April Monthly Mesham Rasi Palangal 2019 Tamil, April month Mesham Rasi Palan 2019 Tamil

Brahmahatya Dosha Remedial Rituals: Get Relief from Afflictions Caused by Sins Committed in Previous Births Performed on the 13th Moon Powertime Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2019 April Month’s Rasi Palan for Mesham

March 6, 2019 | Total Views : 2,420
Zoom In Zoom Out Print

மேஷம் ராசி - பொதுப்பலன்கள்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் செயல்களில் ஒரு வேகம் இருக்கும். எண்ணங்களில் நேர்மை இருக்கும். நாளை செய்வோம் என்று எதையும் தள்ளிப் போடாமல் அன்றன்றைய வேலையை அன்றன்றே முடிப்பது நல்லது. நீங்கள் மேற்கொண்ட லட்சியத்தை நோக்கி வெற்றி நடை போடுவீர்கள். நமக்கு பிடித்த வேலையை நாம் செய்யும் போது திருப்தி தானாகவே மனதில் குடி கொள்ளும். உங்கள் மனம் மகிழும் வகையில் நீங்கள் வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் சில சமயங்களில் நம்மை ஆபத்தில் சிக்க வைக்கும். அதிலும் பணம் சம்பத்தப்பட்ட விஷயம் என்றால் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனவே பண விஷயத்தில் நீங்கள் அவசரப்படாமல் முடிவுகளை எடுங்கள். இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவக் காண்பீர்கள். நான் எனும் அகங்காரம் நம்மை அழித்து விடும். பிறரை காயப்படுத்தும். அதிலும் நமக்கு மிகவும் வேண்டியவர்கள், அன்புக்குரியவர்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா? நீங்கள் அகந்தை  இயல்பை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்டம் தேடி வரும் போது மகிழ்ச்சிக்கு சொல்லவும் வேண்டுமா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் மாதம் இது.  இந்த மாதம் உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

மேஷம் ராசி - காதல் மற்றும் உறவு 

திருமணமான மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் திருமண வாழ்க்கை சீராக செல்லும். குடும்பத்தின் தேவை அறிந்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவையை நீங்கள் நிறைவேற்றினால் குடும்ப அமைதிக்கு குறைவில்லை. காதலில் உள்ளவர்கள் தங்கள் காதலை தக்க வைத்துக் கொள்வார்கள். நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் என்றால் இன்னும் சிறிது காலம் பொறுமை காத்தால் நீங்களும் திருமண வாழ்வில் வெற்றி நடை போடலாம். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை

மேஷம் ராசி - நிதி

மேஷ ராசி அன்பர்களே!  இந்த மாதம் உங்கள் நிதி நிலையை சீராக அமைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு தரும் மாதமாக இருக்கும்.  எல்லா வகையிலும் நீங்கள் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களிடம் காணப்படும் திறமையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பணத்தை பெருக்கிக் கொள்ள ஒரு நல சந்தர்ப்பம் அமையும். அதற்கான முயற்சிகளை நீங்கள் தொடங்கலாம். பணத்தை ஆடம்பர விஷயங்களுக்காக செலவு செய்யாமல் சிறிது சிக்கனமாக இருக்க முயலுங்கள். நீங்கள் ஆன்மீக காரியங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.  

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன்  பூஜை

மேஷம் ராசி - வேலை

மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் சோம்பலை விரட்டி விட்டு சுறுசுறுப்பை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. திறமையாக செயல்பட  உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வதன் மூலம் உங்களால் பயனுள்ள வகையில் பணியாற்ற இயலும். பணியிடத்தில் பிரச்சினைகளை தவிர்க்க நீங்கள் நெளிவு சுளிவுகளை அறிந்து அதற்கு தக்க நடந்து கொள்வது நல்லது. ஏற்கனவே இருக்கும் பணியோடு இன்னும் சில பணிகள் உங்களுக்கு அளிக்கப்படலாம். நீங்கள் கூடுதல் நேரம் எடுத்து பணிபுரிவதன் மூலம் அவற்றை சிறப்பாக முடித்து அளிக்கலாம். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: கணேச  பூஜை

மேஷம் ராசி - தொழில் 

தொழில் செய்யும் மேஷ ராசி அன்பர்களே! காலத்திற்கேற்ற கோலம் என்பது போல நீங்கள் சமயத்திற்கு ஏற்றார்போல நடந்து கொள்ள வேண்டும். உங்கள் செயல்களை நடுநிலையான கதியில் நீங்கள் செய்ய முயலுங்கள். அதிக வேகமும் வேண்டாம். மெதுவாக செயல்படுவதும் வேண்டாம். தொழில் என்பது பணம் சம்பாதிக்கத்தான். அதில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். நீங்கள் வாங்கிய பணத்தை திருப்பித் தரும்போதும் உங்களுக்கு வர வேண்டிய பணத்தை வசூல் செய்வதிலும் கவனமாக இருங்கள். தனி மரம் தோப்பாகாது. நீங்கள் தனியாக எல்லா வேலைகளையும் செய்ய இயலாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கூட்டாளிகளையும் வேலையின் போது உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். 

மேஷம் ராசி - தொழில் வல்லுநர்

நீங்கள் எறும்பைப் போல சுறுசுறுப்பாக செயலாற்ற வேண்டும். நேரம் கிடைக்கும் போது உணவை சேமித்து வைக்கும் எறும்பு மழை காலத்தை சமாளிப்பது போல உங்கள் சுறுசுறுப்பான செயல் உங்கள் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். பணியிடத்தில் பிரச்சினைகளும் முரண்பாடுகளும் காணப்படும். முடிந்த வரை சமாளிக்கப் பாருங்கள். அல்லது இந்த மடம் இல்லாவிட்டால் சந்தை மடம் என்று வெளியேறுவதற்கான வாய்ப்புகளையும் நீங்கள் பெறலாம். பிரச்சினைகளுக்கு நடுவிலும் உங்களுக்கு சாதகமான விஷயம் என்னவென்றால் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு ஓரளவு கிடைக்கும். அதையே ஏனிப்படியாக்கி சிறப்பாக பணி செய்து முன்னேறுங்கள்.  

மேஷம் ராசி - ஆரோக்கியம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதை மேலும் சிறப்பாக ஆக்கவும், இருக்கும் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளவும்  நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை சீராகக் கடைபிடியுங்கள். உணவும் உடற்பயிற்சியும் ஆரோக்கியத்தின் உற்ற தோழர்கள். எனவே உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுங்கள். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

மேஷம் ராசி - மாணவர்கள்

மேஷ ராசி மாணவர்களே! இந்த மாதம் நீங்கள் படிப்பில் திருப்தியான நிலையைக் காண்பீர்கள். மேல்படிப்பு படிப்பதற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கல்வி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களே! போட்டி தேர்வுகளுக்கு சிறந்த முறையில் உங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கவனிப்புத் திறன் மேம்படும் காரணத்தால் நீங்கள் கல்வியில்  சிறந்து விளங்குவீர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி புரிவீர்கள். .

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    1,2,3,8,10,11,12,15,16,17,19,24,25,26,29,30
அசுப தினங்கள் : 4,5,6,7,9,13,14,18,20,21,22,23,27,28.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos