AstroVed Menu
AstroVed
search
search
x

பூஜை செய்ய இயலவில்லையா?

dateAugust 25, 2023

பூஜை செய்ய இயலவில்லையா?

யுக தர்மம் என்று உண்டு. வழிபாட்டு முறைக்கும் அதனை கடைபிடிக்க தர்மம் வலியுறுத்துகிறது. யுகங்கள் மொத்தம் நான்கு. அவை முறையே சத்ய யுகம், த்ரேதா  யுகம், துவாபர யகம் கலி யுகம். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமான வழிபாடு இருந்தது. யாகங்கள், தவம், இயற்கை வழிபாடு பூஜை என யுகத்திற்கு ஏற்றார் போல வழிபாட்டு முறைகளும் மாறிக் கொண்டே வந்தன. நாம் இப்பொழுது கலி யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நவீன விஞ்ஞான உலகத்தில் இயந்திரங்களோடு இயந்திரமாக இயந்திர கதியிலே  இயங்கிக் கொண்டு இருக்கிறோம். அத்தியாவசியத் தேவைகள் மட்டும் இன்றி ஆடம்பர தேவைகளுக்கும் சேர்த்து ஆசைப்பட்டு இயங்கிக் கொண்டு இருக்கிறோம்.

பொருள் சேர்ப்பதில் தான் நமது கவனம் முழுவதும் இருந்து கொண்டு இருக்கிறது. இதனால் நாம் பலவித துன்பங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு ஆளாகிறோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முதலில் நமது ஆசைகளை சீர் படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்மீக ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். இறை வழிபாடு பூஜை என்றெல்லாம் நம்மால் நேரத்தை செலவழிக்க முடிவதில்லை.  என்றாலும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதயும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கலியுகத்தில் “நாம ஜெபம்” செய்தாலே போதும் என்று நமக்கு வழி வகுத்துத் தந்திருக்கிறார்கள். இறைவன் எங்கும் நிறைத்து இருப்பவன். எதிலும் இறைவனைக் காணலாம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற சொலவடையும் உள்ளது. அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் கோவிலுக்கு செல்லவோ பூஜை செய்யவோ நேரம் இல்லை என்று வருந்தாதீர்கள். இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கிறான். அவனைக் காண தூய மனம் ஒன்றே போதுமானது.அவனை நினைத்தாலே போதும். வேண்டியது நிச்சயம் நிறைவேறும்.

நமது நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நாம் ஜெபம் போதுமானத. அது என்ன என்பதைப் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம். இதற்கு தனியாக பூஜை மற்றும் விரதம் எதுவும் தேவை இல்லை.

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, முடிந்தால் சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான, யாரும் தொந்தரவு செய்யாத ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில் ஒரு சிவப்பு நிற துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அதன்மேல் கிழக்கு முகம் பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது  கையில் ருத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை அல்லது துளசி மாலை உபயோகப் படுத்தலாம். சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சிங் நமசிவய” இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறும்பொழுது சுத்தமாக இருக்க வேண்டும். மது, மாமிசம், வெற்றிலை பாக்கு, உடல் உறவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இந்த முறையில் இந்த மந்திரத்தை தொடர்ந்து 21 நாட்கள் தொடர்ந்து ஜெபம் செய்யும் பொழுது, சிவபெருமான் நமக்கு பரிபூரணமாக அருள் புரிந்து, நம் மனதில் இருக்கக்கூடிய நியாயமான ஆசையை நிறைவேற்றுவார் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த மந்திரத்தை முறையாக கூறி உங்களுடைய நியாயமான ஆசையை நிறைவேற்ற வேண்டி சிவபெருமானை சரண் அடைந்தால்  அவர் கண்டிப்பாக உங்களின் ஆசையை நிறைவேற்றுவார். 

Tags Tags:

    Leave a Reply