Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

2019 April Month’s Rasi Palan for Kumbam

March 6, 2019 | Total Views : 2,228
Zoom In Zoom Out Print

 கும்பம் ராசி - பொதுப்பலன்கள்

கும்ப ராசி நேயர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். தொட்டது துலங்கக் காண்பீர்கள்.  நீங்கள் நினைத்தது சட்டென முடியக் காண்பீர்கள். காலமும் நேரமும் கூடி வரும் போது காரியங்கள் யாவும் கச்சிதமாக முடியும். காரியங்கள் முடிந்தால் முன்னேற்றம் தானாக வந்து சேரும். உங்களின்  தனிப்பட்ட மற்றும் பொதுவான காரியங்கள் யாவற்றிலும் நீங்கள் முன்னேற்றத்தை  காண்பீர்கள். நீங்கள் நேர்மையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்களை செய்வீர்கள்.  நம்மைச் சுற்றி நாலு பேர் குறை கூற எப்பொழுதும் தயாராக இருப்பார்கள். இதெல்லாம் சகஜமான விஷயங்கள். அதற்கெல்லாம் நீங்கள் முக்கியத்துவம் அளித்து உங்களை வருத்தத்திற்குள்ளாக்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்கென லட்சியங்களை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்துச் செல்லுங்கள். மாற்றம் ஒன்று தான் மாறாதது. பண விஷயங்களிலும் மாற்றங்கள் இருக்கத் தானே செய்யும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். கடவுளை நம்பினோர் கைவிடப்படார். கடவுளை நம்பி முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக முன்னேற்றம் காண்பீர்கள் உங்கள் உடல் நலத்தில் சிறிது அக்கறை எடுத்து கவனித்துக் கொள்ளுங்கள்.  

கும்பம் ராசி - காதல்/திருமணம் 

இந்த மாதம் கணவன் மனைவி உறவி சிறப்பாக இருக்கக் காண்பீர்கள். முக்கியமான விஷயங்களில் நீங்கள் குடும்பத்தில் யாரிடமும் விவாதிக்காமல் முடிவை எடுங்கள். நாலு பேர் நாலு விஷயம் சொல்ல குழப்பம் தான் மிஞ்சும். எனவே யாரிடமும் கலந்து பேசி விவாதிக்காதீர்கள். உங்களுக்கு வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கீங்கன்னா உங்களுக்கு ஏற்ற துணை கிடைக்கும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை  

கும்பம் ராசி - நிதி

பண விஷயத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களிடம் பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். நீங்கள் சேமித்து வைத்த பணத்தின் மூலம் வருவாய் வரும். பணம் இருக்கு, பணம் புழங்குகிறது என்று அதிகமாக செலவு செய்து விடாதீர்கள். செலவுகளை ஒரு கட்டுக்குள் அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பணத்தை சேமியுங்கள். 

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: கேது  பூஜை

கும்பம் ராசி - வேலை

வெற்றி மீது வெற்றி வந்து  உங்களைச் சேரும் நேரம் இது. வேலையில் வெற்றி என்றால் முன்னேற்றத்தைப் பற்றி கூறவும் வேண்டுமா? அதிர்ஷ்டம் கதவை தட்டும் போது அதை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளத்  தயங்காதீர்கள்.  காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல நேரம் நமக்கு இருக்கும் போது நாலு பேரின் பாராட்டும் நம்மை நாடி வரத் தானே செய்யும். நீங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப்  பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நேரம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டிய நேரம். உங்கள் திறமையை நன்கு வளர்த்துக் கொள்ளுங்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி  பூஜை

கும்பம் ராசி - தொழில்

நீங்கள் தொழில் செய்றீங்கன்னா இந்த மாதம் நீங்கள் அனுகூலமான சூழ்நிலையை காண்பீர்கள். வியாபாரம் என்றால் போட்டி பொறாமை இருக்கத் தானே செய்யும். இந்த மாதம் நீங்கள் போட்டியாளர்களை ஜெயித்து வெற்றி காண்பீர்கள். சவாலே சமாளி தான். நீங்கள் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.  நீங்கள் கூட்டாக தொழில் செய்றீங்கன்னா கூட்டாளியாலே நன்மை தான். அவருடைய ஆதரவைப் பெறுவீங்க. இதெல்லாம் மனதிற்கு திருப்தியாக இருக்கும் நேரம். ஆனாலும் நீங்கள் எந்த வேலையை எப்ப எப்ப செய்யனும்னு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளித்து செய்தால் உங்களுக்கு நல்லது.

கும்பம் ராசி - தொழில் வல்லுநர் 

ஊரோடு ஒத்து வாழ்ந்தால் நல்லது என்பதை நன்கு அறிந்து கொண்டு நீங்கள் உங்களுடன் பணி புரிபவர்களுடன் ஒத்து வேலை செய்வீர்கள். பிறகென்ன. வேலைகள் யாவும் மட மடவென முடித்து  மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். பாராட்டு மட்டும் தானா? நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வும் கிடைக்கும். 

கும்பம் ராசி - ஆரோக்கியம்

இந்த மாதம் உங்கள் உடல் நிலை சுமாராகத் தான் இருக்கும். உடல் என்றால் சிறிய சிக்கல்கள் கூட வராமல் இருக்குமா என்ன? அதை சரி செய்ய நீங்கள் மருத்துவர்களின்  வழிகாட்டலை பின்பற்ற வேண்டும். வாயைக் கட்டினால் உடல் நலத்தை காக்கலாம். எண்ணெய் மற்றும் கார உணவுகளை உண்ணாதீர்கள்.  சிறந்த உணவுப் பழக்கம் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை 

கும்பம் ராசி - மாணவர்கள்

கும்ப ராசி மாணவர்களே! காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது. இப்பொழுது உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் சிறப்பாக முன்னேறலாம். ஆராயாமல் மேற்கொள்ளும் முடிவுகள் நமக்கு சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் மேல் படிப்பு படிக்க, வெளி நாடு செல்ல முயன்றால் யோசித்து முடிவெடுங்கள். கல்வியில் உங்கள் முயற்சி உங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தும்.  இந்த மாதம் நீங்கள்  தெய்வத்தின் அருளும் ஆசியும் கிடைத்து மகிழ்வாக இருக்கும் நேரம். உங்கள் முயற்சிகள் மூலம் நீங்கள் தடைகளைக் களைந்து முன்னேறுவீரகள். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    1,2,3,7,8,10,11,12,15,16,22,24,25,26,29,30
அசுப தினங்கள்: 4,5,6,9,13,14,17,18,19,20,21,23,27,28

banner

Leave a Reply

Submit Comment