AstroVed Menu
AstroVed
search
search

குரு பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021 | Guru Peyarchi Palangal 2020 to 2021 in Tamil

dateOctober 28, 2020

நவகிரகங்களில் முழு சுப கிரகமாக விளங்குபவர் குரு பகவான். மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும், செல்வங்களையும் வாரி வழங்கக் கூடியவர் குரு பகவான். ஜோதிட சாஸ்திரப்படி சில துன்பங்களை தரக்கூடிய கிரகங்களின் மீது குரு பகவானின் பார்வை பட்டாலே போதும். துன்பங்கள் எல்லாம் விலகி இன்பங்கள் வந்து சேரும். இதைத்தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுகிறார்கள். குரு பகவானுக்கு புத்திர காரகன், தன காரகன், ஜீவன காரகன் என்ற பெயர்களும் உண்டு.  எனவே தான் மக்கள் குரு பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.  குரு பெயர்ச்சி 2020 எப்போது நிகழப் போகிறது, என்னென்ன நன்மைகள் எல்லாம் நமக்கு நடைபெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எப்போதும் நிகழ்கிறது. அந்த வகையில் வரும் 2020-2021ம் ஆண்டு நடைபெறப் போகும் குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அடையப் போகும் ராசிகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி, இரவு 2.55 மணிக்கு, அதாவது ஐப்பசி மாதம்  30ம் தேதி குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி, அதாவது கார்த்திகை மாதம் 5ம் தேதி குருபெயர்ச்சி நிகழ்கிறது.

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகச்சிறப்பானதாக அமையவிருக்கிறது. மிகப்பெரிய நன்மையளிக்கும் வகையில் இந்தப் பெயர்ச்சி அமைகிறது. நீங்கள் எதிர்பார்க்காத திடீர் ஆதாயங்களும், பண வரவுகளும் கிடைக்கப் போகிறது. குடும்பம், அலுவலகம் இரண்டிலும் நல்ல சூழ்நிலைகளே நிலவும் காலம் இது. பணி தொடர்பாக எடுக்கின்ற எல்லா காரியங்களும் வெற்றியடையும். உங்களுடைய கனவுகள் எல்லாம் நனவாகப் போகின்ற சிறப்பான காலம் இது.

தனுசு:

நிறைய யோகங்களை தரப் போகிறது தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி. வேலையிலும் சரி, தொழிலிலும் சரி, வியாபாரத்திலும் சரி ஏறுமுகம் தான். கொடி கட்டி பறக்கப் போகிறீர்கள். கடன் பிரச்னைகள் எல்லாம் நீங்கி மிகப்பெரிய செல்வச் செழிப்பை அடையப் போகிறீர்கள். சுப காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். பொன், பொருள் வாங்கும் யோகம் வரும்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். மற்றவர் விவகாரங்களில் மட்டும் தலையிடாதீர்கள், பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு, சில அதிர்ஷ்டங்களையும், முன்னோர்களின் ஆசீர்வாதங்களையும் வழங்கவிருக்கிறார். பணக்கஷ்டங்கள் எல்லாம் நீங்கி பொருளாதர நிலை மேம்படும் காலம் இது.  தடைகளை எல்லாம் கடந்து எடுத்த காரியத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை அளிக்கப் போகிறார் குரு. பொன், பொருளையும் சேர்ப்பீர்கள்.

கடகம்:

கடக ராசிக்கு குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக சகல யோகங்களும் கிடைக்கப் போகிறது. வேலை, தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமண யோகம் வரும் காலமிது. வீண் செலவுகள் வர வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகிறார் குரு பகவான். தோஷங்களினால் இதுவரை சந்தித்து வந்த சிரமங்கள் எல்லாம் நீங்கப் போகின்றன. தடைபட்டு போன அனைத்து காரியங்களும் மிக எளிதாக நடைபெறப் போகின்றன. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.  பணியில் இருப்போர் பதவி உயர்வு பெறுவீர்கள். தொழிலில் லாபம் அடையப் போகிறீர்கள். புதிய வருமானம் வர வாய்ப்புள்ளது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.

சிம்மம்:

குருவின் பார்வை சிம்ம ராசிக்கு இரண்டாம் வீட்டில் விழுகிறது. இதுவரை இருந்து வந்த பொருளதார பிரச்னைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் காணலாம். சுபகாரியங்கள் நடைபெறும்.  எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலையில் இடமாற்றம் நடைபெற வாய்ப்புள்ளது.  பயணங்களின் மூலம் நன்மைகள் கிடைக்கும். சுபச் செலவுகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.  எதிர்பாராத யோகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்:

குரு பகவான் விருச்சிக ராசிக்கு 3ம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணுலம் காலமிது. வேலை, தொழில் இரண்டும் சிறப்பாக நடைபெறும். கடன் பிரச்னைகள், சொத்து பிரச்னைகளிலிருந்து விடுபடப் போகிறீர்கள். பணம் தாராளமாக இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, சுபகாரியங்கள் நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை உங்கள் ராசியின் 8ம் வீடு, 10ம் வீடு, 12ம் வீட்டில் விழுகிறது. இதனால் உங்களுடைய தோஷங்கள் யாவும் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத லாபங்கள் கிட்டும். செல்வமும், செல்வாக்கும் உயரும். வேலை மற்றும் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் நீங்கும். மனக்குழப்பத்திலிருந்து விடுபட்டு எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள்.  சுப விரையங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.  


banner

Leave a Reply

  • Kannan


    Pls send this Gurupeyarchi affting Star

    November 13, 2020