினர் மிகவும் மனம் மகிழ்ந்து குழந்தையை சீரோடும் சிறப்போடும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்.

அன்னை அழகிலும் வடிவிலும் செழித்து வளர்ந்து வந்தார்  அவரது அழகைக் கண்டு அவளை பெண் கேட்டு அனுப்பினான்  விஷ்ணுவர்தன் என்னும் மன்னன். ஆனால்  வாசவி, தான் காலம் முழுவதும் சிவனையே வழிபடுவேன் என்றும் யாருக்கும் மனைவியாக இருக்க மாட்டேன்  என்றும் கூறி விட்டாள். அதனைக் கேள்விப்பட்ட மன்னன் அவளையும் அவள் ஊரையும் அழித்து விடுவதாக கூறி படை எடுத்து வந்தான்.

அப்போது ஊரில் உள்ளோர் கூடி பேசினார். ஒரு பெண்ணிற்காக ஏன் ஊரே  அழிய வேண்டும் என்று 600 கோத்திரத்தினர்  ஊரை விட்டு சென்றனர். எஞ்சியிருந்த மக்கள் அன்னைக்கு துணை நின்றனர்.

அப்போது அன்னை தன்னை வெளிபடுத்திக் கொண்டு என்னோடு துணை நிற்பவர்கள் என்னுடன் வான் உலகம் புகலாம் என்றாள். தன்னை தெய்வமாக ஏற்பவர்களுக்கு கலியுகம் முடியும் வரை தான் துணை நின்று காப்பேன் என்றும் கூறினார், 

அன்னையின்  முடிவை ஏற்பதாக 120 கோத்திரத்தினர் உடன் பட்டனர். மற்றவர்களை ஆசிர்வததித்த அன்னை உலகில் வாழும்  நெறி முறைகளை விளக்கினார் பின்பு  அக்னி குண்டம் எழுப்பி அதில் அன்னை இறங்கி மறைந்தார். அன்னையின் பின் மற்ற 120 கோத்திரத்தினர் அக்னியில் புகுந்து வானுலகம் எய்தினர். அந்த கணத்தில் அன்னையை திருமணம் புரிய வந்த விஷ்ணுவர்தனின் தலை வெடித்துச் சிதறியது இதனை கண்ட மன்னனின்   படைகள் சிதறி ஒண்டின.  அவன் நாட்டில் பல துர் சகுனங்கள் தோன்றின, இதற்கெல்லாம் காரணம் வாசவி அன்னையின் கோபமே என்று உணர்ந்த விஷ்ணுவர்தனின் மகனான  நரேந்திரன்  அன்னை வாசவியின் சகோதரனான விருபாக்ஷனை அணுகி மன்னிப்பு கோரினான், அன்னைக்கு ஆலயம் எழுப்பி வழிபடுவதாக் கூறி அவ்வாறே கோவில் எழுப்பி வழிபட ஆரம்பித்தான். காலப்போக்கில் அன்னை வழிபாடு நாடெங்கிலும் பரவியது.

.சித்திரை மாத வளர்பிறைதசமி அன்று தான் அன்னை இந்தப் பூமியில் அவதரித்தாள். அந்த நாளே கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. தன்னை அன்டுபவர்களின் துன்பம் நீக்கி நல் வாழ்வு அளிக்கும் வாசவி கன்னிகா பரமேஸ்வரியை வாசவி ஜெயந்தி அன்று வணங்குவது சிறப்பு.அவள் சகல வரங்களையும் அளிப்பவள். இந்த உலகில் நாம் வாழத் தேவைப்படும் அனைத்து  வகையான இன்பங்களையும் அளிப்பவள். இன்னல்களை அறுருப்பவள். வாசவி கன்னிகா பரமேஸ்வரி அன்னையை வழிபடுபவர்களுக்கு  சத்ரு பயம் நீங்கும் செல்வம் சேரும். திருமணம் ஆகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வ்ரியை    48 நாட்கள் தியானித்தால்  திருமணம்  நடைபெறும் என்பது உண்மை. அன்னை துக்கங்களை நீக்கும் துக்க நிவாரிணி ஆவாள்..

banner

Leave a Reply

Submit Comment