x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
aries

மேஷம் வருட ராசி பலன் 2019

இந்த 2019 ஆம் ஆண்டு சாதனைகளும் பாராட்டுகளும் நிறைந்த ஒரு ஆண்டாக இருக்கும். உங்கள் ஆற்றல் மற்றும் தரம் உயரும். நீங்கள் கடினமானவராகவும் உறுதியானவராகவும் தோற்றம் அளிப்பீர்கள். உங்கள் போட்டியாளர்களை விட முன்னணியில் இருப்பீர்கள். நிம்மதியான தூக்கத்தை பெறும் பாக்கியத்தை அடைவீர்கள். நீங்கள் அதிகமான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த ஆண்டு உங்கள் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடனான உங்கள் தொடர்பு நல்ல பலனை அளிக்கும். உங்களைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் சமுதாயத்தின் மீது நீங்கள் காட்டும் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு உங்களுக்கு நற்பெயரையும் புகழையும் சம்பாதித்துத் தரும். இதன் மூலம் பொதுமக்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.

பொதுமக்களுடன் மற்றும் சங்கங்களுடனான உங்கள் ஈடுபாடும் பிரதிநிதித்துவமும் சிறப்பாக காணப்படும். ஜூன் மாதத்தில் உடல் மற்றும் மனஅழுத்தம் அதிகமாக இருக்கலாம். எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதீர்கள். சாதகமற்ற நேரங்களில் ஆதரவைப் பெற உங்கள் குல தெய்வத்தை வழிபடுங்கள். இந்த ஆண்டு, சிவ வழிபாடு உங்களுக்கு மன வலிமையையும் உடல் திறனையும் இணைந்து வழங்கும்.

வருட ராசி பலன் 2019

மேஷம்: குணாதிசயங்கள்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். ஒரு அணி அல்லது மக்கள் குழுவிற்கு தலைமை தாங்கி முன்னணியில் இருக்க விரும்புவார்கள். மேஷ ராசியினருக்கு பிறரின் கீழ் படிந்து நடத்தல் கடினமான காரியம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தைரியமாகவும் உற்சாகமாகவும் காணப்படுவார்கள்.அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். விவிசாயம், மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப பாடங்கள் அவர்களுக்கு விருப்பமானவை. மேஷ ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் விளையாட்டுவீரர், மருத்துவர், பொறியியலாளர் அல்லது பாதுகாப்புப் பணியாளராக ஆவார்கள். கடுமையான இயல்பும் செயல்களில் வேகமும் அவர்களின் பலவீனங்களாகும்.

பரிகாரங்கள்:

உங்கள் தந்தைக்கு உதவவும், உடல் ரீதியிலும், மனோதத்துவ ரீதியிலும் அவருக்கு ஆதரவாக இருக்கவும்

உங்களின் அறிவுப்பூர்வமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் ஆசிரியர்களிடமும், வழிகாட்டிகளிடமும் இருந்து ஆசீர்வாதங்களை பெறுங்கள்

வியாழக்கிழமைகளில் அருகாமையில் உள்ள சிவன் அல்லது விஷ்ணு கோயிலுக்கு சென்று வாருங்கள்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

ஆஞ்சநேயர் ஹோமம்

சாதகமான மாதங்கள் : பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர்

சாதகமற்ற மாதங்கள் : மார்ச், ஜூன், செப்டம்பர், நவம்பர்

வருட ராசி பலன் 2020

மேஷம்: குணாதிசயங்கள்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். ஒரு அணி அல்லது மக்கள் குழுவிற்கு தலைமை தாங்கி முன்னணியில் இருக்க விரும்புவார்கள். மேஷ ராசியினருக்கு பிறரின் கீழ் படிந்து நடத்தல் கடினமான காரியம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தைரியமாகவும் உற்சாகமாகவும் காணப்படுவார்கள்.அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். விவிசாயம், மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப பாடங்கள் அவர்களுக்கு விருப்பமானவை. மேஷ ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் விளையாட்டுவீரர், மருத்துவர், பொறியியலாளர் அல்லது பாதுகாப்புப் பணியாளராக ஆவார்கள். கடுமையான இயல்பும் செயல்களில் வேகமும் அவர்களின் பலவீனங்களாகும்.

ராசி பலன் - மேஷம்

பொதுப்பலன்கள்: 2020 ஆம் ஆண்டு என்பது, மேஷ ராசி அன்பர்களின் செயலாற்றல் சிறந்து விளங்கும் காலமாக அமையும். உங்கள் தகவல் தொடர்பு, பேச்சாற்றல் போன்றவை, உங்கள் திறனை மேலும் மேம்படுத்தும். உங்கள் அறிவாற்றலும், நேர்மையான நடவடிக்கைகளும், நற்குணங்களாக மலரும். இது உங்களை சமயம், ஆன்மீகம் போன்ற துறைகளுக்கும் இட்டுச் செல்லும். உங்களில் சிலர், ஜோதிடம், கைரேகை போன்ற புனிதக் கலைகளை கற்கும் வாய்ப்பு ஏற்படும். வேறு சிலருக்கு உளவியல் துறையிலும் ஆர்வம் ஏற்படும். உடல் உறுதி பெறும்; உடல்நிலை மேம்படும். நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்தி, பணிகளில் வெற்றி காணும் ஆற்றல் ஏற்படும்.
தொலைத் தொடர்பு மற்றும் அலைபேசி, நோட்பேட் போன்ற நவீன மின்னணு சாதனங்களின் விற்பனை சிறந்து விளங்கும் வாய்ப்புள்ளது; எனவே, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள மேஷ ராசி அன்பர்கள், நல்ல தொழில் வளர்ச்சியும், லாபமும் காண இயலும். மேலும், உடன் பிறந்தவர்கள், உடன் பணிபுரிபவர்கள், அண்டை, அயலார்கள் போன்றவர்களுடன், நெருங்கிய உறவு ஏற்படும். சிறு பயணங்களை மேற்கொண்டு மகிழும் வாய்ப்பும் உள்ளது.

வேலை: வேலை தொழில் போன்றவற்றைப் பொறுத்தவரை, இந்த வருடத்தின் முற்பகுதி சுமாராகவே இருக்கும். ஆனால் மே மாதப் பிற்பகுதியிலிருந்து செப்டம்பர் வரை, நிலமை பெரிதும் சீர்படும். எனினும், அதன் பிறகு வருடக் கடைசி வரை, நீங்கள் சராசரி பலன்களையே காண முடியும். தொழிலதிபர், வணிகர் போன்றவர்கள், மே மாத நடுவிலிருந்து ஜூன் மாத இறுதி வரை பல பெரிய, புதிய தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறலாம். ஆனால், உங்கள் பணி எதுவாக இருந்தாலும், அதில் முன்னேறுவதற்காக, தவறான, நேர்மையற்ற வழிகளை கண்டிப்பாகக் கையாள வேண்டாம். இது ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

வேலை, தொழில் மேம்பட கூட்டு சத்ய நாராயண பூஜை

காதல் / திருமணம்: இந்த ஆண்டில் இவை, ஓரளவு நன்றாகவே இருக்கும் எனலாம். உங்கள் துணையுடனான காதலும், உறவும், பெருமளவு மகிழ்ச்சியளிப்பதாகவே அமையும். எனினும் சில நேரங்களில் உறவுகளில், உரசல்களையும், பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்; அது போன்ற நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், நிலைமையை அமைதியாகயும், பொறுமையாகவும் கையாளுவது நல்லது. இதன் மூலம், காதலிலும் சரி, மணவாழ்க்கையிலும் சரி இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனும், மற்ற உறவினர்களுடனும் நேர்மறையான அணுகுமுறையைக் கையாளுவது, இணக்கத்தையும், நெருக்கத்தையும் வளர்க்கும். கடந்தகாலத்தின் கசப்பான நினைவுகளைக் களைந்து விட்டு, ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி நகர்வது, பல நன்மைகள் தரும்.

உறவுகள் சிறக்க உமா மகேஸ்வர ஹோமம்

நிதிநிலைமை: ஆண்டின் முற்பகுதியில், தேவையற்ற பல செலவுகள் ஏற்படக்கூடும்; இவற்றை கவனமாகக் கையாள்வது அவசியம். ஆனால், பிற்பகுதியில், நீங்கள் சுப செலவுகள் செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். மே, ஜூன் மாதங்களில் வருமானம், தாராளமாக இருக்கும். இதனால் உங்கள் பொருளாதார நிலையும், பணப் புழக்கமும் மேம்படும்.

நிதிநிலை ஏற்றம் பெற லக்ஷ்மி குபேர ஹோமம்

மாணவர்கள்: மே முதல் செப்டம்பர் வரையிலான காலம், மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணும் நேரமாக விளங்கும். வெளிநாடு சென்று கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கும், இது நன்மைகள் தரும் காலகட்டம் ஆகும். எனவே, மாணவர்கள் இந்த பொன்னான நேரத்தை முறையாகப் பயன்படுத்தி, கடுமையாக உழைத்துப் படித்தால், கல்வியில் சாதனைகள் செய்யலாம். ஆனால் தேர்வுகளில் வெற்றி பெறுவது, அதிக மதிப்பெண் வாங்குவது போன்ற எந்த காரணத்திற்காகவும், நேர்மையற்ற நடவடிக்கைகள் எதிலும், கண்டிப்பாக ஈடுபட வேண்டாம். தவறினால் உங்கள் எதிர்காலமே பாதிக்கப்படக் கூடும். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

கல்வியில் வெற்றி பெற தக்ஷிணாமூர்த்தி யந்திரம்

ஆரோக்கியம்: 2020 ஆம் வருடத்தின் ஜனவரி, ஏப்ரல், டிசம்பர் மாதங்களில், உங்கள் உடல் நலனில் கவனம் தேவை. சுகாதாரமற்ற உணவுகள் உட்கொள்வது, துப்புரவில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றால், ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை. எனினும், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நோய்கள் குணமாகி, உடல்நிலை தேரும் வாய்ப்புள்ளது. பகவான் மகாவிஷ்ணு, சிவபெருமான் என்ற இரண்டு பெரும் தெய்வங்களையும் வணங்கி, சோதனையான காலகட்டங்களில் நோய்நொடிகளால் பாதிக்கப்படாமல் இருக்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வைத்தியநாத பூஜை

பரிகாரங்கள்:

வயதில் மூத்தவர்கள், முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள்.
கடவுள் நம்பிக்கையையும், ஆன்மீக நாட்டத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
பகவான் விஷ்ணுவையும், சிவபெருமானையும் வழிபாடு செய்யுங்கள்
‘ஓம் ஷம் சனிஸ்சராய நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யுங்கள்
‘ஓம் கெம் கேதவே நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யுங்கள்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

நவக்ரஹ ஹோமம்

சாதகமான மாதங்கள் : பிப்ரவரி, ஜூன், செப்டம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஏப்ரல், ஆகஸ்டு, நவம்பர், டிசம்பர் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC