Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

New Year Rasi Palangal 2021 Tamil - 2021ம் ஆண்டுக்கான 12 ராசிகளுக்கான பொதுப் பலன்கள்

October 29, 2020 | Total Views : 1,014
Zoom In Zoom Out Print

2020 ம் ஆண்டின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்து புதிய 2021 புத்தாண்டு வரவிருக்கிறது. ஒவ்வொரு புதிய ஆண்டும் வரும் முன் நம்மிடையே பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.  கடந்த ஆண்டு நடைபெறாத காரியங்கள், இழப்புகள், தடைபட்டு போன முயற்சிகள், தொழில் முன்னேற்றங்கள், குடும்ப உறவுகளின் நிலைகள், தடைபட்டு போன சுபகாரியங்கள், ஆரோக்கிய குறைபாடுகள் என பலவிதமான பிரச்னைகளோடு, இவையெல்லாம் வருகின்ற புத்தாண்டிலாவது நிவர்த்தியாகுமா? என்ற ஆயிரமாயிரம் கேள்விக்கணைகளோடு ஒவ்வொருவரும் காத்திருப்பர். அந்த வகையில் 2020ம் ஆண்டு உலகையே மிரட்டி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பலவிதமான படிப்பினைகளையும், இயற்கை தான் என்றுமே நிஜம் என்பதையும் உணர்த்திவிட்டது என்றே கூறலாம். கோவிட் 19 என்ற ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையும் வாரிச் சுருட்டிவிட்டது. இன்னும் அதன் தாக்கத்திலிருந்து நம்மால் முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறோம். இதற்கெல்லாம் நிவாரணமாக, ஆறுதலாக வருகின்ற 2021ம் ஆண்டு இருக்குமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் வரவிருக்கின்ற 2021ம் ஆண்டு ஒவ்வொரு ராசியினருக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதற்கான பொதுப்பலன்களை இக்கட்டுரையில் காண்போம்.    

மேஷம்

2021ம் ஆண்டு மேஷ ராசியில் சனி பகவான் பத்தாவது வீட்டில் அமர்ந்திருப்பார். இந்த ஆண்டின் நடுவிலிருந்து கடைசி வரை குரு பகவான் பதினொன்றாவது இடத்தில் அமர்ந்திருப்பார். நிழல் கிரகங்களான ராகு ராசியின் இரண்டாவது வீட்டிலும், கேது எட்டாவது வீட்டிலும் அமர்ந்திருப்பார். சிவப்பு கிரகமான செவ்வாய் ஆண்டின் தொடக்கத்தில் சொந்த வீட்டிற்குள் நுழைகிறார். இது உங்களது லக்கின வீடாகும்.

இந்த ஆண்டு உங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாகும். அதே சமயம் பொருளாதார ரீதியாக பல பிரச்னைகளையும் சந்திக்க வேண்டி வரும். பணியில் இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் சாதகமாக இருக்காது. பணியில் இருப்பவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். தொழில் செய்யும்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமையும். 

பெற்றோர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக உங்களது செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இந்த ஆண்டு பல கலவையான பலன்களை தரலாம். 

சனி மற்றும் செவ்வாய் உங்களது குடும்ப வாழ்க்கையில் சில சவால்களை தரக்கூடிய அம்சம் உள்ளது. குடும்ப ஆதரவைப் பெறுவதில் சங்கடங்கள் நேரிடலாம். சனி மற்றும் சுக்ரனின் பார்வை திருமணமானவர்களுக்கு கவலையை உருவாக்கலாம். இதனால் தம்பதியரிடையே வாக்குவாதங்கள் ஏற்படும்.
குழந்தைகளுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக அமைகிறது. காதல் செய்பவர்களுக்கு காதல் கைகூடி திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. உங்களது ஆரோக்கியம் ரீதியாக சில சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படலாம். இருந்த போதும் பயம் கொள்ளத் தேவையில்லை.

ரிஷபம்

ரிஷப ராசியில் இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருப்பார். இதனிடையே ராகு மற்றும் கேது முதலாவது மற்றும் ஏழாவது வீட்டில் அமர்ந்திருப்பர். ஆண்டின் தொடக்கத்தில் சிவப்பு கிரகமான செவ்வாய் உங்களது ராசியின் பனிரெண்டாவது இடத்தில் அமர்ந்திருப்பார். ஏப்ரல் மாதத்தில் முதல் வாரத்திலிருந்து செப்டம்பர் நடுவில் வரை குருபெயர்ச்சியால் உங்கள் ராசியின் நான்காவது வீட்டை பார்வையிடக்கூடும்.

தொழில் செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். பணிபுரிவோருக்கு பதவி உயர்வு ஏற்படலாம். வியாபாரிகளுக்கு கடின உழைப்பின் காரணமாக நல்ல பலன்கள் பெறக்கூடும். இருந்தாலும் பொருளாதார ரீதியாக பலன்கள் குறைவாகவே இருக்கும். பொருளாதார இழப்பு இந்த ஆண்டு ஏற்பட வாய்ப்பிருந்த போதும், இடையில் உங்களுக்கு செல்வம் வெவ்வேறு இடத்திலிருந்து கிடைக்கக் கூடும். மாணவர்கள் கடின உழைப்பைக் காட்ட வேண்டிய நேரமிது.

Mesham New Year Rasi Palan2021

குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாகவே காணப்படும் சூழல் நிலவுகிறது. ஆனால் ஏதாவது மங்களகரமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதன் வாயிலாக குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்னைகளால் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காதலர்களுக்கு உகந்த நேரம் இது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள். ஏனெனில் ராகு, கேது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

மிதுனம்

2021ம் ஆண்டு தொடக்கத்தில் மிதுன ராசியின் பத்தாவது வீட்டின் அதிபதி, குரு ஆண்டின் முதல் மாதத்தில் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருக்கும். இதன் பின்பு பெயர்ச்சியின் விளைவால் ராசியின் ஒன்பதாவது வீட்டில் பாதிப்புகளை ஏற்படுத்துவார். ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்களது எட்டாவது வீட்டில் அமர்ந்திருப்பார். நிழல் கிரகங்களாக கேது மற்றும் ராகு ராசியின் ஆறாவது மற்றும் இரண்டாவது வீட்டில் அமர்ந்திருப்பர். செவ்வாய் உங்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது வீட்டை ஆண்டின் இறுதியில் செயல்படுத்தும்.

New Year Rasi Palan Mithunam 2021

இந்த ஆண்டு தொழிலில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம். பணி செய்வோருக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காத காரணமாக கவலை கொள்ளக்கூடும். சிறிது காலம் காத்திருந்தால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இது உகந்த காலம். என்றாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

உங்களுக்கு செல்வ இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொருளாதாரம் ஏமாற்றமானதாக இருக்கும். மாணவர்களின் கடின முயற்சி, உழைப்புக்கு மட்டுமே பலன் கிடைக்கும். குடும்பத்தில் தகுந்த ஆதரவு கிடைக்கும். தம்பதியருக்கிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
காதலர்களுக்கு இந்த ஆண்டு முக்கிய மாற்றம் நிகழலாம். ஆரோக்கியம் கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதால் சிறப்பு கவனம் தேவை.

கடகம்

கடக ராசிக்கு செவ்வாய் கிரகம் இந்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் இருக்கும். அதன் பின்பு இதன் பெயர்ச்சியானது ராசியின் பதினொன்றாவது, பனிரெண்டாவது வீட்டில் இருக்கும். சனி பகவான் ஆண்டு முழுவதும் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் இருந்து கொண்டு நான்காம் வீட்டை பார்ப்பார். ராகுவும், கேதுவும் உங்கள் ராசியின் ஐந்தாவது மற்றும் மூன்றாவது வீட்டில் குடியிருப்பர். இந்தாண்டின் தொடக்கத்தில் சூரியன் மற்றும் புதன் ராசியின் ஏழாவது வீட்டில் அமர்ந்து வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தவிருக்கிறது.

தொழிலில் வேகமாக செயல்பட வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு இந்தாண்டு முதலீடு செய்வதற்கு நன்மையாக இருக்கும். பணியில் இருப்போர்க்கு பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார ரீதியாக பல பிரச்னைகள் வந்தாலும், கடின உழைப்பினால் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

New Year Rasi Palan Kadagam 2021

குடும்ப வாழ்க்கையில் எல்லாவிதமான பலன் கிடைக்கும். இதனால் உங்களுக்கு இன்னொரு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். உங்களது முடிவின் விளைவாக குடும்பம் எதிராக காணப்படும். மாணவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு புரிந்து செயல்படும் காலமிது.

தம்பதியரிடையே சண்டைச் சச்சரவுகள் வரும். தாம்பத்திய வாழ்க்கை சுமுகமாக இருக்காது. உங்கள் துணைவி ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவார். காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டு சிறந்த ஆண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்கு நிழல் கிரகங்களான ராகு, கேது இந்தாண்டு உங்கள் ராசியில் ஆறாவது மற்றும் நான்காவது வீட்டில் அமர்ந்திருக்கும். ஆண்டு முழுவதும் சனி பகவான் ஆறாவது வீட்டில் அமர்ந்திருப்பார். ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் குருவுடன் ஆறாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய விளைவுகள் ஏற்படக்கூடும். செவ்வாய் ஒன்பதாவது வீட்டில் இருப்பதால் அதிர்ஷ்டத்தில் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

தொழில் எதிரிகளிடம் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக பார்க்கும் போது செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கடின உழைப்புத் தேவை. வெளிநாட்டில் சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு சற்று ஏமாற்றம் தான். சாதகமற்ற சூழல் குடும்பத்தில் நிலவுவதால் சண்டைகள் வரக்கூடும்.

New Year Rasi Palan Simmam 2021

திருமணமானவர்களுக்கு துணையின் ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவலை அதிகரிக்கக் கூடும். இந்த ஆண்டு முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. உங்களுக்கு சிறுநீரகங்கள் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புள்ளது.

கன்னி

2021 ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் அமர்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ஒன்பதாவது மற்றும் பத்தாவது வீட்டில் விளைவை ஏற்படுத்தக் கூடும். ராகு மற்றும் கேது உங்களது ராசியில் ஒன்பதாவது மற்றும் மூன்றாவது வீட்டில் அமர்ந்திருப்பர். குரு உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டிலிருந்து ஆறாவது மற்றும் ஏழாவது வீட்டில் பெயர்ச்சி கொள்ளலாம்.
பணிபுரிபவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். இடமாறுதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நேரம் உகந்ததாக இருக்கும். நிதி தொடர்பான சிக்கல்கள் வரலாம். இருந்தாலும் ராகுவின் பார்வை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகளைத் தரும்.

New Year Rasi Palan Kanni 2021

மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலமிது. குடும்ப வாழ்க்கையில் சுமூகம் இல்லாத நிலையில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டு பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த ஆண்டு உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தைரியம் மற்றும் வலிமை அதிகரிப்பதால் உடல் நலனில் பிரச்னைகள் இருக்காது.

துலாம்

இந்த ஆண்டு உங்கள் ராசியின் எட்டாவது மற்றும் இரண்டாவது வீட்டில் ராகு, கேது அமர்ந்திருப்பர். சனி பகவான் நான்காவது வீட்டில் அமர்ந்து கொண்டு பத்தாவது வீட்டை பார்வையிடுவார். செவ்வாய் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் அமர்ந்திருப்பார்.  இதனிடையே சுக்கிரன், குரு, சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சி உங்கள் ராசியில் வெவ்வேறு வீட்டில் இந்தாண்டு இருக்கக் கூடும்.

வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வளர்ச்சி நன்றாக அமையும். வணிகம் செய்வோரும் பயனடைவார்கள். பொருளாதார வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆண்டின் நடுப்பகுதி மாணவர்களுக்கு சிறப்பாக அமையும். குடும்பச் சூழ்நிலையின் காரணமான நீங்கள் வீட்டை விட்டு வெளியேற நேரிடும்.

New Year Rasi Palan Thulam 2021

தம்பதியரிடையே அன்பு குறைந்து காணப்படும். இந்தாண்டு குழந்தைகளுக்கு சிறப்பானதாக அமையும். அவர்களது எதிர்காலம் கருதி தம்பதியர் ஒரு பெரிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்தாண்டு நன்மையாக அமையும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் பெரிய நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அமர்ந்திருப்பார். மேலும் ராகு, கேது ஆண்டு முழுவதும் உங்களது ஏழாவது மற்றும் முதல் வீட்டைப் பாதிக்கும். அதுமட்டுமல்லாது செவ்வாய், சுக்கிரன், புதன், குரு மற்றும் சூரிய பகவான் இந்த ஆண்டில் வெவ்வேறு வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவர்.

வாழ்க்கையில் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய காலமிது. உங்களது துறையில் கடினமாக  உழைக்க வேண்டிய நிலை வரும். வணிகர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கலாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். திடீர் செலவுகளால் சிக்கல்களும் ஏற்படலாம். தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

New Year Rasi Palan 2021 virchgam

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதே சமயம் மனைவியிடமிருந்து எதிர்ப்புகளும் வரலாம். குழந்தைகள் நன்றாக இருப்பார்கள். காதலர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் நம்ப வேண்டும். இல்லாவிடில் காதல் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் திடீரென்று சில பிரச்னைகள் ஏற்படலாம்.

தனுசு

2021 ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து நான்காவது வீட்டை பார்வையிடுவார். நிழல் கிரகமான கேது, பனிரெண்டாவது வீட்டிலும், ராகு ஆறாவது வீட்டிலும் அமர்ந்திருப்பர். தொடக்கத்தில் குரு ராசியின் இரண்டாவது வீட்டில் இருப்பதால் சனியுடன் ஒன்றிணைவார். 

New Year Rasi Palan 2021 Dhansu

சக ஊழியர்களின் உதவியுடன் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு வணிகர்களுக்கு நல்லதாக அமையும். வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். இதனால் அவர்களது பொருளாதார நிலை வலுப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இளைய உடன் பிறப்புகள் ஆதரவு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் உடல்நலக் குறைவால் மன அழுத்தம் அதிகரிக்கும். இந்த ஆண்டு குழந்தைகளிடம் அதிக விழிப்புணர்வோடு நடந்து கொள்வீர்கள்.

மகரம்

உங்கள் ராசி அதிபதியான சனி பகவான், ராசியின் சொந்த வீட்டில் நுழைகிறார். ஆண்டின் ஆரம்பத்தில் குரு உங்கள் சொந்த வீட்டில் அமர்ந்திருக்கும் போது சனியுடன் ஒன்றிணைந்து, பின் இரண்டாவது வீட்டில் நுழைவார். ராகு ஐந்தாவது வீட்டிலும், கேது பதினொன்றாவது வீட்டிலும் பெயர்ச்சியடைவர். செவ்வாய் நான்காவது வீட்டின் வழியாக வெவ்வேறு வீட்டை பாதிக்கும். 

குடும்பத்தில் தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். திருமண வாழ்க்கை மந்தமாக இருக்கும். பணியில் இருப்பவர்கள் கடின உழைப்பின் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகமாகவிருப்பதால் பட்ஜெட் போட்டு செயல்படுத்துங்கள்.

New Year Rasi Palan Dhansu 2021

இந்த ஆண்டு உங்களது ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது நல்லது. நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை நிதானத்தை கடைப்பிடியுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்கு இந்த ஆண்டு உங்கள் ராசியில் சனி பகவான் பனிரெண்டாவது வீட்டில் நுழைகிறார்.  குரு ஏப்ரல் வரை உங்கள் ராசியின் சொந்த வீட்டில் இருப்பார். அதன் பின்னர் ராசியின் பத்தாவது வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். நான்காவது வீட்டில் ராகுவும், பத்தாவது வீட்டில் கேதுவும் இருப்பார்கள்.  சுக்கிரன் ஆரம்பத்தில் உங்கள் ராசியில் அமர்ந்திருப்பார். 

இந்த ஆண்டு முழுவதும் முக்கிய கிரகங்களின் விளைவுக்கேற்ப நீங்கள் பலன்களைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. தீடீர் செலவினங்கள் ஏற்படும். இதன் காரணமாக நிதி நெருக்கடிகள் ஏற்படலாம்.

New Year Rasi Palan Kumbam 2021

மாணவர்கள் கடின உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவார்கள். பணிச்சுமையின் காரணமாக குடும்பத்தில் அன்பு குறையும். திருமணமானவராக இருந்தால் வாழ்க்கைத் துணையின் உதவியுடன் நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு இந்தாண்டு சிறப்பாக அமையும். காதலர்களுக்கும் சிறந்த ஆண்டு தான். உங்களது ஆரோக்கியத்தில் பலவீனங்கள் ஏற்படக் கூடும். வாயு, அமிலத்தன்மை, மூட்டு வலி, குளிர் போன்ற பிரச்னைகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது நலம்.

மீனம்

2021ம் ஆண்டு சனி உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ராசியின் ஐந்தாவது வீட்டை பார்வையிடுவார். இதோடு செவ்வாய் இந்தாண்டின் தொடக்கத்தில் இரண்டாவது வீட்டில் அமர்ந்திருப்பார். பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது வீட்டில் பெயர்ச்சியாவார். அதே நேரத்தில் குரு உங்கள் ராசியின் வீட்டில் அமர்ந்து சனியைப் போலவே உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டையும் பார்ப்பார். மூன்றாவது வீட்டில் ராகுவும், ஒன்பதாவது வீட்டில் கேதுவும் அமர்ந்திருப்பர். இதனால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வணிகர்களும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த முனைவார்கள். பல வழிகளிலும் வருமானம் வர வாய்ப்புள்ளது. அதோடு செலவுகள் அதிகரிக்கவிருப்பதால் எச்சரிக்கை தேவை.

குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும். பரம்பரை சொத்தினால் பயனடைவீர்கள். குழந்தைகள் சிறப்பாக செயல்படுவார்கள். காதலர்களுக்கு காதல் திருமணம் கைகூடுவதற்கான வேளை இது.  உங்களது ஆரோக்கியம் இந்தாண்டு சிறப்பாக அமையும்.  

banner

Leave a Reply

Submit Comment