Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

2019 April Month’s Rasi Palan for Kadagam

March 6, 2019 | Total Views : 2,107
Zoom In Zoom Out Print

கடகம் ராசி  - பொதுப்பலன்கள்

இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தான் வாழ்கை.  இந்த மாதம் நீங்கள் எதிர் கொள்ளவிருக்கும் சோதனை காலத்தை அவசரப்படாமல், பொறுமையுடன் எதிர்கொண்டு நடந்தால் வெற்றி காண்பீர்கள். சோதனை காலத்தில் மனம் அமைதியற்று அலை பாய்ந்து கொண்டிருப்பது இயல்பு தானே. இந்த சூழ்நிலையில் நீங்கள் வாகனங்களை ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. சூழ்நிலைக் கைதியாக நீங்கள் செய்லபடும் காரணத்தால் பிறர் கண்ணுக்கு நீங்கள் சுயநலவாதியாகத்  தென்படுவீர்கள். நீங்கள் எதையோ மறைப்பதை போல பிறர் உணர்வார்கள். இதையெல்லாம் தவிர்க்க நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சிறிது நேரம் கலந்து பேசி உங்கள் நேரத்தை அவர்களுடன் கழிக்க வேண்டும். நட்புறவோடு அவர்களுடன் பழக வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உங்களோடு நட்புறவுடன் பழகுவார்கள். இதன் மூலம் நீங்கள் அவர்களையும் உங்களை அவர்களும் நன்கு புரிந்து கொள்ள இயலும். அவர்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நீங்கள் பூர்த்தி செய்து அளிக்கலாம். இதனால் உங்களுக்கும் அவர்களுக்கும்  இடையிலான இணக்கம் மேம்படும். வாக்குவாதங்கள் குறையும். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப நீங்கள் வெற்றி காண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடல் நலத்தைப் பொறுத்தவரை சுமாரான உடல் நிலை காணப்படும். கண் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள்  ஏற்படுவதற்கான வாய்புகள் உள்ளது. 

கடகம் ராசி  - காதல் / திருமணம்

தம்பதியர்கள்  இந்த மாதம் தங்கள் வாழ்வில் சாதாரண பலன்களையே காண்பார்கள்.  நீங்கள் உங்கள் துணையிடம் எதிர்பார்த்தவைகள் யாவும் இப்பொழுது நிறைவேறும். படிப்படியாக உங்கள் உறவில் நெருக்கமும் இணக்கமும் மேம்படும். இதனை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உங்கள் துணையை அழைத்துக் கொண்டு வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தக்க  வரன்கள் அமைவதற்கு சற்று பொறுமை காக்க வேண்டும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை

கடகம் ராசி  - நிதி

நிதி நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள்  சாதாரண பலன்களை எதிர்பார்க்கலாம். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. கடன் பட்டார் நெஞ்சம் கலங்கும் என்று கூறுவார்கள். உங்கள் கலக்கம் முடிவடையும் காலம் இது. நீங்கள் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வருமானம் வருகிறதென்று நீங்கள் ஆடம்பர செலவுகளைச் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நீங்கள் நன்மை பெறும் காலம் இது.


நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சுக்கிரன்  பூஜை

கடகம் ராசி  - வேலை

அம்மா வீடு எங்கே, இன்னும் கொஞ்சம் தூரம் என்பது போல உங்கள் முயற்சிக்கான பலன்களை அடைய  நீங்கள் சிறிது தூரம் செல்லத்தான் வேண்டும். காலம் கனியும் வரை காத்திருங்கள். பலனைப் பெறுவீர்கள். யானைக்கு தும்பிக்கை போல மனிதனுக்கு நம்பிக்கை. நீங்கள் அதனை இழக்காமல் உறுதியாக செயல்பட வேண்டும். சிலந்தியைப் போல விடா முயற்சியுடன் செயல்பட்டால் ஒரு நாள் நீங்கள் நிச்சயம் வெற்றி காணலாம். உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைக்கவேண்டிய பலன்கள் தாமதமானாலும் நிச்சயமாக ஒரு நாள் கிடைக்கும். எனவே உண்மையாக வேலை செய்தாலும் பலனில்லையே என்று வருந்தாதீர்கள். பணியில் நேர்மையைக் கைவிட்டால் பிரச்சினைகள் தான் ஏற்படும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய்  பூஜை

கடகம் ராசி  - தொழில்

இந்த மாதம் நீங்கள் மந்தமாக செயல்படுவீர்கள். உங்கள் மந்த நிலை காரணமாக பணிகள் முடிய கால தாமதமாகும். கையில் இருக்கும் வேலையை முடித்தால் தானே வேறு வேலையை  மேற்கொள்ள முடியும். மந்த நிலையை நீக்கிக் கொள்ள நீங்கள் லட்சியத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். ஆனால் உங்கள் கவனமின்மை காரணமாக நீங்கள் சில எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரும். தொழில் ரீதியாக நீங்கள் சமூக வட்டாரத்தில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதன் மூலம் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். 

கடகம் ராசி  - தொழில்வல்லுநர்

இந்த மாதம் நீங்கள் கவனம் சிதறாமல் உங்கள் பணிகளை நிறைவேற்ற வேண்டும். பதறிய காரியம் சிதறிப் போகும். எனவே பதறாமல் அவசரப்படாமல் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். எண்ணித் துணிக கருமம் என்பது போல எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் யோசிக்காமல் செயல்படுவது கூடாது. எனவே நீங்கள் எந்த ஒரு காரியம் செய்வதாய் இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது.  இந்த மாதம் பணி நிமித்தமான பயணங்களை நீங்கள் மேற்கொள்ள நேர்ந்தாலும் அதன் மூலம் சிறந்த பலன்கள் காண்பது இயலாது. 

கடகம் ராசி  - ஆரோக்கியம்

இந்த மாதம் உங்களுக்கு ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதளவில் நீங்கள் தளர்வாக இருக்கும் காரணத்தால் உங்கள் உடலும் மனமும் சேர்ந்து பாதிப்படையும். இது உங்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு எல்லாவற்றையும் அதிகரிக்கச் செய்யும். எனவே உடலையும் மனதையும் நீங்கள் ஆரோக்கியமாய் வைத்துக் கொள்ள தியானம் பழகுங்கள். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை    

கடகம் ராசி  - மாணவர்கள்

கடக ராசி மாணவர்களே! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல நீங்கள் வெறும் கல்வி அறிவு போதாது என்று  பாடங்களைத் தவிர வேறு விஷயங்களைப் பற்றிய அறிவையும் பெற முயல்வீர்கள். இதற்கு உங்கள் பெற்றோரின் ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள்.  அவர்கள் உங்களுக்கு உற்ற துணையாக செயல்படுவது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். அதுவே நீங்கள் சிறப்பாக படிக்கவும் தேர்வுகளில் வெற்றி பெறவும் கைகொடுக்கும். வெளிநாடுகளுக்கு சென்று நீங்கள் மேற்கல்வி படிக்கும் வாய்ப்பினை பெறுவீர்கள். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    7,8,10,11,12,15,16,17,19,21,22,24,25,26.
அசுப தினங்கள்: 1,2,3,4,5,6,9,13,14,18,20,23,27,28,29,30.    

banner

Leave a Reply

Submit Comment